பவன்ராவ் ஸ்ரீனிவாசராவ் பந்த் பிரதிநிதி

பிரித்தானிய இந்தியாவில் அவுந்த் சமஸ்தானத்தின் ஆட்சியாளர் மற்றும் ஓவியர் (1868-1951)

பவன்ராவ் ஸ்ரீனிவாசராவ் பந்த் பிரதிநிதி, (Bhawanrao Shriniwasrao Pant Pratinidhi) (அக்டோபர் 24, 1868 - ஏப்ரல் 13, 1951), பாலா சாகேப் பந்த் பிரதிநிதி அல்லது பவன்ராவ் பாலா சாகேப் பந்த் பிரதிநிதி என்றும் பிரபலமாக அறியப்பட்ட இவர், பிரித்தானியப் பேரரசு ஆட்சியின் போது பம்பாய் மாகாணத்தின் தக்காண முகமை பிரிவில், மராட்டிய சமஸ்தானமாக இருந்த அவுந்த் மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தார் (1909– 1947). [2]

பவன்ராவ் ஸ்ரீனிவாசராவ் பந்த் பிரதிநிதி
மெகர்பன் சிறீமந்த் ராஜா[1]
அவுந்தின் 9வது ராஜா [2]
ஆட்சிக்காலம்1909 – 1947
முன்னையவர்கோபாலகிருஷ்ண பரசுராம் "நானா சாகேப்"
பின்னையவர்பகவந்த்ராவ் பந்த் பிரதிநிதி "பாபு சாகேப்"
பிறப்பு24 அக்டோபர் 1868
இறப்பு13 ஏப்ரல் 1951
குழந்தைகளின்
பெயர்கள்
  • சிறீமந்த் திரையம்பக் பந்த் "ராஜா சாகேப்
  • பரசுராம் ராவ் பந்த் (அப்பா சாகேப்)
  • மாதவராவ் பந்த் (பாபு சாகேப்)
  • கிருஷ்ணா ராவ் பந்த் (அப்பா சாகேப்)
  • கங்காதர் ராவ் பந்த் (தாத்தையா சாகேப்)
  • கோபால் ராவ் பந்த் (பாலா சாகேப்)
மதம்இந்து சமயம்

சூரிய நமஸ்காரம், என்ற உடற்பயிற்சி வரிசையை கண்டுபிடித்ததற்காக இவர் அறியப்படுகிறார். இப்போது நவீன யோகக் கலையில் உடற்பயிற்சியாக இணைக்கப்பட்டுள்ளது.

1911 இல் ராஜா பவன்ராவ் ஸ்ரீனிவாசராவ்

இவர், ஸ்ரீனிவாசராவ் பரசுராம் "அண்ணா சாகேப்" 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு தேசஸ்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவர் சாத்தாரா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். புனேவில் உள்ள பாம்பே பல்கலைக்கழகத்தின் டெக்கான் கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்தார்.[3] இவர் நவம்பர் 4, 1909 இல் அவுந்த் மாநிலத்தின் ஒன்பதாவது ராஜாவாக அரியணை ஏறினார். பாலாசாகேப் ஒரு அறிஞராக இல்லாவிட்டாலும், தீவிர வாசிப்பாளராக இருந்தார். இவரது சமசுகிருதம் சகிக்கத்தக்க வகையில் நன்றாக இருந்தது. [3] மாநில நிர்வாகத்தை கற்றுக்கொள்வதற்காக 1895-1901 வரை தனது தந்தையின் தலைமைச் செயலாளராக பணியாற்றினார். [4]

அவுந்த் பரிசோதனை

அவுந்த் பரிசோதனையானது, இவரால் தொடங்கப்பட்ட கிராம அளவிலான சுயராஜ்யத்தின் ஆரம்பகால சோதனையாகும். அந்த நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக, இவர் தனது எழுபதாவது பிறந்தநாளில் 1938 இல் தனது மக்களுக்கு ஒரு சமஸ்தானத்தின் ஆட்சியாளராக தனது பெரும்பாலான அதிகாரங்களைத் துறந்தார்.[5] இந்த அறிவிப்பு ஜனவரி 1939 இல் மகாத்மா காந்தி மற்றும் மாரிஸ் பிரைட்மேன் ஆகியோருடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டது. காந்திக்கு, அவுந்தின் சிறிய, கிராமப்புற அடிப்படையானது, கிராம-ராச்சியம் அல்லது கிராமக் குடியரசுகள் பற்றிய இவரது நேசத்துக்குரிய யோசனையை சோதிக்கும் சாத்தியக்கூறுகளை பரிந்துரைத்தது; பரந்த அளவில், இந்த யோசனை கிராமத்தை ஒரு தன்னாட்சி மற்றும் தன்னிறைவு பெற்ற நிர்வாக மற்றும் பொருளாதார அலகாக கருதுகிறது.[6]

குடும்பம்

இவரது இரண்டாவது மகன் அப்பா சாகிப் பந்த் (1912-1992) பல நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றினார். சமூகத்திற்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக 1954 ஆம் ஆண்டு இந்திய அரசு அப்பாவுக்கு நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவித்தது.[7] இந்த விருதைப் பெற்ற முதல் நபராவார்.

கலை, இலக்கியம் மற்றும் உடற்கல்வி ஆகியவற்றின் புரவலர்

பவன்ராவ், சித்ர இராமாயணத்தை வெளியிட்டதோடு, புத்தகத்தில் உள்ள படங்களுக்கு விளக்கமும் அளித்தார். இந்த படம் இராமர் பட்டாபிசேகம்.

பவன்ராவ் ஒரு எழுத்தாற்றல் மிக்கவராகவும், சிறந்த ஓவியராகவும் ஒரு சிறந்த இசை கீர்த்தங்கராகவும் இருந்தார். இவர் ஸ்ரீபாத் தாமோதர் சத்வலேகர் உட்பட பல கலைஞர்களுக்கு ஆதரவாளராக இருந்தார். சத்வலேக்கரைத் தவிர, ஜம்சேத்ஜி ஜீஜேபாய் கலைப் பள்ளியைச் சேர்ந்த பல கலைஞர்களுக்கு இவர் ஆதரவை வழங்கினார். [8] 1935 இல் இந்தோரில் நடைபெற்ற மராத்தி சாகித்திய சம்மேளனத்திற்கு இவர் தலைமை தாங்கினார். பூனா சர்வஜனிக் சபாவின் தலைவராகவும் பணியாற்றினார்.[9]

பாலாசாகேப் ஒரு தீவிர உடற்கட்டமைப்பாளராகவும் இருந்தார். மேலும் ஐரோப்பிய தசை மனிதரான யூஜென் சாண்டோவின் (1867-1925) பின்தொடர்பவராகவும் இருந்தார்.[10] 1920 களில், இவர் சூரிய நமஸ்காரத்தின் வரிசைகளை பிரபலப்படுத்தினார். உத்தனாசனம் போன்ற பிரபலமான ஆசனங்கள் மற்றும் மேல்நோக்கி மற்றும் கீழ்நோக்கிய நாய் போன்ற இயக்கங்களில், யோகாவை உடற்பயிற்சியாக வடிவமைக்க உதவியது.[11] [12] [13] [14]

சிறீ பவானி அருங்காட்சியகம்

பாலாசாகேப் ஒரு ஆர்வமுள்ள சேகரிப்பாளராகவும், புரவலராகவும், கலை ஆணையராகவும் இருந்தார். அவுந்தில் உள்ள யாமை கோவிலின் மலையில் தனது கலைச் சேகரிப்பை வைத்து அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார். இந்த அருங்காட்சியகம் இந்தியாவின் முதல் கலை அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இது தொல்ல்லியல் கலைப்பொருட்களின் அருங்காட்சியகமாக இல்லாமல் ஒரு கலை அருங்காட்சியகமாக ஓர் இந்தியரால் அமைக்கப்பட்டது.

அருங்காட்சியக சேகரிப்பில் ரவி வர்மா உட்பட பல்வேறு பிரபலமான கலைஞர்களின் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் ஹென்றி மூரின் புகழ்பெற்ற "தாய் மற்றும் குழந்தை" கல் அமைப்பு ஆகியவை அடங்கும். ஜேஜே கலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களான எம். வி. துரந்தர்,[15] மற்றும் மாதவ் சத்வலேகர் [16] ஆகியோரின் பல்வேறு கலைப் படைப்புகளும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் 1926 இல் பாலாசாகேப் அவர்களால் நியமிக்கப்பட்ட மராட்டியப் பேரரசின் நிறுவனர் சிவாஜியின் வாழ்க்கையைப் பற்றிய துரந்தரின் ஓவியங்களின் தொகுப்பும் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வங்காளப் பள்ளியின் படைப்புகளும் உள்ளன. சேகரிப்பில் பல பிரபலமான மேற்கத்திய பாரம்பரிய சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் வார்ப்புகள் மற்றும் பிரதிகள் உள்ளன.[17] நவீனத்திற்கு முந்தைய காலகட்டத்தின் குறிப்பாக காங்க்ரா அல்லது பகாடி பாணியில் இந்திய ஓவியங்களின் சிறிய தொகுப்பும் உள்ளது.

இலக்கியப் பங்களிப்புகள்

  • சித்ர இராமாயணம் அல்லது பட இராமாயணம் (1916) - என்ற புத்தகத்தை வெளியிட்டு படங்களுக்கு விளக்கமும் அளித்தார்.[18]
  • ஆரோக்கியத்திற்கான பத்து-புள்ளி வழி: சூரிய நமஸ்காரங்கள் (1928) [19]
  • சூரிய நமஸ்காரமுலு (1928) தெலுங்கு மொழிபெயர்ப்பு.[20]
  • அஜந்தா (1932) [21]
  • சூர்ய நமஸ்கார் (1939) குசராத்தி மொழிபெயர்ப்பு.[22]
  • சூரிய நமஸ்காரங்கள் (1940) [23]
  • சூர்ய நமஸ்கார் (1973) இந்தி மொழிபெயர்ப்பு.[24]

இதனையும் காண்க

சான்றுகள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Balasaheb Pant Pratinidhi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்