பிரதாப் சந்திர சாரங்கி

பிரதாப் சந்திர சாரங்கி (ஆங்கில மொழி: Pratap Chandra Sarangi) (பிறப்பு: 4 ஜன 1955), என்பவர் ஒடிசா பாலேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதியாவார். இவர் தற்போது மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத் துறை இணை அமைச்சராக உள்ளார்.[1] பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். ஒடிசா சட்டமன்றத்தில் 2004 மற்றும் 2009 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நீள்கிரி தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார்.[2] 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[3] மீண்டும் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் அதே பாலேஸ்வர் தொகுதியிலிருந்து பாஜக சார்பாகப் போட்டியிட்டு 12956 வாக்குகள் வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த ரபீந்திர குமார் ஜெனாவை வென்றார்.[4]

பிரதாப் சந்திர சாரங்கி
நாடாளுமன்ற உறுப்பினர் பாலேஸ்வர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்ரபீந்திர குமார் ஜெனா
உறுப்பினர்: ஒடிசாவின் சட்டமன்றம்நீள்கிரி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2004–2014
முன்னையவர்பிரதிப்தா பாண்டா
பின்னவர்சுகந்தா குமார் நாயக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சனவரி 1955 (1955-01-04) (அகவை 69)
கோபிநாதபூர், பாலேஸ்வர், ஒடிசா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
முன்னாள் கல்லூரிஉட்கல் பல்கலைக்கழகம்

இந்திய அரசின் இணையமைச்சராக

இவர் 31 மே 2019 அன்று நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு & மீன் வளத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[5]

இளமைக் காலமும் கல்வியும்

1955 ஜனவரி மாதம் நான்காம் தேதி பாலேஸ்வர் மாவட்ட கோபிநாதபூரில் பிரதாப் சாரங்கி ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். 1975 இல் உட்கல் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பாலேஸ்வர் பகீர் மோகன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[6].

சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு ராமகிருஷ்ண மடத்தில் சன்னியாசம் பெறவிரும்பினார். ஆனால் இவரின் தாயாரைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கல்கத்தாவிலுள்ள ராமகிருஷ்ண மடம் இவரைத் திருப்பி அனுப்பியது. அதன்பின்னர் கிராமத்தில் பல்வேறு சமூகப்பணிகளை செய்து வருகிறார்.[7]

சமூகச் செயல்பாடு

பாலேஸ்வர் மற்றும் மயூர்பஞ்சு மாவட்டங்களிலுள்ள பழங்குடியினர் கிராமங்களில் சமர் கரா கேந்திரா என்ற பெயரில் பல பள்ளிகளைத் திறந்துள்ளார்.[8]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்