பிரிடேட்டர் (திரைப்படம்)

1987 ஆம் ஆண்டைய ஆங்கிலத் திரைப்படம்

பிரிடேட்டர் (Predator) என்பது 1987 ஆண்டைய அமெரிக்க  அறிபுனை அதிரடித் திரைப்படமாகும், இப்படமானது சகோதரர்களான ஜிம் மற்றும் ஜான் தோமஸ் ஆகியோரால் எழுதப்பட்டு, ஜான் மெக்டெர்னானால் இயக்கப்பட்டது.[4] இப்படத்தில் நடு அமெரிக்காவில் குறிப்பிடப்படாத ஒரு நாட்டில் கெரில்லா கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் பணயக் கைதிகளை மீட்கும் பணியில் ஈடுபடும் உயர்நிலை இராணுவ மீட்பு குழு தலைவராக ஆர்னோல்டு சுவார்செனேகர் நடித்துள்ளார்.[notes 1] இவரது குழுவை தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட வேற்றுலக உயிரி வேட்டையாடுகிறது. இந்த பிரிடேட்டர் கதையானது  1984 ஆம் ஆண்டு, ஹண்டர் என்ற பெரில் எழுதப்பட்டது. படப்பிடிப்பானது 1986 மார்ச்-சூன் காலகட்டத்தில் துவங்கியது, சிறப்பு உயிரினமானது ஸ்டான் வின்ஸ்டனால் வடிவமைக்கப்பட்டது.

பிரிடேட்டர்
Predator
இயக்கம்ஜான் மெக்டீர்னர்
தயாரிப்பு
  • லாரன்ஸ் கோர்டன்
  • ஜோயல் சில்வர்
  • ஜான் டேவிஸ்
கதை
  • ஜிம் தாமஸ்
  • ஜான் தோமஸ்
இசைஆலன் சில்வேஸ்ட்ரி
நடிப்பு
ஒளிப்பதிவுடொனால்ட் மாக் ஆல்பின்
படத்தொகுப்பு
  • ஜான் எஃப். லிங்க்
  • மார்க் ஹெல்ப்ரிச்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுசூன் 12, 1987 (1987-06-12)
ஓட்டம்107 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$15–18 மில்லியன்[2][3]
மொத்த வருவாய்$98.3 மில்லியன்[2][3]

படத்தின் தயாரிப்புச் செலவு சுமார் $ 15 மில்லியன் ஆகும். படத்தை 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனம் அமெரிக்காவில் 1987 சூன் 12 அன்று வெளியிட்டது, அதில் $ 59,735,548 வசூலித்தது.  துவக்கத்தில் இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், இந்தத் திரைப்படத்தின் மீதான விமர்சகர்களின் மனப்பான்மை நேர்மறை ஆனது, மேலும் இது பல "சிறந்த" பட்டியல்களில் இடம்பிடித்ததோடு, தற்போது எல்லா காலத்திற்குமான  சிறந்த அதிரடிப் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[5] இதன் மூன்று தொடர்ச்சிகளாக, பிரிடேட்டர் 2 (1990), பிரிடேட்டர்ஸ் (2010) மற்றும் The Predator (2018) ஆகிய படங்கள் வெளியாயின.

கதைச்சுருக்கம்

நடு அமெரிக்காவில் கெரில்லா போராளிகளிடம் உள்ள பணயக் கைதிகளை மீட்கப்போகும் அதிரடிப் படை வீரர்கள், அங்கே காட்டில் தொழில் நுட்டப்தில் மேம்பட்ட அயல்கிரக வாசியின் வேட்டைக்கு ஆளாகின்றனர். அதை அழிக்க கதாநாயகன் மேற்கொள்ளும் அதிரடி சாகசமே இதன் கதை.

குறிப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்