பிரேம் குமார் துமால்

இந்திய அரசியல்வாதி

பிரேம் குமார் துமால் (Prem Kumar Dhumal) (பிறப்பு 1944) இந்திய மாநிலம் இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ளார். 30 திசம்பர், 2007 அன்று பதவியேற்றார்.[1] இதற்கு முன்னர் மார்ச்சு 1998 முதல் மார்ச்சு 2003 வரை இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். 1989 ஆம் ஆண்டில் ஒன்பதாவது மக்களவைக்கும் 1991ஆம் ஆண்டு பத்தாவது மக்களவைக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அமீர்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2007ஆம் ஆண்டு மக்களவை இடைத்தேர்தலில் வெற்றி காணும் முன்னர் மாநில சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவராக பணியாற்றினார்.[2] அவ்வாண்டு (2007) திசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து முதலமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

பிரேம் குமார் துமால்
5வது இமாச்சலப் பிரதேச முதலமைச்சர்
தொகுதிபாம்சென்
பதவியில்
30 திசம்பர் 2007 – 25 திசம்பர் 2012
முன்னையவர்வீரபத்ர சிங்
பின்னவர்வீரபத்ர சிங்
பதவியில்
24 மார்ச்சு 1998 – 6 மார்ச்சு 2003
முன்னையவர்வீரபத்ர சிங்
பின்னவர்வீரபத்ர சிங்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 ஏப்ரல் 1944 (1944-04-10) (அகவை 80)
சமீர்பூர், ஹமிர்பூர் மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சீலா துமால்
பிள்ளைகள்இரு மகன்கள், அருண் & அனுராக்
வேலைஅரசியல்வாதி
தொழில்ஆசிரியர்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்