பிழல

கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்ட சிற்றூர்

பிழல (மலையாளம் : പിഴല) என்பது கேரளத்தின், கொச்சிக்கு அருகில் பெரியாறாறால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இது கேரளத்தின், எர்ணாகுளம் மாவட்டம், கண்ணையனூர் வட்டம், கடமக்குடி கிராம பஞ்சாயத்தில் உள்ளது. [1] பிழல என்ற பெயர் போர்த்துகீசிய சொற்களான பாஸ் நா இல்ஹாவிலிருந்து உருவானது, இதன் பொருள் 'அமைதித் தீவு'. கி.பி 1341 இல் பெரியாறில் உருவான பெரும் வெள்ளம் [2] காரணமாக பிழல தீவு இயற்கையாகவே உருவானது, [3] இந்த வெள்ளிமானது பண்டைய உலகின் மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்றான. [4] [5] முசிறித் [6] துறைமுகத்தை (இன்றைய கொடுங்கல்லூருக்கு அருகில் ) மூழ்கடித்தது.

பிழல
தீவு
ஆள்கூறுகள்: 10°02′55″N 76°15′30″E / 10.048705°N 76.258225°E / 10.048705; 76.258225
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
வட்டம்கண்ணையனூர்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்,
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
682027
தொலைபேசி குறியீட்டு எண்0484
மக்களவை தொகுதிஎர்ணாகுளம்
அருகில் உள்ள நகரம்எர்ணாகுளம்/கொச்சி
இணையதளம்www.pizhalapokkalitourism.com
பிழலவில் உள்ள பள்ளி
பிழலவில் உள்ள கத்தோலிக்க தேவாலயம்
மீன் வளர்ப்புக்கு தயாராகும் போக்காலி பண்ணை

வரலாறு

1341–1541

1341 இல், பெரியாறில் ஏற்பட்ட பெரு வெள்ளம் முசிறி துறைமுகத்தை அழித்தது. [7] புதிய துறைமுகம் பல தீவுகளுடன் கொச்சியில் உருவாக்கப்பட்டது. போர்த்துகீசிய படையெடுப்பு காலத்தில் இந்த தீவுக்கு பெயர் உண்டானது.

1741-1941

1859 ஆம் ஆண்டில், தி விகாரியேட் ஆஃப் வெராபோலியின் உத்தரவின் காரணமாக [8] பேராயர் பெர்னார்டோ (கியூசெப்) பாசினெல்லி, ஒ.சி.டி, [9] ஒ.சி.டி கத்தோலிக்க சமயப் பணியாளர்கள் [10] பிழலவில் முதல் பள்ளியை (பள்ளிக்கூடம்) கட்டினர்

நிலவியல்

பிழல வண்டல் மண்ணால் ஆனது. கி.பி 1341 இல் பெரியாற்றில் ஏற்பட்ட வெள்ள காலத்தில் மணலாலும், சேற்றாலும் வண்டல் உருவானது. பிழல கொச்சியின் வடக்குப் பக்கத்திலும் [11] கார்மலைட் மிஷனரிகளின் பழைய தலைமையகமான வரபுழாவின் தெற்குப் பக்கத்திலும் அமைந்துள்ளது. இந்த தீவு பெரியாறால் சூழப்பட்டுள்ளது. தீவின் பெரும்பகுதி ஈரமான நிலம் பொக்காலி [12] நெல் கழனிகாளாக உள்ளது. பிழல தீவானது தென் பிரதான நிலமும், "பாலியமுருத்" என்று அழைக்கப்படும் வடக்கு பிரதான நிலமும் உள்ளடக்கியது. [13]

கலாச்சாரம்

ஜெர்ரி அமல்தேவ் தனது சிறுவயது நாட்களில் பிழலவில் தங்கியிருந்தார். [14] அவரது மாமா எப்ஆர். ஜோசப் மூன்ஜப்பிலி பிழலாவில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் தேவாலய திருச்சபை பாதிரியாராக இருந்தார் [15]

2010 இக்கு முன்னர், பிழலவில் இரண்டு வார்டுகள் மட்டுமே இருந்தன, ஒன்று பிழல தெற்கு [16] மற்றொன்று பிழல வடக்கு. [17] பிழல வடக்கு வார்டில் பாலியம் துருத்தும் [18] சேர்க்கப்பட்டது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிழல&oldid=3587608" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்