பொட்டாசியம் அயோடேட்டு

வேதிச் சேர்மம்

பொட்டாசியம் அயோடேட்டு (Potassium iodate) என்பது KIO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் (K+) நேர்மின் அயனிகளும் அயோடேட்டு (IO3) எதிர்மின் அயனிகளும் 1:1 என்ற விகிதத்தில் சேர்ந்து பொட்டாசியம் அயோடேட்டு என்ற அயனிச் சேர்மம் உருவாகிறது. எத்தனால், நீர்ம அமோனியா, நைட்ரிக் காடி போன்ற கரைசல்களில் பொட்டாசியம் அயோடேட்டு கரையாது. பொட்டாசியம் அயோடைடு கரைசலில் இது கரையும். வெண்மை நிறத்தில் படிகத் தூளாக நெடியற்றதாக பொட்டாசியம் அயோடேட்டு காணப்படுகிறது.

பொட்டாசியம் அயோடேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் அயோடேட்டு
வேறு பெயர்கள்
அயோடிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பு
இனங்காட்டிகள்
7758-05-6 Y
ChemSpider22856 Y
EC number231-831-9
InChI
  • InChI=1S/HIO3.K/c2-1(3)4;/h(H,2,3,4);/q;+1/p-1 Y
    Key: JLKDVMWYMMLWTI-UHFFFAOYSA-M Y
  • InChI=1/HIO3.K/c2-1(3)4;/h(H,2,3,4);/q;+1/p-1
    Key: JLKDVMWYMMLWTI-REWHXWOFAL
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்23665710
வே.ந.வி.ப எண்NN1350000
  • [K+].[O-]I(=O)=O
UNIII139E44NHL Y
பண்புகள்
KIO3
வாய்ப்பாட்டு எடை214.001 கி/மோல்
தோற்றம்வெண்மையான படிகப் பொடி
மணம்நெடியற்றது
அடர்த்தி3.89 கி/செ.மீ3
உருகுநிலை 560 °C (1,040 °F; 833 K) (சிதைவடையும்)
4.74 கி/100 மி.லி (0 °செ)
9.16 கி /100 மி.லி (25 ° செ)
32.3 கி /100 மி.லி (100 ° செ)
கரைதிறன்பொட்டாசியம் அயோடைடு கரைசலில் கரையும்.
எத்தனால், நீர்ம அமோனியா, நைட்ரிக் காடி போன்றவற்றில் கரையாது.
−63.1•10−6செ.மீ3/மோல்
தீங்குகள்
R-சொற்றொடர்கள்R9, R22, R36, R37, R38
S-சொற்றொடர்கள்S35
தீப்பற்றும் வெப்பநிலைஎளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்பொட்டாசியம் குளோரேட்டு
பொட்டாசியம் புரோமேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள்சோடியம் அயோடேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பும் வினைகளும்

பொட்டாசியம் அயோடேட்டு ஒரு ஆக்சிசனேற்ற முகவர் என்பதால் எரியக்கூடிய பொருட்களுடன் தொடர்பு கொண்டால் அல்லது ஒடுக்கும் முகவர்களுடன் தொடர்பு கொள்ள நேரிட்டால் இது தீயை ஏற்படுத்தும். . பொட்டாசியம் தனிமத்தை கொண்ட பொட்டாசியம் ஐதராக்சைடு போன்ற காரத்துடன் அயோடிக் அமிலம் வினைபுரிவதால் பொட்டாசியம் அயோடேட்டு உருவாகிறது. உதாரணமாக,

HIO3 + KOH → KIO3 + H2O

செறிவூட்டப்பட்ட பொட்டாசியம் ஐதராக்சைடின் சூடான கரைசலுடன் அயோடினை சேர்த்து வினைபுரியச் செய்வதன் வழியாகவும் பொட்டாசியம் அயோடேட்டை தயாரிக்கலாம்.

3 I2 + 6 KOH → KIO3 + 5 KI + 3 H2O

அல்லது பொட்டாசியம் அயோடைடுடன் பொட்டாசியம் குளோரேட்டு, பொட்டாசியம் புரோமேட்டு அல்லது பொட்டாசியம் பெர்குளோரேட்டை சேர்த்து உருக்குதல் மூலமாகவும் பொட்டாசியம் அயோடேட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. கிடைக்கும் உருகலுடன் நீர் சேர்க்கப்பட்டு பொட்டாசியம் அயோடேட்டு படிகமாக்கல் மூலம் கரைசலிலிருந்து தனிமைப்படுத்தப்படுகிறது:[1]

KI + KClO3 → KIO3 + KCl

வெப்பம், அதிர்ச்சி, உராய்வு, எரியக்கூடிய பொருட்கள், ஒடுக்கும் பொருட்கள், அலுமினியம், கரிம சேர்மங்கள், கார்பன், ஐதரசன் பெராக்சைடு, சல்பைடுகள் .போன்றவை பொட்டாசியம் அயோடேட்டு கையாள்கையில் தவிர்க்க வேண்டிய சில பொருள்களின் பட்டியலாகும்.

பயன்கள்

சில நேரங்களில் அயோடின் குறைபாட்டைத் தடுக்க மேசை உப்பை அயோடினேற்றம் செய்ய பொட்டாசியம் அயோடேட்டு பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் ஈரமான சூழ்நிலையில் மூலக்கூறு ஆக்சிசனால், அயோடைடை அயோடினாக ஆக்சிசனேற்ற முடியும்.. அமெரிக்க நிறுவனங்கள் பொட்டாசியம் அயோடைடுடன் தயோசல்பேட்டுகள் அல்லது பிற ஆக்சிசனேற்றிகளை சேர்க்கின்றன. மற்ற நாடுகளில், உணவு அயோடினுக்கான ஆதாரமாக பொட்டாசியம் அயோடேட்டு பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் சில வகையான பாலில் ஒரு மூலப்பொருளாக உள்ளது. .பொட்டாசியம் புரோமேட்டை போலவே, பொட்டாசியம் அயோடேட்டும் எப்போதாவது ரொட்டி தயாரிக்கும் தொழிலில் மாவை பதப்படுத்தும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.

கதிரியக்கப் பாதுகாப்பு

தைராய்டில் கதிரியக்க அயோடின் திரட்டப்படுவதிலிருந்து பாதுகாக்க பொட்டாசியம் அயோடேட்டு பயன்படுகிறது, உடலில் அயோடின் வெளிப்படுத்துவதற்கு முன்பாகவே அயோடினின் நிலையான மூலத்திலிருந்து உடலுக்குத் தேவையான தேவையான அயோடினைப் பெற்று தன்னிறைவு அடையச் செய்ய இது உதவுகிறது[2]. கதிர்வீச்சு பாதுகாப்புக்காக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பொட்டாசியம் அயோடேட்டு (KIO 3 ) பொட்டாசியம் அயோடைடு (KI) சேர்மத்திற்கு ஒரு மாற்றாக பயன்படுகிறது, வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் பொட்டாசியம் அயோடைடின் சேமிப்பு நிலைத்தன்மை ஒரு மோசமான நிலையில் இருக்கும் .[3]. என்பது இதற்கான காரணமாகும். செப்டம்பர் 11 தாக்குதல்களைத் தொடர்ந்து அயர்லாந்து அரசாங்கமும் அனைத்து வீடுகளுக்கும் பொட்டாசியம் அயோடேட்டு மாத்திரைகளை கொடுத்தது[4][5]. பொட்டாசியம் அயோடேட்டை ஒரு தைராய்டு தடுப்பானாக பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கவில்லை. மேலும் இந்த பயன்பாட்டை ஊக்குவிக்கும் அமெரிக்க வலைத்தளங்களுக்கு எதிராக இந்த அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது[6][7].

அயர்லாந்தில் வீடுகளுக்கு வழங்கப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொட்டாசியம் அயோடேட்டு மாத்திரைகள் அடங்கிய திறக்கப்படாத பெட்டி.
கதிரியக்க அயோடினுக்கு எதிராகப் பரிந்துரைக்கப்படும் அளவுகள் [8]
வயதுKI மில்லி கிராம்களில்KIO3 மில்லி கிராம்களில்
12 வயதிற்கு மேல்130170
3 – 12 வயது6585
1 – 36 மாத குழந்தை3242
< 1 மாத குழந்தை1621

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்