பொல்லாத குத்தகையாளர் உவமை

பொல்லாத குத்தகையாளர் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமாண கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் மத்தேயு 21:33-46, மாற்கு 12:1-12, லூக்கா 20:9-19 என்ற வசனங்களில் காணப்படுகிறது. இது இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் கடைசி கிழமையில் கூறிய உவமையாகும். இது இயேசுவின் மரணத்தை முன்னறிவிக்கிறது.

உவமை

ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் செய்து தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டு விட்டு நெடு பயணம் மேற்கொண்டார். பருவகாலம் வந்ததும் குத்தைகையை அறவிடும் பொருட்டு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவரை நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறு ஒரு பணியாளரை அனுப்பி வைத்தார். அவர்கள் அவரையும் நையப்புடைத்து அவமதித்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மூன்றாம் முறையாக அவர் ஒருவரை அனுப்பினார். அவரையும் அவர்கள் காயப்படுத்தி வெளியே தள்ளினர். பின்பு திராட்சைத் தோட்ட உரிமையாளர், "நான் என்ன செய்வேன்? என் அன்பு மகனை அனுப்புவேன். ஒருவேளை அவனை அவர்கள் மதிப்பார்கள்" என எண்ணி. மகனை தோட்டத்துக்கு அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்கள் அவருடைய மகனைக் கண்டதும், "இவன்தான் சொத்துக்கு உரியவன் நாம் இவனைக் கொலை செய்வோம். அப்போது சொத்து நமதாகும் என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். எனவே அவர்கள் அவரைத் திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். அப்போது திராட்சைத் தோட்ட உரிமையாளர் ந்து அந்தத் தொழிலாளர்களை ஒழித்து விட்டு, திராட்சைத் தோட்டத்தை வேறு மனிதரிடம் குத்தகைக்கு விட்டார்.

பொருள்

தோட்டக்காரர் கடவுளாகவும், அவர் தோட்டத்துக்கு அனுப்பிய பணியாளர் இறைவாக்கினர் ஆகவும், தோட்டக்காரரின் மகன் இயேசு ஆகவும் உவமானப்படுத்தப் பட்டுள்ளது. கடவுள் பூமிக்கு பல இறைவாக்கினரை அனுப்பினார் ஆனால் மக்கள் அவர்களை புரக்கனித்தார்கள். கடவுள் இறுதியாக தமது மகனை அனுப்பினார் அனால் மக்களோ அவரை பிடித்து கொன்றனர். இதனால் கடவுள் அம்மக்களது அதிகாரத்தை பறித்து வேறு மனிதரிடம் கொடுப்பார் என்பது இதன் பொருளாகும்.

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்பு

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்