புதிய ஏற்பாடு

கிறித்தவ புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதி

புதிய ஏற்பாடு (New Testament) அல்லது கிரேக்க வேதாகமம்/விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும்.[1] முதல் பகுதி பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது. ஏற்பாடு என்னும் சொல் உடன்படிக்கை, ஒப்பந்தம் என்று பொருள்படும். கடவுள் பண்டை நாட்களில் தமக்கென ஒரு மக்களினத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்குத் தாம் கடவுளாக இருப்பதாகவும், அவர்கள் தமக்கு நெருக்கமான மக்களாக வாழ்ந்து, தம் கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும் அவர்களோடு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார் என்று யூத மக்களும் கிறித்தவ மக்களும் நம்புகின்றனர்.


இந்த ஒப்பந்தத்தைக் கிறித்தவர்கள் பழைய உடன்படிக்கை என்று அழைக்கின்றனர். ஏனென்றால் கடவுளின் மகனே இவ்வுலகில் இயேசு என்னும் மனிதராகப் பிறந்து, துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் அறையுண்டு இறந்தார் என்றும், மரணத்தை வென்று உயிர்பெற்றெழுந்தார் என்றும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கடவுள் மனித குலம் முழுவதோடும் ஒரு புதிய உடன்படிக்கையைச் செய்துகொண்டார் என்பது கிறித்தவர்களின் நம்பிக்கை.

எனவே, யூதர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், கிறிஸ்துவின் காலத்திற்கு முற்பட்டதுமான (தனாக்/Tanakh என்றழைக்கப்படுகிற) புனித நூல் தொகுப்பைக் கிறித்தவர் பழைய ஏற்பாடு என்கின்றனர். கிறிஸ்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.

பழைய ஏற்பாட்டைப் போலவே புதிய ஏற்பாடும் பல நூல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது பல எழுத்தாளர்களாலும் குழுமங்களாலும் கி.பி. 45க்குப் பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறித்தவ திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன [2].

புதிய ஏற்பாட்டின் மூல பாடம் (செப்துவசிந்தா)[3] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே விவிலியம் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது.

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் கிறித்தவத்தின் அடிப்படையாகும். புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் ஆரம்பித்து, அவருடைய போதனைகளையும் அவர் புரிந்த அதிசய செயல்களையும் எடுத்துணர்த்துவதோடு, அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றையும் விளக்குகிறது. தமது போதனையை எல்லா மக்களுக்கும் அறிவிக்க இயேசு தம் சீஷர்களை அப்போஸ்தலர்களை/திருத்தூதர்களை அனுப்பினார்.

பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் அடங்கிய பரிசுத்த வேதாகமம் (அ) திருவிவிலியம் என்னும் நூல் தொகுதி கிறித்தவ இறையியல் படிப்பின் ஆதாரமாகத் திகழ்கிறது. வெவ்வேறு கிறித்தவ சபைகளின் வழிபாட்டில் புதிய ஏற்பாடு மற்றும் பழைய ஏற்பாட்டுப் பகுதிகள் வாசிக்கப்பட்டு விளக்கப்படுகின்றன. இந்த புதிய ஏற்பாடும், பழைய ஏற்பாடும் இணைந்து தொகுக்கப்பட்ட பரிசுத்த வேதாகமத்தின் தாக்கம் சமயம், தத்துவம், மற்றும் அரசியல், இசை, ஓவியக் கலை, இலக்கியம், நாடகம் போன்ற பல துறைகளில் வெளிப்படுகின்றது.

புதிய ஏற்பாட்டு நூல்கள்

வில்லியம் டைன்டேலே (William Tyndale) எபிரேயம் கிரேக்க மொழிகளில் இருந்த புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்.

புதிய ஏற்பாட்டில் 27 தனிப்பட்ட சிறிய நூல்கள் காணப்படுகின்றன. இச்சிறு நூல்கள் அனைத்திலும் இயேசு மையகர்த்தாவாக இருக்கிறார். கிறித்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வரலாற்றைக் கூறும் நான்கு நற்செய்தி நூல்களும், இயேசுவின் சீடர்களான பேதுரு, பவுல் ஆகியோர் கிறித்தவ நற்செய்தியைப் பரப்பிய வரலாற்றை எடுத்துரைக்கிற திருத்தூதர் பணிகள் என்னும் ஒரு நூலும், படிப்பினை வழங்கும் இருபத்தொரு மடல்களும், மற்றும் ஒரு வெளிப்பாட்டு நூலும் அடங்கியுள்ளன. கி.பி. 50களில், எபிரேய மற்றும் கிரேக்க கலாச்சாரம் நிலவிய பகுதிகளில் பேச்சு மொழியாயிருந்த கொயினே கிரேக்கத்தில் புதிய ஏற்பாட்டு நூல்கள் எழுதப்பட்டன. திருவிவிலியத்தில் திருமுறையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நூல்களும் கி.பி. 150க்குள் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது.

நற்செய்திகள்

ஒவ்வொரு நற்செய்தி நூலும் இயேசுவின் இவ்வுலக வாழ்க்கையை கூறுகின்றது. அவற்றில் இயேசுவின் போதனைகளுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சபையால் ஏற்கப்பட்டுள்ள நான்கு நற்செய்தி நூல்கள் யாரால், எப்போது எழுதப்பட்டன என்பது பற்றித் துல்லியமாக அறிய இயலவில்லை. ஆயினும், கிறித்தவ மரபுப்படி,

இவற்றில் முதல் மூன்று நூல்களும் தமக்குள் உள்ளடக்கம், நடை போன்றவற்றில் மிகவும் ஒத்தவையாகும். எனவே அவை ஒத்தமை நற்செய்திகள் (Synoptic Gospels) என அழைக்கப்படுகின்றன. நான்காவது நூல் அவற்றிலிருந்து வேறுபட்ட பாணியில் உள்ளது.

திருத்தூதர் பணிகள்

திருத்தூதர் பணிகள் என்னும் பெயரால் வழங்கும் நூல் இயேசுவின் மரணத்துக்கு பின்னரான தொடக்க காலக் கிறித்தவரின் வாழ்வைச் சித்தரிக்கிறது. பேதுரு, பவுல் ஆகிய திருத்தூதர்கள் அறிவித்த படிப்பினையையும், பவுல் மேற்கொண்ட பயணங்களையும் இந்நூல் விரிவாகத் தருகிறது. இந்நூல் லூக்கா நற்செய்தியை எழுதியவராலேயே எழுதப்பட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். பவுல் கூறியவற்றை லூக்கா எழுதினார் என்பது மரபு.

புனித பவுல் எழுதிய திருமுகங்கள்

பொதுத் திருமுகங்கள்

வெளிப்படுத்தல்

யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

விதிகள்

நூல்கள்புரட்டஸ்தாந்துகத்தோலிக்கம்கிழக்கு மரபுவழிஆர்மேனிய மரபு
[N 1]
கொப்டிக்மரபுவழி தெவாஃடோசீரியா மரபு
நற்செய்திகள்[N 2]
மத்தேயுஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்[N 3]
மாற்கு[N 4]ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்[N 3]
Lukeஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்[N 3]
John[N 4][N 5]ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்[N 3]
Apostolic History
Acts[N 4]ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
Acts of Paul and Thecla
[N 6][4][5]
இல்லைஇல்லைஇல்லைNo
(early tradition)
இல்லைஇல்லைNo
(early tradition)
பொதுத் திருமுகங்கள்
JamesYes[N 7]ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
1 Peterஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
2 Peterஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்Yes[N 8]
1 John[N 4]ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
2 Johnஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்Yes[N 8]
3 Johnஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்Yes[N 8]
JudeYes[N 7]ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்Yes[N 8]
Pauline Epistles
Romansஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
1 Corinthiansஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
2 Corinthiansஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
Corinthians to Paul and
3 Corinthians
[N 6][N 9]
இல்லைஇல்லைஇல்லைNo − inc. in some mss.இல்லைஇல்லைNo
(early tradition)
Galatiansஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
Ephesiansஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
Philippiansஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
Colossiansஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
LaodiceansNo − inc. in some eds.
[N 10][6]
No − inc. in some mss.இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லை
1 Thessaloniansஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
2 Thessaloniansஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
HebrewsYes[N 7]ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
1 Timothyஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
2 Timothyஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
Titusஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
Philemonஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்
திருவெளிப்பாடு[N 11]
RevelationYes[N 7]ஆம்ஆம்ஆம்ஆம்ஆம்Yes[N 8]
Apostolic Fathers[N 12] and Church Orders[N 13]
1 Clement[N 14]No
(Codices Alexandrinus and Hierosolymitanus)
2 Clement[N 14]No
(Codices Alexandrinus and Hierosolymitanus)
Shepherd of Hermas[N 14]No
(Codex Siniaticus)
Epistle of Barnabas[N 14]No
(Codices Hierosolymitanus and Siniaticus)
Didache[N 14]No
(Codex Hierosolymitanus)
Ser`atä Seyon
(Sinodos)
இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைYes
(broader canon)
இல்லை
Te'ezaz
(Sinodos)
இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைYes
(broader canon)
இல்லை
Gessew
(Sinodos)
இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைYes
(broader canon)
இல்லை
Abtelis
(Sinodos)
இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைYes
(broader canon)
இல்லை
Book of the
Covenant 1
(Mäshafä Kidan)
இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைYes
(broader canon)
இல்லை
Book of the
Covenant 2
(Mäshafä Kidan)
இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைYes
(broader canon)
இல்லை
Ethiopic Clement
(Qälëmentos)[N 15]
இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைYes
(broader canon)
இல்லை
Ethiopic Didescalia
(Didesqelya)[N 15]
இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைYes
(broader canon)
இல்லை

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
New Testament
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

General references

Development and authorship

Greek

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புதிய_ஏற்பாடு&oldid=3836047" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை