மகாதேவன் கோயில், தம்ப்தி சுர்லா

இந்துக் கோயில்

மகாதேவன் கோவில், (Mahadeva Temple) கோவாவின் கதம்ப வம்ச பாணியில் பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு சைவக் கோயிலாகும். இது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து வழிபாட்டுச் செயலில் இது முக்கிய இடமாகும். இது கோவாவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மகாதேவன் கோயில்
மகாதேவன் கோயில், தம்ப்தி சுர்லா, கோவா
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்தம்ப்தி சுர்லா, கோவா
சமயம்இந்து சமயம்

வரலாறு

மகாதேவர் கோயிலில் இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் அறிவிப்பு பலகை.

இக்கோவில் தக்காண பீடபூமியின் மலைகளிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட கருங்கல்லால் கதம்ப வம்ச பாணியில் கைவினைக் கலைஞர்களைக் கொண்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. கோவாவில் கிடைக்கக்கூடிய கருங்கல்லில் கட்டப்பட்ட கட்டிடக்கலைக்கு மீதமிருக்கும் ஒரே மாதிரியாக இது கருதப்படுகிறது. இந்த இடத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள காடுகளின் உள்ளே தொலைதூரத்தில் இக்கோயில் இருப்பதால் இந்த கோயில் கவனிப்பாரின்றி இருக்கிறது.

மகாதேவன் கோயில், தம்ப்தி சுர்லா

இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலமான கர்நாடகாவின் அய்கொளெ கோயில்களை நினைவூட்டுகிறது. உட்புற கருவறைக்குள் ஒரு பீடத்தில் ஒரு இலிங்கம் (சிவபெருமானின் சின்னம்) பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெரிய இராச நாகம் உட்புறத்தின் மங்கலான ஒளியில் நிரந்தரமாக உள்ளது என உள்ளூர் கதை ஒன்று உள்ளது.

கோயிலில் கர்ப்பக்கிருகம், அந்தராளம், தூண்களைக் கொண்ட நந்தி மண்டபம் ஆகியவை கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. யானை உருவங்களும், கற்சங்கிலிகளின் சிக்கலான செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்ட நான்கு தூண்களும், இறுதியாக தாமரை மலர் போன்று செதுக்கப்பட்ட கல் உச்சியையும் கொண்டுள்ளன.[1][2]

அமைவிடம்

பகவான் மகாவீர் சரணாலயம் மற்றும் மொல்லெம் தேசிய பூங்காவின் வரைபடம், தம்ப்தி சுர்லாவைக் காட்டுகிறது

இந்த கோயில் 15 ° 26′20 ″ N 74 ° 15′8 ″ E பாகையில் தம்ப்தி சுர்லா என்ற சிறிய கிராமத்திற்கு அருகில் உள்ளது. இது போல்கோர்னெம் கிராமத்திற்கு கிழக்கே 13 கிலோமீட்டர் (8.1 மைல்) தொலைவில் உள்ளது. பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்காவின் வடகிழக்கு பகுதியில் மொலம் நகரில் அமைந்துள்ளது.

மகாதேவன் கோயில் தலைநகர் பனாஜியிலிருந்து சுமார் 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ளது. வடக்கிலிருந்து சிறிய சாலைகள் வழியாக 22 கிலோமீட்டர் (14 மைல்) தெற்கே முக்கிய நகரமான சத்தரி வட்டத்திலுள்ள வால்போய் நகரிலிருந்து அணுகலாம். கோவாவை கர்நாடக மாநிலத்துடன் இணைக்கும் அன்மோத் காட்டின் அடிவாரத்தில் இந்த கோயில் உள்ளது.

புகைப்படங்கள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்