மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன்

பறவை இனம்
கருந்தலை சிலம்பன்
சாத்புரா தேசிய பூங்காவில்
தென்னிந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கருந்தலை சின்னானின் குரல்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
துமேடியா
இனம்:
து. கைபெரித்ரா
இருசொற் பெயரீடு
துமேடியா கைபெரித்ரா
(பிராங்ளின், 1831)[2]
வேறு பெயர்கள்
  • மாலாகோசெரசு அல்போகுலாரிசு பிளைத். 1847[3]
  • திமாலியா கைபெரித்ரா பிராங்ளின், 1831

பழமையான இந்தியப் படைப்புகளில் செம்பழுப்பு வயிற்றுச் சிலம்பன் என்றும் அழைக்கப்படும் மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன் ( Dumetia hyperythra ) என்பது ஒரு சிறிய சிலம்பன் ஆகும். இது புதர்க்காடுகளில் சிறு குழுக்களாக உணவு தேடி அலையக்கூடியது. பழைய உலக பெரிய சிலம்பன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைப் போலவே, இவை மென்மையான பஞ்சுபோன்ற இறகுகளால் வகைப்படுத்தப்படும் குருவி வரிசை பறவைகளாகும். இந்திய துணைக்கண்டத்தில் மூன்று துணையினங்கள் உள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் காணப்படும் பரிந்துரைக்கப்பட்ட துணையினமான ஹைபிரித்ரா, மேற்கு இந்திய தீபகற்பத்தில் காணப்படும் துணையினமான அல்போகுலாரிஸ் ஆகியவை வெள்ளைத் தொண்டையுடன் ஒரே மாதிரியான பழுப்பு நிறத்தில் உள்ளன. இலங்கையில் உள்ள துணையினமான, பிலிப்சி, வெள்ளைத் தொண்டை உடையது, ஆனால் அடிப்பகுதி வெளிறியதாகவும் , பெரிய அலகு கொண்டதாகவும் உள்ளது. [4] [5]

விளக்கம்

சிட்டுக் குருவியை விட அளவில் சிறிய மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன் அதன் நீண்ட வட்ட முனை வால் உட்பட சுமார் 13 செ.மீ. நீளத்தில் சிறியதாக இருக்கும். இதன் வெளிப்புற வால் இறகுகள் நடுவில் உள்ள வால் இறகில் பாதி நீளமே இருக்கும். மேல் பகுதி அடர் பழுப்பாகவும், கீழ்ப்பகுதி பளபளக்கும் ஆரஞ்சு நிறத்திலும், உச்சந்தலை செம்பழுப்பு சாம்பல் நிறத்திலும், உடலின் மேற்பகுதி ஆலிவ் பழுப்பாகவும் இருக்கும். இதன் நெற்றியில் உள்ள இறகுகள் விரைப்பானதாக இருக்கும். தீபகற்ப இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் பறவைகளில் முதிர்ந்தவற்றின் தொண்டை வெண்மையாக இருக்கும். எவ்வாறாயினும், இலங்கையில் காணப்படும் பறவைகளின் அலகு பெரியதாகவும், கனமானதாகவும், வெளிறிய அடிப்பகுதியைக் கொண்டதாகவும் இருக்கும். [6]

அபு மலையில் உள்ள பறவைகளின் உச்சந்தலையில் கஷ்கொட்டை நிற இறகுகளுடனும் வெள்ளைத் தொண்டையுடனும் காணப்படுகின்றன. இது அபுயென்சிஸ் என்ற துணையினமாக முன்மொழியப்பட்டது, ஆனால் பெரும்பாலும் அல்போகுலாரிசு துணையினத்தில் சேர்க்கப்படுகிறது. [7] கண்டலா மலைத்தொடரில் இருந்து முதலில் விவரிக்கப்பட்ட நவரோய் என மற்றொரு மாறுபட்ட வடிவ சிலம்பன் பொதுவாக அல்போகுலாரிஸ் துணையினத்தில் சேர்க்கப்படுகிறது. [8]

பரவலும் வாழ்விடமும்

வட-மத்திய இந்தியாவிலிருந்து இலங்கை வரை மஞ்சட்பழுப்பு வயிற்றுச் சிலம்பன் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் புதர்க் காடு மற்றும் உயரமான புல்வெளி ஆகும். இலங்கையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1500 மீ உயரமுள்ள மலைகளில் காணப்படுகிறது. [9]

நடத்தை

மஞ்சட்பழுப்பு வயிற்று சிலம்பன் புல்லிடையேயும் புதர்களின் அடியிலும் ஊந்து முதல் பத்து வரையிலான சிறு கூட்டமாக அலைந்து அமைதியின்றித் திரியக்கூடியது. உதிர்ந்து காய்ந்த இலைகளிடையே புழுபூச்சிகளை இலைகளைத் திருப்பித் தேடும் இது மனிதர்கள் வருவதைக் கண்டதும் சிதறி ஓடி மறைந்து கொள்ளும். மீண்டும் குரல் கொடுத்து ஒன்றோடு ஒன்று விரைவில் சேர்ந்து கொள்ளும். இவை மே முதல் செப்டம்பர் வரை பெரும்பாலும் மழையின் போது இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அடர்த்தியான புதர்களின் அடியில் கூடு கட்டுகின்றன. பந்து போன்ற கூட்டினைப் புல்லாலும் மூங்கில் இலைகளாலும் நுழைவாயிலோடு கட்டி மென் புற்களால் மெத்தென்று ஆக்கும். சாதாரணமாக மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடுகின்றன. பெற்றோர் இருவரும் முட்டைகளை அடைகாக்கின்றன. [10] பெரும்பாலான சிலம்பன்களைப் போலவே, இதுவும் வலசை போவதில்லை. காரணம் இதன் குறுகிய வட்டமான இறக்கைகள் மற்றும் பறக்கும் திறன் குறைவு ஆகியவை ஆகும். தென்பகுதியில் வாழும் பறவைகள் சனவரி-பிப்ரவரி மாதங்களில் முன்கூட்டியே இறகுதிர்ப்பு செய்கின்றன. இது முக்கியமாக பூச்சிகளை உண்கிறது ஆனால் முள்ளிலவு மற்றும் எரித்ரினா பூக்களில் இருந்து மலர்தேனை உண்கிறது. புதர்களில் உணவு தேடும் போது இவை ஸ்வீச், ஸ்வீச். என மென் குரலில் கொடுத்து ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டபடி இருக்கும். தெலுங்கில் "பன்றிப் பறவை" என்ற பொருளில் பந்தி ஜிட்டா என்ற பெயரானது, பன்றிகளைப் போல அடர்ந்த புதர்க்காடுகளில் உணவு தேடும் இதன் பழக்கத்தைக் குறிக்கிறது.

செங்குயில்கள் தங்கள் முட்டைகளை மஞ்சட்பழுப்பு வயிற்று சிலம்பன்களின் கூடுகளில் இடுவதாக அறியப்படுகிறது. [11]

காட்சியகம்

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dumetia hyperythra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்