மனிதரில் குருதிக் குழு முறைமைகள்

அனைத்துலக குருதி மாற்றீட்டுக்கான சமூகம் (ISBT - International Society of Blood Transfusion) மனிதரில் 39 குருதி குழு முறைமைகள் (Blood Group Systems) இருப்பதாக அடையாளம் கண்டுள்ளது[1]. அவற்றில் முக்கியமானவையாக ஏபிஓ குருதி குழு முறைமையும், ஆர்எச் குருதி குழு முறைமையும் கருதப்படுகின்றன. இந்த ஏபிஓ, ஆர்எச் பிறபொருளெதிரியாக்கிகளைப் போன்ற வேறும் பல பிறபொருளெதிரியாக்கிகள் குருதிச் சிவப்பணுவின் மென்சவ்வின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. எடுத்துக் கட்டாக ஒரு குருதியானது ஏபிஓ, ஆர்எச் நேர் நிலையை (Rh positive) கொண்டிருக்கும் அதேவேளையில், MN நேர் (MNS system), K நேர் (Kell system), Lea or Leb நேர் (Lewis system) ஆகவும் இருக்கலாம். அனேகமான இந்த குழு முறைமைகளின் பெயர், முதன் முதலில் எந்த ஒரு நோயாளியில் குறிப்பிட்ட பிறபொருளெதிரி அறியப்பட்டதோ, அவரின் பெயரில் குறிப்பிடப்பட்டது.

அனைத்துலக குருதி மாற்றீட்டுக்கான சமூகத்தின் வரைவிலக்கணப்படி, குருதிக் குழு முறைமையானது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிறபொருளெதிரிகள், ஒரு குறிப்பிட்ட மரபணு இருக்கையில் (locus) அமைந்த எதிருருக்களாலோ, அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குறுக்குப் பரிமாற்றம் (crossover) மூலம் மீண்டிணைதல் (recombination) நிகழும் சாத்தியமற்ற, மிகவும் நெருக்கமான அமைந்த அமைப்பொத்த/ சம (homologous) மரபணுக்களாலோ கட்டுப்படுத்தப்படுவதாக இருக்கும்[2].

ஏபிஓ குருதி குழு முறைமை

இந்த முறைமையில் குருதியானது A, B, AB, O என்னும் நான்கு முக்கியமான வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஆனாலும் குருதி மாற்றீட்டை சிக்கலாக்கும் தன்மை கொண்ட 200 க்கும் மேற்பட்ட வேறுபட்ட சிறிய வகைகள் இருப்பதாக அறியப்படுகின்றது. இவை அரிதான குருதி வகைகளாகக் கருதப்படுகின்றன. பொதுவாக இவை ஓரிரு எழுத்துக்களால் + அல்லது - குறியீட்டுடன் பெயரிடப்படும். ஆனாலும் சிலர் அதிக எழுத்துக்களால், விபரமாகக் குறிப்பிட்டு நீண்ட பெயர்களாகவும் அடையாளப்படுத்துவர்.

ஆர்எச் குருதி குழு முறைமை

இந்த முறைமையில் குருதியானது ஆர்எச்-நேர் (Rh+), ஆர்எச்-எதிர் (Rh-) என்னும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஆர்எச்-நேர் என்பது குருதிச் சிவப்பணுக்களில் சில பிறபொருளெதிரியாக்கிகள் இருப்பதையும், ஆர்எச்-எதிர் என்பது அந்த பிறபொருளெதிரியாக்கிகள் இல்லாத நிலையையும் குறிக்கின்றது.

குருதிக் குழு முறைமைகள்

International Society of Blood Transfusion (ISBT) எண்முறைமையின் பெயர்முறைமையின் அடையாளம்பிறபொருளெதிரித்தூண்டி (epitope) அல்லது காவி (carrier), குறிப்புநிறப்புரியின் எண்
001ஏபிஓ குருதி குழு முறைமை / ABOABOCarbohydrate (N-Acetylgalactosamine, galactose). A, B and H antigens mainly elicit IgM antibody reactions, although anti-H is very rare, see the Hh antigen system (Bombay phenotype, ISBT #18).9
002MNS பிறபொருளெதிரியாக்கி முறைமைMNSGPA / GPB (glycophorins A and B). Main antigens M, N, S, s.4
003P பிறபொருளெதிரியாக்கி முறைமைP1கிளைக்கோகொழுமியம். Antigen P1.22
004ஆர்எச் குருதி குழு முறைமை / RhRHProtein. C, c, D, E, e antigens (there is no "d" antigen; lowercase "d" indicates the absence of D).1
005Lutheran பிறபொருளெதிரியாக்கி முறைமைLUProtein (member of the immunoglobulin superfamily). Set of 21 antigens.19
006Kell பிறபொருளெதிரியாக்கி முறைமைKELGlycoprotein. K1 can cause hemolytic disease of the newborn (anti-Kell), which can be severe.7
007Lewis பிறபொருளெதிரியாக்கி முறைமைLECarbohydrate (fucose residue). Main antigens Lea and Leb - associated with tissue ABH antigen secretion.19
008Duffy பிறபொருளெதிரியாக்கி முறைமைFYProtein (chemokine receptor). Main antigens Fya and Fyb. Individuals lacking Duffy antigens altogether are immune to malaria caused by Plasmodium vivax and Plasmodium knowlesi.1
009Kidd பிறபொருளெதிரியாக்கி முறைமைdbMHCProtein (urea transporter). Main antigens Jka and Jkb.18
010Diego பிறபொருளெதிரியாக்கி முறைமைDIGlycoprotein (band 3, AE 1, or anion exchange). Positive blood is found only among East Asians and Native Americans.17
011Yt பிறபொருளெதிரியாக்கி முறைமைYTProtein (AChE, acetylcholinesterase).7
012XG பிறபொருளெதிரியாக்கி முறைமைXGGlycoprotein.X
013Scianna பிறபொருளெதிரியாக்கி முறைமைSCGlycoprotein.1
014Dombrock பிறபொருளெதிரியாக்கி முறைமைDOGlycoprotein (fixed to cell membrane by GPI, or glycosyl-phosphatidyl-inositol).12
015Colton பிறபொருளெதிரியாக்கி முறைமைCOAquaporin 1. Main antigens Co(a) and Co(b).7
016Landsteiner-Wiener பிறபொருளெதிரியாக்கி முறைமைLWProtein (member of the immunoglobulin superfamily).19
017Chido பிறபொருளெதிரியாக்கி முறைமைCH/RGC4A C4B (complement fractions).6
018Hh பிறபொருளெதிரியாக்கி முறைமைHCarbohydrate (fucose residue).19
019XK (புரதம்) / KxXKGlycoprotein.X
020Gerbich பிறபொருளெதிரியாக்கி முறைமைGEGPC / GPD (Glycophorins C and D).2
021Cromer பிறபொருளெதிரியாக்கி முறைமைCROMGlycoprotein (DAF or CD55, regulates complement fractions C3 and C5, attached to the membrane by GPI).1
022Knops பிறபொருளெதிரியாக்கி முறைமைKNGlycoprotein (CR1 or CD35, immune complex receptor).1
023Indian பிறபொருளெதிரியாக்கி முறைமைINGlycoprotein (CD44 adhesion function?).11
024OK பிறபொருளெதிரியாக்கி முறைமை / OkOKGlycoprotein (CD147).19
025Raph பிறபொருளெதிரியாக்கி முறைமைMER2Transmembrane glycoprotein.11
026JMH பிறபொருளெதிரியாக்கி முறைமைJMHProtein (fixed to cell membrane by GPI).6
027Ii பிறபொருளெதிரியாக்கி முறைமைIBranched (I) / unbranched (i) polysaccharide.6
028Globoside பிறபொருளெதிரியாக்கி முறைமைGLOBGlycolipid. Antigen P.3
029GIL பிறபொருளெதிரியாக்கி முறைமைGILAquaporin 3.9
030Rh- இணைந்த கிளைக்கோ புரதம்RHAGRh-associated glycoprotein.6

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்