யுக்தா முகி

இந்திய நடிகை, விளம்பரத் தாரகை

யுக்தா முகி (Yukta Mookhey) (பிறப்பு அக்டோபர் 7, 1979 பெங்களூரூ, இந்தியா) ஓர் இந்திய நடிகையும், விளம்பரத் தாரகையும் ஆவார். 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில் வெற்றியாளரும் ஆவார். முன்னதாக 1999 ஆம் ஆண்டில் அவர் பெமினா இந்திய அழகியாகவும் முடிசூட்டப்பட்டுள்ளார்.

யுக்தா முகி
2013 ஆம் ஆண்டில் முகி
பிறப்புயுக்தா இந்தர்லால் முகி
அக்டோபர் 7, 1979 (1979-10-07) (அகவை 44)
பெங்களூர், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்வி. ஜி. வாசே கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி[1]
பணிவிளம்பரத் தாரகை, நடிகை
உயரம்1.85மீ
வாழ்க்கைத்
துணை
பிரின்சு டுளி
(2008–2014)
அழகுப் போட்டி வாகையாளர்
செயல் ஆண்டுகள்1999–தற்போது வரை
முக்கிய
போட்டி(கள்)
பெமினா உலக அழகி 1999
(இரண்டாமிடம்)
(ஒளிப்படத்திற்கேற்ற தன்மையுள்ள அழகி)
உலக அழகி 1999
(வெற்றியாளர்)
(உலக அழகி - ஆசியா & ஓசேனியா)

முகி இந்தியாவில் சிந்து இன குடும்பத்தில் பெங்களுருவில் பிறந்தார்.  முகி தனக்கு ஏழு வயது வரும் வரை துபாயில் வளர்ந்தார். முகியின் குடும்பம் 1986 ஆம் ஆண்டு மும்பைக்குத் திரும்பினர். முகியின் தாயார் அரூணா, மும்பை, சாந்தா குரூசில் ஒரு அழகு நிலையம் நடத்தினார். முகியின் தந்தை ஒரு துணி நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகப் பணிபுரிந்தார்.[2][3]

பள்ளிப்படிப்பிற்குப் பிறகு, யுக்தாமுகி வி. ஜி. வாசே கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் விலங்கியல் படித்தார். மேலும், கணினி அறிவியலில் ஒரு பட்டயப்படிப்பையும் முடித்தார். இவற்றோடு கூட இந்துஸ்தானி இசையையும் மூன்றாண்டுகள் பயின்றார்.[4]

உலக அழகி

1999 ஆம் ஆண்டு, திசம்பர் 4 ஆம் நாள் இலண்டன் ஒலிம்பியாவில் நடைபெற்ற 49 ஆவது உலக அலகி அணிவகுப்பில் மற்ற நாடுகளிலிருந்து பங்குபெற்ற 93 போட்டியளர்களை தோற்கடித்து யுக்தாமுகி உலக அழகி 1999யாக முடிசூட்டப்பட்டார். அவர் 1966 ஆம் ஆண்டில் இரெய்டா ஃபாரியா, 1994 ஆம் ஆண்டில் ஐஸ்வர்யா ராய் மற்றும் 1997 இல் டயானா ஹெய்டன் ஆகியோரின் வரிசையில் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்ட நான்காவது இந்தியப் பெண்மணி ஆவார்.

தொழில் வாழ்க்கை

முகி திரைத்துறையில் 2001 ஆம் ஆண்டு இயக்குநர் எழில் இயக்கத்தில் அஜீத் குமார், ஜோதிகா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வரும் பாத்திரமாக அறிமுகமானார். பாலிவுட் என அழைக்கப்படும் இந்தி திரையுலகில் தனது அறிமுகப்படமான பியாசா மூலம் 2002 ஆம் ஆண்டில் அறிமுகமானார். இத்திரைப்படம் வசூல்ரீதியாக வெற்றியடையவில்லை.[5] 2005 ஆம் ஆண்டில், இவர் மேம்சாப் மற்றும் லவ் இன் ஜப்பான் ஆகிய இந்தி திரைப்படங்களிலும் 2006 ஆம் ஆண்டில், கத்புடலி எனும் இசைக் காணொலியிலும் நடித்துள்ளார்.

2011 இல் நடைபெற்ற தெல்லி சக்காரின் திறமையாளர் விருதுகள் நிகழ்வில் யுக்தா முகி

தனிப்பட்ட வாழ்க்கை

2008 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 அன்று மும்பையில், கிராண்ட் மராத்தாவில் நடைபெற்ற பெரிய நிகழ்வில் 2008, முகி பிரின்ஸ் டுளி என்பவருடன் மணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டார். மணமகன் நியூயார்க்கில் வசிக்கின்ற நிதி ஆலோசகரும் வணிகரும் ஆவார்.[6] 2008 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் நாளன்று நாக்பூர் குருத்வாராவில் நடைபெற்ற சீக்கிய முறைப்படி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வரவேற்பு நிகழ்வும் நடந்தது.[7] இத்தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

2013 ஆம் ஆண்டு சூலையில் தனது கணவருக்கு எதிராக முகி குடும்ப வன்முறை புகார் ஒன்றை இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498A (கொடுமை மற்றும் துன்புறுத்தல்) மற்றும் பிரிவு 377 (இயல்புக்கெதிரான பாலுறவு) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார்.[8] சூன் 2014 இல் தம்பதியினர் ஒத்திணக்கமான மணவிலக்கு கிடைக்கப்பெற்றனர்.[9][10]

அறப்பணிகள்

யுக்தா முகி சமூக மற்றும் அறம் சார்ந்த நோக்கங்களுடன் ஏழை மக்கள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களுக்கான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.[11] 2010 ஆம் ஆண்டில் இவர் கண்தானம் செய்வதற்கு உறுதி அளித்துள்ளார்.[12] யுக்தா முகி மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோர் கண்தானம் வழங்க முன்வந்துள்ள சில பாலிவுட் பிரபலங்களில் உள்ளடங்குவர்.[13][14]

அரசியல்

2004 ஆம் ஆண்டில், முகி பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரானார்.[15][16]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யுக்தா_முகி&oldid=3944628" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்