ராவ் இந்தர்ஜித் சிங்

இந்திய அரசியல்வாதி

ராவ் இந்தர்ஜித் சிங் (Rao Inderjit Singh, பிறப்பு: 11 பிப்ரவரி 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.[1][2] இவர் 30 மே 2019 முதல் திட்டமிடுதல் மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக உள்ளார்.

ராவ் இந்தர்ஜித் சிங்
இணை அமைச்சர் (தனி பொறுப்பு)
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை
பதவியில் உள்ளார்
பதவியில்
30 மே 2019
முன்னையவர்டி. வி. சதானந்த கௌடா
பதவியில்
26 மே 2014 – 9 நவம்பர் 2014
முன்னையவர்சிறீகாந்த் குமார் ஜெனா
பின்னவர்விஜய் குமார் சிங்
வேதியியல் மற்றும் உரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
3 செப்டம்பர் 2017 – 30 மே 2019
பின்னவர்மன்சுக் எல். மந்தவியா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2009
முன்னையவர்தொகுதி உருவாக்கப்பட்டது
தொகுதிகுருகிராம்
பதவியில்
2004–2009
முன்னையவர்சுதா யாதவ்
பின்னவர்தொகுதி நீக்கப்பட்டது
தொகுதிமகேந்திரகிராம்
பதவியில்
1998–1999
முன்னையவர்ராவ் ராம்
பின்னவர்சுதா யாதவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 பெப்ரவரி 1950 (1950-02-11) (அகவை 74)
ரேவாரி, பஞ்சாப், இந்தியா
(தற்போது அரியானா, இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்மனிதா சிங்
பிள்ளைகள்பாரதி ராவ்
ஆர்த்தி ராவ்
வாழிடம்(s)ரேவாரி, அரியானா, இந்தியா
கல்விஇந்து கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம்
முன்னாள் கல்லூரிசட்டம்
வேலைஅரசியல்வாதி & சமூக சேவகர், விவசாயம், வழக்கறிஞர்
இணையத்தளம்http://www.raoinderjitsingh.in/
As of 28 மார்ச், 2009
மூலம்: [Biodata]

இளமைக் காலம்

இவர் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ராவ் பைரேந்திர சிங்கின் மகனாவார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரான ராஜா ராவ் துலா ராம் என்பவரின் சந்ததியினர் ஆவார்.[3]

அரசியல் வாழ்க்கை

அரியானா சட்டமன்றம்

இவர் 1977 ஆம் ஆண்டு முதல் நான்குமுறை அரியானா சட்டமன்றத்திலிருந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982 முதல் 1987 வரை அவர் உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத்திற்கான மாநில அமைச்சராக இருந்தார்.[4] பின்னர் 1998-1999, 2000-2004 மற்றும் 2004-2009 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1991 முதல் 1996 வரை சுற்றுச்சூழல், வனத்துறை, மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சராகவும், 2004 முதல் 2006 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகவும் மற்றும் 2006 முதல் 2009 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

வெற்றிபெற்ற தேர்தல்கள்

  • 1998: 12வது மக்களவைத் தேர்தல் (மகேந்திரகிராம் தொகுதி)
  • 2004: 14வது மக்களவைத் தேர்தல் (மகேந்திரகிராம் தொகுதி)
  • 2009: 15வது மக்களவைத் தேர்தல் (குருகிராம் தொகுதி)[5]
  • 2014: 16வது மக்களவைத் தேர்தல்[6]
  • 2019: 17வது மக்களவைத் தேர்தல் (குருகிராம் தொகுதி)

இணை அமைச்சர்

இவர் மே 2019 ஆம் ஆண்டு முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பதவி வகிக்கின்றார்.[7]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்