லிம்போபோ ஆறு

மத்திய தெற்கு ஆப்பிரிக்க ஆறு

லிம்போபோ ஆறு Limpopo River) என்பது தென்னாப்பிரிக்காவில் உருவாகி, [1] மொசாம்பிக் வழியாக கிழக்கு நோக்கி பாய்ந்து இந்தியப் பெருங்கடலில் கலக்கும் ஒரு ஆறாகும். லிம்போபோ என்ற சொல்லானது ரிவோம்போ (லிவோம்போ / லெபோம்போ) என்பதிலிருந்து உருவானது, ஹோசி ரிவோம்போ தலைமையிலான சோங்கா குடியேறி மக்கள் குழு, மலைப்பகுதிகளில் குடியேறியது. இதனால் அந்த பகுதிக்கு அவர்களின் தலைவரின் பெயர் இடப்பட்டது. இந்த ஆறு சுமார் 1,750 கிலோமீட்டர்கள் (1,087 mi) நீளமானது. இதன் வடிநிலமானது 415,000 சதுர கிலோமீட்டர்கள் (160,200 sq mi) அளவு கொண்டது. ஒரு ஆண்டில் இந்த ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து சராசரியாக அளவிடப்பட்ட வெளியேற்றும் நீரானது 170 மீ 3 / வி (6,200 கியூ அடி / வி) ஆகும். [2] சாம்பசி ஆறுக்கு அடுத்து, இந்தியப் பெருங்கடலில் மிகுதியாக நீரை வெளியேற்றும் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய ஆறு லிம்போபோ ஆகும்.[சான்று தேவை]

1498 ஆம் ஆண்டில் ஆற்று முகத்துவாரத்தில் நங்கூரமிட்ட வாஸ்கோ ட காமா இந்த ஆற்றைக் கண்ட முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இதற்கு எஸ்பிரிட்டு சாண்டோ ஆறு என்று பெயரிட்டார். அதன் கீழ் போக்கை 1868-69ல் செயின்ட் வின்சென்ட் விட்செட் எர்ஸ்கைன் ஆராய்ந்தார், மேலும் கேப்டன் ஜே.எஃப். எல்டன் 1870 இல் அதன் நடுப் போக்கு பாதையில் பயணித்தார்.

நில வரலாற்றுக் காலப்பகுதியில் லிம்போபோ ஆற்றின் வடிகால் பகுதி குறைந்துள்ளது. இது சாம்பேசி ஆற்றின் மேல்புறம் லிம்போபோ ஆற்றில் நீர்வெளியேறிய பிற்பகுதி ப்ளியோசீன் அல்லது கடையூழிக்கடுத்த ஈற்றயலடுக்கு காலம் வரை நிகழ்ந்தது. [3] நீர்வடிகால் பெல்லையின் மாற்றம் என்பது இன்றைய லிம்போபோ ஆற்றின் வடக்கே மேற்பரப்பை உயர்த்திய எபிரோஜெனிக் இயக்கத்தின் விளைவாக ஜம்பேசி ஆற்றில் நீர் பிரிந்துசெல்கிறது. [4]

போக்கு

ஆறானது ஒரு பெரிய வளைவாக பாய்கிறது, முதலில் வடக்கிலும் பின்னர் வடகிழக்கிலும் கோணல்மானலாக பாய்ந்து, பின்னர் கிழக்கிலும் மற்றும் இறுதியாக தென்கிழக்கிலும் பாய்கிறது. இது சுமார் 640 கிலோமீட்டர்கள் (398 mi) நாட்டு எல்லையாக செயல்படுகிறது , தென்னாப்பிரிக்காவை தென்கிழக்கில் போட்சுவானாவிலிருந்து பிரிக்கிறது. அதேபோல வடமேற்கிலும், வடக்கிலும் சிம்பாப்வேவை பிரிக்கிறது. அதன் இரண்டு துணை ஆறுகளான மரிகோ ஆறு மற்றும் முதலை ஆறு ஆகியவை இணையும், அந்த நேரத்தில் இந்த ஆற்றிற் பெயரானது லிம்போபோ ஆறு என்று மாறுகிறது. தெற்கு ஆபிரிக்காவின் உள்நாட்டுப் பகுதியிலிருந்து இந்த ஆறு விழுந்து பாய்வதால் இதில் பல விரைவோட்டங்கள் உள்ளன.

நோட்வேன் ஆறு லிம்போபோவின் முக்கிய துணை ஆறாகும். இது போட்ஸ்வானாவில் உள்ள கலகாரி பாலைவனத்தின் விளிம்பில் தோன்றி வடக்கு-கிழக்கு திசையில் பாய்கிறது. [5] லிம்போபோவின் முக்கிய துணை ஆறான ஆலிஃபண்ட்ஸ் ஆறு (யானை ஆறு) ஆண்டுக்கு சுமார் 1,233 மில்லியன் கன மீட்டர் நீரை அளிக்கிறது. [6] ஷாஷே ஆறு, எம்சிங்வேன் ஆறு, முதலை ஆறு, மெவெனெசி ஆறு மற்றும் லுவூ ஆறு ஆகியவை இதன் பிற முக்கிய துணை ஆறுகளாகும். [7]

தென்னாப்பிரிக்காவின் வடகிழக்கு மூலையில் ஆற்றின் எல்லையாக குருகர் தேசியப் பூங்கா உள்ளது.

மொசாம்பிக்கின் துறைமுக நகரமான சாய்-சாய், ஆற்று முகத்துவாரத்துக்கு அருகில் உள்ளது. ஆலிஃபண்ட்ஸுக்கு கீழே, ஆறு நிரந்தரமாக கடலில் சென்று சேருகிறது. இருப்பினும் இப்பகுதியில் உள்ள மணல் திட்டானது மிகுதியான அலைகளைத் தவிர பெரிய கப்பல்கள் உள்நுழைவதைத் தடுக்கிறது.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லிம்போபோ_ஆறு&oldid=3316965" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்