வரித்தலை வாத்து

வாத்து இனம்
வரித்தலை வாத்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
அனாடிடே
துணைக்குடும்பம்:
அன்செரினினே
சிற்றினம்:
அன்செரினி
பேரினம்:
அன்சர்
இனம்:
அ. இண்டிகசு[1]
இருசொற் பெயரீடு
அன்சர் இண்டிகசு
(ஜான் லேதம், 1790)
வரித்தலை வாத்து பரம்பல்
வேறு பெயர்கள்

யூலேபெயா இண்டிகா

அன்செர் இண்டிகசு

வரித்தலை வாத்து (Bar-headed Goose)(அன்சர் இண்டிகசு), அல்லது பட்டைத்தலை வாத்து[2]மத்திய ஆசியாவின் மலை ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும் வாத்து இனமாகும்; மிக அதிக உயரத்தில் பறந்து செல்லும் பறவையாக இது இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[3]

உடலமைப்பு

மயிலை நிறமும்[4] பழுப்பு நிறமும் கூடிய உடலும் வெண்ணிற தலையும் கழுத்தும் கொண்டு விளங்கும் வாத்து; பிடரியில் காணப்படும் இரு கரும்பட்டைகள் இதன் பெயர்க்காரணமாக அமைந்தன. ஆண் வாத்திற்கும் பெண் வாத்திற்கும் வேறுபாடு காணப்படுவதில்லை [5]. அளவில் நடுத்தர வாத்து என்ற பிரிவிலுள்ள பட்டைத்தலை வாத்து, 71–76 செ.மீ (28–30 அங்குலம்) மொத்த நீளமும் 1.87–3.2 கிலோ கிராம் (4.1–7.1 lb) எடையும் கொண்டது.[6]

சிறப்பியல்புகள்

  • உலகின் மிக உயரத்தில் பறக்கக்கூடிய பறவையினங்களுள் ஒன்று.[7][8] அவ்வாறு பறக்கும் போது, அவைகள் காற்றில் மிதந்துச் செல்வதில்லை. மாறாக இறக்கைகளை, பலமாக அடித்துக்கொண்டு பறக்கிறது. இதனால் உடல் சூடு அதிகமாகி, உயரத்திலிருக்கும் குளிர்ச்சியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
  • பூமியை விட்டு மேலே செல்ல,செல்ல உடலுக்குத் தேவைப்படும் உயிர்க்காற்று(oxygen) மிகவும் குறைவாகவே கிடைக்கும். ஏனெனில், அங்குள்ள வான்சூழலில் 30% உயிர்க்காற்றே இருக்கும். அக்குறைந்த காற்றை, சிறப்பாக பயன்படுத்த, இதன் உடலின் குருதி தந்தூகிகள் சிறப்பான முறையில் அமைந்துள்ளதால், அத்தந்தூகிகள் அப்பறவைக்கு தேவைப்படும் உயிர்க்காற்றை, செவ்வனே உடல்முழுவதும் சீராகத் தருகின்றன. இதனால் பறவையால் 7மணி நேரத்திற்கும் மேலேயே, தொடர்ந்து பறக்க முடிகிறது. அதாவது 1000 கி.மீ.களுக்கும் மேலே, எங்கும் நில்லாமல் தொடர்ந்து பறக்கிறது.
  • இவைகள் மணிக்கு 80 கி.மீ.வேகத்தில் பறக்கின்றன. நல்ல காற்றோட்டச் சூழல் இருப்பின், அதன் பறக்கும் வேகம்160கி.மீ. வரை எனக் கணக்கிட்டுள்ளனர்.[9]

சூழலியல்

இதன் வெயிற்கால வாழ்விடம் மலை ஆறுகளாகும்; அங்குள்ள சிறு புல் பூண்டுகள் இதன் உணவாகும். நடு ஆசிய நாடுகளான மங்கோலியா, கசகசுதான், கிரிகிசுதான், தசிகிசுதான், மேற்கு சீனா [10], இந்தியாவில் லதாக், திபெத் [5] ஆகிய இடங்களில் பட்டைத்தலை வாத்துகள் இனப்பெருக்கம் செய்கின்றன. தமிழ்நாட்டில் கூந்தன்குளம், கோடியக்கரை போன்ற இடங்களுக்கு இந்தப் பறவைகள் ஆண்டுதோறும் வருகின்றன.[11] இவற்றின் எண்ணிக்கையை அறிவது மிகவும் கடினம் ஏனெனில், இவை 2,500,000 km2 (970,000 sq mi) மேல், தங்கள் வாழ்விடங்களைக் கொண்டுள்ளன[10]

மேற்கோள்கள்

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வரித்தலை_வாத்து&oldid=3771402" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்