வாரணாசியிலுள்ள படித்துறைகள்

வாரணாசியில் பாயும் கங்கை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள படித்துறைகள்

வாராணசியிலுள்ள படித்துறைகள் (Ghats in Varanasi) என்பது உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசியில் பாயும் கங்கை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள படித்துறைகள் பற்றியதாகும். நகரில் 88 படித்துறைகள் உள்ளன. பெரும்பாலானவை புனிதக் குளியலும், சடங்குகளும் நடைபெறும் இடமாகும். அதே நேரத்தில் மணிகர்ணிகா படித்துறையும், அரிச்சந்திரன் படித்துறையும் இறந்த உடல்களை தகனம் செய்யும் இடங்களாக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகின்றன.[1]

அகல்யா படித்துறை, வாராணசி
சேத் சின் படித்துறை, வாராணசி
கேதார் படித்துறை, வாராணசி

18-ஆம் நூற்றாண்டில், நகரம் மராட்டிய ஆட்சியின்கீழ் இருந்தபோது, பெரும்பாலான படித்துறைகள் புனரமைக்கப்பட்டன.[2] தற்போதைய படித்துறைகளுக்கு மராட்டியர்கள், சிந்தியர்கள், ஓல்கர்கள், போன்சலேக்கள் பேஷ்வாக்கள் ஆகியோரின் ஆதரவு இருந்தது. பல படித்துறைகள் புராணக்கதைகளுடனோ அல்லது புராணங்களுடனோ தொடர்புடையவை. அதே நேரத்தில் பல படித்துறைகள் தனியாருக்கு சொந்தமானவை. படித்துறைகளின் குறுக்கே பிரபலமான காலை நேர படகுச் சவாரி பார்வையாளர்களை ஈர்க்கிறது.

ஒரு படித்துறையின் மீது அதிகாலை தியானத்தில் ஈடுப்பட்டுள்ள ஒருவர்
சூரிய உதயத்தில் வாராணசி படித்துறை

உலகப் பாரம்பரியக் களம்

யுனெஸ்கோ நிறுவனம் மே 2021-இல் இந்தியாவின் ஆறு பண்பாட்டு களங்களை உத்தேச உலகப் பாரம்பரியக் களங்களாக தேர்வு செய்துள்ளது. வாராணசியிலுள்ள படித்துறைகளும் அதில் ஒன்றாகும்.[3][4][5][6]

படித்துறைப் பட்டியல்

அசி படித்துறை முதல் ஆதி கேசவா படித்துறை வரை உள்ள படித்துறைகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

பகுதி 1

அசி படித்துறை முதல் பிரயாக் படித்துறை வரை (1–41)

எண்.படித்துறைப் பெயர்படம்
1அசி படித்துறை
2கங்கா மகால் படித்துறை
3லாசி படித்துறை
4துளசி படித்துறை
5பாதானி படித்துறை
6சானகி படித்துறை
7ஆனந்தமாயி படித்துறை
8வச்சராசா படித்துறை
9ஜெயின் படித்துறை
10நிசாத் படித்துறை
11பிரபு படித்துறை
12பஞ்சகோட்டா படித்துறை
13சீத் சிங் படித்துறை
14நிரஞ்சனி படித்துறை
15மகாநிர்வாணி படித்துறைnot available
16சிவாலா படித்துறை
17குலாரிய படித்துறை
18தண்டி படித்துறை
19அனுமன் படித்துறை
20பிரசினா (பழைய) அனுமன்னா படித்துறை
21கர்நாடகா படித்துறை
22அரிச்சந்திரன் படித்துறை
23லாலி படித்துறை
24விசயநகரம் படித்துறை
25கேதார் படித்துறை
26சவுக்கி (சாக்கி) படித்துறை
27காமேசுவரா/ சோமேசுவரா படித்துறை
28மானசரவோர் படித்துறை
29நராட் படித்துறை
30ராச படித்துறை
31கோரி படித்துறை
32பாண்டே படித்துறை
33சர்வேசுவரா படித்துறை
34திக்பாட்டியா படித்துறை
35சவுசாதி படித்துறை
36ராணா மகால் படித்துறை
37தார்பாங்கா படித்துறை
38முன்சி படித்துறை
39அகல்யபாணிப் படித்துறை
40சீத்தாள படித்துறை
41தசவசுவமேத படித்துறை

பகுதி 2

பிரயாக் முதல் ஆதி கேசவ் படித்துறை வரை (42–84)

எண்படித்துறை பெயர்படம்
42பிரயாக் படித்துறை
43இராசேந்திரப் பிரசாத் படித்துறை.
44மன் மந்தீர் படித்துறை
45திரிபுரா பைரவி படித்துறை
46மிர் (மீர்) படித்துறை
47புதா/நாய படித்துறையஜ்னேஸ்வர படித்துறையின் பழைய தளம்
48நேபாளி படித்துறை
49லலிதா படித்துறை
50பாலி/ உமரோகிர்/ அம்ரோகாஅ படித்துறை
51ஜல்சென் (ஜலசேய்) படித்துறை
52கிக்ரி படித்துறை
53மணிகர்னிகா படித்துறை
54பஜிரோ படித்துறை
55சிந்தியா படித்துறை
56சங்காத்தா படித்துறை
57கங்கா மகால் படித்துறை(II)
58போன்சலே படித்துறை
59நயா படித்துறை1822-ஆம் ஆண்டின் பிரின்செப்பின் வரைபடத்தில், இது குலேரியா செகட் என்று பெயரிடப்பட்டது
60கணேசா படித்துறை
61மேத்தா படித்துறைமுந்தைய படித்துறையின் ஒரு பகுதியாக இருந்தது, ஆனால் வி. எஸ். மேத்தா மருத்துவமனை (1962) கட்டப்பட்ட பின்னர், இது பிந்தைய பெயரால் அறியப்படுகிறது.
62இராமா படித்துறை
63ஜத்தாரா படித்துறை
64குவாலியர் ராசா படித்துறை
65மங்கள கவுரி படித்துறை (பாலா படித்துறை)
66வேணிமாதவா படித்துறைபஞ்சகங்க படித்துறையின் ஒரு பகுதி மற்றும் விந்து மாதவ படித்துறை என்றும் அழைக்கப்படுகிறது
67பஞ்சகங்கை படித்துறை
68துர்க்கா படித்துறை
69பிரம்மா படித்துறை
70புண்டி பராகோட்டா படித்துறை
71ஆதி சீத்தாள படித்துறைThis is an extended part of the preceding ghat
72லால் படித்துறை
73அனுமன்னகார்தி படித்துறை
74கயா படித்துறை
75பத்ரி நாராயண படித்துறை
76திரிசான் படித்துறை
77கோலா படித்துறை12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் படகுப் குழாமாகப் பயன்படுத்தப்பட்டது மற்றும் பல களஞ்சியங்களுக்காகவும் (தங்கம்) அறியப்பட்டது
78நந்தீசுவர/நந்துப் படித்துறை
79சாகா படித்துறை
80தெல்லிஆனலா படித்துறை
81நயா/புதுப் படித்துறை18-ஆம் நூற்றாண்டின் போது படித்துறை பகுதி வெறிச்சோடியது (பூட்டா), ஆனால் பின்னர் புதுப்பிக்கப்பட்டது. இந்த படித்துறை முன்பு பூட்டா என்றும் பின்னர் நயா என்றும் அழைக்கப்பட்டது.
82பிரகலாதா படித்துறை
83இராச படித்துறை (பைசாசூர் இராசபடித்துறை)/லார்ட் துப்ரின் பாலம்/மாளவியா பாலம்
84ஆதி கேசவன் படித்துறை
ரவிதாசர் படித்துறை
நிசாத படித்துறை (பிரகலாதவிலிருந்து பிரிந்தது)
அரசிப் படித்துறை
சிறீ பஞ்ச அக்னி அக்காரா படித்துறை
தாதகாட் படித்துறை/புத்தா படித்துறை

பிரபலமான படித்துறைகள்

புராணங்களின்படி ஆற்றங்கரையில் ஐந்து முக்கிய படித்துறைகள் உள்ளன; அவை புனித நகரமான காசியுடன் இணைந்திருப்பதால் முக்கியமானது: அசி படித்துறை, தசவசுவமேத படித்துறை, மணிகர்ணிகா படித்துறை, அரிச்சந்திரன் படித்துறை, ஆதி கேசவ படித்துறை.[7] .

அசி படித்துறை

அசி படித்துறை வாராணசியின் தெற்கே அமைந்துள்ளது. இது மிகவும் பிரபலமானது. பனாரசு இந்து பல்கலைக்கழகத்திற்கு மிக நெருக்கமான முக்கிய படித்துறைகளில் இதுவும் ஒன்றாகும். அசி படித்துறையானது அசி ஆற்றிலிருந்து தனது பெயரை பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோதியின் தனது பிறந்தநாளை முன்னிட்டு 17 செப்டம்பர் 2015 அன்று தானியங்கு தண்ணீர் எந்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.[8]

தசவசுவமேத படித்துறை

வாரணாசியின் தசவசுவமேத படித்துறையில் கங்கை ஆரத்தி

தசவசுவமேத படித்துறை என்பது காசி விசுவநாத் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது இந்து புராணக் கதைகளின்படி, இப்படித்துறையில் பிரம்மா அசுவமேத யாகம் செய்யும் போது பத்து குதிரைகளை (அசுவம்) பலியிட்டார் என்றும் மற்றொரு புராணக்கதையின்படி பிரம்மா இங்கு படித்துறை அமைத்து சிவபெருமானை எழுந்தருளச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.[9][10] தினமும் மாலையில் "அக்னி பூஜை" (நெருப்புக்கு வழிபாடு) நிகழ்ச்சியில் சிவன், கங்கை ஆறு, சூரியன், அக்னி (நெருப்பு) மற்றும் முழு பிரபஞ்சத்திற்கும் அர்ச்சகர்கள் குழுவால் அர்ப்பணிப்பு செய்யப்படுகிறது.

மணிகர்ணிகா படித்துறை

இங்குள்ள படித்துறையில் மணிகர்ணிகா என்றழைக்கப்படும் குளம் உள்ளது. பார்வதி தேவியின் தொலைந்து போன காதணியை (மணிகர்ணிகா) தேடும்போது சிவபெருமான் இக்குளத்தைத் தோண்டியதாக நம்பப்படுகிறது.[11][12][13][14]

அரிச்சந்திரன் படித்துறை

வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றாங்கரையில் உள்ள அரிச்சந்திரன் படித்துறையில் சடலம் எரியூட்டப்படும் காட்சி

புராணக் கதையில் வரும் அயோத்தி நாட்டு மன்னன் அரிச்சந்திரன், விதி வசத்தால் இங்கு அமைந்த மயானத்தில் பிணம் எரிக்கும் வெட்டியானாக ஏவல் செய்த காரணத்திற்காக இப்படித்துறைக்கு அரிச்சந்திரன் படித்துறை எனப் பெயராயிற்று.[15]. காசியில் இறப்பவர்களை அரிச்சந்திர படித்துறையில் தகனம் செய்தால் மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் பரம்பரை நம்பிக்கை.[16] வாரணாசியில் இந்துக்களின் சடலங்களை எரியூட்டப்படும் இரண்டு படித்துறைகளில் இதுவும் ஒன்று.

மத நம்பிக்கை

மணிகர்ணிகா படித்துறையில் இறந்த உடல்கள் எரிக்கப்படுகிறது.

வாரணாசியில் இறந்து, இப்படித்துறையில் தனது சடலம் எரிக்கப்பட்டால் வீடுபேறு அடைவது உறுதி என்று இந்துக்களில் பலர் நம்பிக்கையுடன் உள்ளனர். இப்படித்துறையில் நாள் முழுவதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். திறந்தவெளி சுடுகாடாக இருக்கும் இப்படித்துறையில் சிதை மூட்டப்படுவதைக் காண சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர். முக்கியமானவர்கள் இறந்தபின்னர், விஷ்ணுவின் பாதச்சுவடுகளைக் கொண்டுள்ளதாக நம்பப்படும் கல் பலகையில் எரிக்கின்றனர். சாக்த சமயத்தினர்களுக்கு, மணிகர்ணிகா படித்துறை முக்கியமானது.[17] எரியூட்டல் அல்லது "இறுதி சடங்குகள்" நேரத்தில், ஒரு " பூஜை " (பிரார்த்தனை) செய்யப்படுகிறது. சடங்கைக் குறிக்கும் விதமாக தகனத்தின் போது துதிப்பாடல்களும் மந்திரங்களும் ஓதப்படுகின்றன. மணிகர்ணிகா மற்றும் அரிச்சந்திரன் படித்துறைகள் தகன சடங்கிற்கு அர்ப்பணிக்கப்பட்டவை. ஆண்டுதோறும், இந்தியாவில் இறக்கும் 1000 பேரில் 2 க்கும் குறைவானவர்கள் அல்லது 25,000 முதல் 30,000 உடல்கள் பல்வேறு வாரணாசி படித்துறைகளில் தகனம் செய்யப்படுகின்றன; ஒரு நாளைக்கு சராசரியாக 80. இந்த நடைமுறை கங்கை ஆற்றில் ஏற்படும் மாசுபாட்டிற்கு சர்ச்சைக்குரியதாகிவிட்டது.[18] 1980 களில், வாரணாசி படித்துறைகளில் தகனம் மற்றும் பிற மாசுபடுத்தும் ஆதாரங்களை நிவர்த்தி செய்வதற்காக, கங்கையை சுத்தப் படுத்தும் முயற்சிக்கு இந்திய அரசு நிதியளித்தது. தற்போது பல சந்தர்ப்பங்களில், தகனம் வேறு இடங்களில் நடத்தப்படுகிறது . சாம்பல் மட்டுமே இந்த படித்துறை அருகே ஆற்றில் கலக்கப்படுகிறது.[19]

படித்துறையின் மாசு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் இந்தியாவில் ஆறு மாசுபாட்டின் பரவலான பிரச்சனையாகும். நகரத்தின் கழிவுகளும், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரும் படித்துறை வழியாக கங்கையில் பாய்ந்து ஆற்றை பெருமளவில் மாசுபடுத்துகிறது.[20][21]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ghats in Varanasi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்