விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

இந்தோனேசியாவின், ஜாவா தீவில் உள்ள கோட்டை

விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம் (Fort Vredeburg Museum) (அதிகாரப்பூர்வ இந்தோனேஷியன் பெயர், அருங்காட்சியகம் பெண்டங் விடேபர்க் யோக்யகர்த்தா), இந்தோனேசியாவில் யோக்யாகர்த்தா நகரத்தில் அமைந்துள்ள ஒரு முன்னாள் காலனிய காலத்தைச் சேர்ந்த கோட்டை ஆகும். இந்த இராணுவ வளாகம் 1992 ஆம் ஆண்டில் இவ்வ்டம் சுதந்திர போராட்ட அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இது முன் அமைந்துள்ள Gedung அகுன்ங் மற்றும் க்ராட்டான் யோக்யகர்த்தா என அழைக்கப்படுகின்றசுல்தான் அரண்மனைக்கும் கெடங்க் ஆகங்க் என்று அழைக்கப்படுகின்ற இந்தோனேசிய ஜனாதிபதிகளுக்கான ஆறு அரண்மனைகளில் ஒன்றாக உள்ள அரண்மனைக்கும் முன்பாக அமைந்துள்ளது.[1]

வரலாறு

கோட்டை

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்விரேடெபர்க் கோட்டை

1760 ஆம் ஆண்டில், புதிய க்ராட்டன் நாகயோகியகார்த்தா ஹாடினிங்கிராட் எனப்படுகின்ற அரண்மனை வளாகத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்ட பின்னர், வடக்கு ஜாவா கடற்கரையின் டச்சு ஆளுநராக இருந்த நிக்கோலாஸ் ஹார்டிங் யோககர்த்தாவில் ஒரு கோட்டையை கட்ட வேண்டிக் கொண்டார். சுல்தான் ஹமெங்க்குபுவோனோ I அவர்களால் வழங்கப்பட்ட இடத்தில் இந்த கோட்டைக்கான அமைப்பு கட்டப்பட்டது. முதலில் அமைந்த கோட்டை நான்கு கோட்டைகளைக் கொண்டு அமைந்திருந்தது. அது மரத்தால் ஆனதாகும்.[2] பின்னர் 1767 ஆம் ஆண்டில் அந்தக் கோட்டையானது ஒரு டச்சு கட்டிடக் கலைஞர் ஃபிரான்ஸ் ஹக்கின் மேற்பார்வையின் விரிவாக்கம் செய்யப்பட்டு, நிரந்தரக் கட்டடமாக அமையும் அளவில் மாற்றி கட்டப்பட்டது. 1787 ஆம் ஆண்டில் கட்டுமானப் பணி நிறைவடைந்த பின்னர் இந்தக் கோட்டைக்கு ருஸ்டன்பர்க் கோட்டை என்று பெயரிடப்பட்டது. ருஸ்டன்பர்க் கோட்டை என்பதற்கு டச்சு மொழியில் "ஓய்வு கோட்டை" என்பது பொருளாகும்.[3]

1867 ஆம் ஆண்டில் பழைய கோட்டை பூகம்பத்தால் அழிந்து போனது. பின்னர் கோட்டை புனரமைப்பு செய்யப்பட்டது. அதற்கு விரேடெபர்க் கோட்டை என்று மறுபெயர் சூட்டப்பட்டது, இது டச்சு மொழியில் "அமைதி கோட்டை" என்று பொருளாகும். கோட்டைக்கும் க்ராட்டன் சுல்தானுக்கும் இடையேயான அமைதியான இணைந்து வாழும் வாழ்வினை உணர்த்தும் வகையிலான வகையில் இது அமைந்துள்ளது.[3]

பின்னர் 1942 ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, இந்த கோட்டை ஜப்பானிய இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது. அடுத்து அது இராணுவத்தின் தலைமையகம் மற்றும் போர் சிறைச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானியர்கள் அந்தக் கோட்டையிலிருந்து வெளியேறிய பிறகு, விரேடெபர்க்கோட்டை இந்தோனேசிய இராணுவத்திற்கு இராணுவ கட்டளைத் தளமாகவும், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஐயத்திற்கிடமான உறுப்பினர்களை சிறை வைக்கப்படுகின்ற சிறைச்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டது.[2]

அருங்காட்சியகம்

1947 ஆம் ஆண்டில் புடி உட்டோமோ எனப்படுகின்ற முதல் அரசியல் அமைப்பின் 40 ஆவது நிறுவன ஆண்டு விழாவை நினைவுகூறும் வகையில் கோட்டையில் விழாக்கள் நடத்தப் பெற்றன. இந்நிகழ்ச்சியில்,இந்தோனேசிய சுதந்திர இயக்கத்தின் செயல்பாட்டாளரான கி ஹட்ஜர் தேவந்தரா என்பவர் இந்தக் கோட்டையை ஒரு பண்பாட்டு நிறுவனமாக மாற்றும் யோசனையை வெளிப்படுத்தினார். அந்த எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் புதிதாக ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு, இந்த முந்தைய கோட்டைடிய படிப்படியாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பினை ஏற்றது.

1980 ஆம் ஆண்டில் கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சரான தாவோய்ட் ஜோசூஃப் மற்றும் சுல்தான் ஹமெங்க்குபுவோனோ IX ஆகியோருக்கு இடையில் கோட்டையில் ஒரு கலாச்சார நிறுவனத்தை அமைப்பதற்கான ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக, கட்டிடத்தின் 1982 ஆம் ஆண்டில் பெரிய சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.[4] 1984 ஆம் ஆண்டில் புதிய அமைச்சரான நுக்ரோஹோ நோடோசுசாண்டோ முன்பிருந்த திட்டங்களை மாற்றி, அதற்கு பதிலாக, இந்தோனேசியாவின் சுதந்திரப் போராட்டத்தை வெளிப்படுத்துகின்ற நோக்கில் ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கினார். இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக 23 நவம்பர் 1992 ஆம் நாளன்று திறக்கப்பட்டது.[3]

2006இல் நிகழ்ந்த பூகம்பத்தின் காரணமாக யோக்யகர்த்தாவில் இருந்த கோட்டை ஏராளமான கட்டிடங்கள் மற்றும் பண்பாட்டுச் சின்னங்கள் சேதமாகி, பேரழிவிற்கு உட்பட்டன. பின்னர் இக்கோட்டை பழுதுபார்க்கப்பட்டது.[5]

கண்காட்சி

இந்த அருங்காட்சியகத்தில் பழைய புகைப்படங்கள், வரலாற்று பொருள்கள் மற்றும் பிரதிகளின் தொகுப்புகள் உள்ளன. இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்கான பயணத்தை சித்தரிக்கும் ஒரு டியோராமாவும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அசல் வடிவமைப்பில் இந்த டியோராமா காட்சிப் பெட்டிகளில் 93 அடங்கும், இருப்பினும் 1992 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டபோது, அவற்றில் 30 மட்டுமே முடிக்கப்பட்டன. மார்ச் 1996 நிலவரப்படி மேலும் 18 காட்சி பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

டியோராமாவின் காட்சிப் பெட்டிகளில் சித்தரிக்கப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் யோககர்த்தா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் நடந்தன. 1830 ஆம் ஆண்டில் பங்கேரன் டிபோனெகோரோ கைப்பற்றப்பட்டதிலிருந்து சுகர்னோ 1949 இல் ஜகார்த்தாவுக்கு திரும்பியதிலிருந்து பல்வேறு நிகழ்வுகளை இந்த டியோராமாக்கள் உள்ளடக்கியது. டியோராமாக்கள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: ஒன்று முஹம்மதியா அல்லது தமன் சிஸ்வா நிறுவப்பட்டது போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை (33) சித்தரிக்கிறது; மற்றொன்று போர் மற்றும் போராட்டத்தில் கவனம் செலுத்துகிறது (15) சுதந்திரப் போரின்போது கொரில்லா போர் போன்றவை.[2]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்