3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம்

3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம் (3000 metres steeplechase) தடகள விளையாட்டில் பலதடை ஓட்டத்தில் மிகவும் வழமையான தொலைவாகும். இது 3000 மீட்டர்கள் தொலைவிற்குப் பல தடைகளைத் தாண்டிச் செல்லும் ஓட்டப்பந்தயமாகும். இதன் பெயர் குதிரைகளுக்கான ஸ்டீபிள்சேசை அடுத்து ஆங்கிலத்தில் இது ஸ்டீபிள்சேஸ் எனப்படுகின்றது.

தடகள விளையாட்டு
3000 மீட்டர்கள் பலதடை ஓட்டம்
2009 உலக தடகளப் போட்டிகளின்போது நீர்த்தடைகளைத் தாண்டிச் செல்லுதல்
ஆண்கள் சாதனைகள்
உலகச் சாதனைகத்தார் சாயிஃப் சாயீது சாகீன் 7:53.63 (2004)
ஒலிம்பிக் சாதனைகென்யா கான்செசுலுசு கிப்ரூட்டோ 8:03.28 (2016)
பெண்கள் சாதனைகள்
உலகச் சாதனைஉருசியா குல்நாரா கால்கினா 8:58.81 (2008)
ஒலிம்பிக் சாதனைஉருசியா குல்நாரா கால்கினா 8:58.81 (2008)

விதிமுறைகள்

ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் உலகத் தடகளப் போட்டியிலும் இந்தப் போட்டி நடத்தப்படுகின்றது; தவிரவும் இந்தப் போட்டியை தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பன்னாட்டுச் சங்கம் (IAAF) அங்கீகரித்துள்ளது.[1] ஆண்களுக்கான தடைகள் 914 மில்லிமீட்டர்கள் (36.0 அங்) உயரமானதாகவும், பெண்களுக்கான தடைகள் 762 மில்லிமீட்டர்கள் (30.0 அங்) உயரமானதாகவும் அமைக்கப்படுகின்றன. நீர்த் தடையில் வேலியை அடுத்து நீர்க்குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது; கால்பதிக்கும் பரப்பு 3.66 மீட்டர்கள் (12.0 அடி) அகலம் × 0.70 மீட்டர்கள் (2.3 அடி). பின்னர் இது மேனோக்கியச் சரிவாக 700 மில்லிமீட்டர்கள் (28 அங்)இலிருந்து ஓடுதளம் மேற்பரப்புவரை விரிந்துள்ளது.[1]

இந்த ஓட்டத்தின் நீளம் பொதுவாக 3,000 மீட்டர்கள் (9,800 அடி) ஆகும்; இளையோர் மற்றும் சில மாஸ்டர் நிகழ்வுகளில் 2,000 மீட்டர்கள் (6,600 அடி) தொலைவிற்கும் நடத்தப்படுகின்றது. முன்னதாக பெண்களுக்கானப் போட்டிகள் 2000 மீட்டருக்கே நடத்தப்பட்டு வந்தன. ஒரு சுற்றில் நான்கு சாதாரண தடைகளும் ஒரு நீர்த்தடையும் அமைக்கப்பட்டிருக்கும். 3,000 மீட்டர்கள் (9,800 அடி) தொலைவில் ஒவ்வொரு போட்டியாளரும் 28 சாதாரணத் தடைகளையும் ஏழு நீர்த்தடைகளையும் கடக்க வேண்டியிருக்கும். இதில் முதலில் தடைகளில்லாத பகுதிச்சுற்றும் பின்னர் ஏழு முழுச் சுற்றுக்களும் இருக்கும். நீர்த்தடை, உள்தடத்தின் உட்புறத்திலோ வெளித் தடத்தின் வெளிப்புறத்திலோ அமைக்கப்பட்டிருக்கும்.

தடை ஒன்றின் அளவைகள்

தடை தாண்டும் ஓட்டத்தில் உள்ளது போலன்றி ஸ்டீபிள்சேஸ் தடைகளை தட்டினால் கீழே விழுவதில்லை; எனவே மெய்வல்லுநர் இந்தத் தடைகளை எவ்வாறும் கடக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பல போட்டியாளர்கள் தடைகள் மீது கால்பதித்துக் கடக்கின்றனர்.

மேற்சான்றுகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்