குறுந்தலை

குறுந்தலை (Microcephaly) ஓர் நரம்புசார் உருவாக்கக் குறைபாடு. இது ஓர் முக்கியமான நரம்பியல்சார் அறிகுறியாகவோ எச்சரிக்கையாகவோ உள்ளது; ஆனால் இதை வரையறுப்பதில் சீர்மை ஏற்படவில்லை. பொதுவாக தலைச்சுற்றளவு (HC) அதே வயதுள்ள அகவை, பாலின குழந்தையின் சராசரி தலைச்சுற்றளவுடன் இரண்டு நியமவிலகல்களை விடக் குறைவாக இருக்கும் நிலையாக வரையறுக்கப்படுகின்றது.[1][2] சிலர் இது மூன்று நியம விலகல்களை விடக் குறைவாக இருக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.[3] குறுந்தலை பிறக்கும்போதே உள்ளக் குறைபாடாகவோ குழந்தைப் பருவத்தில் உருவாகும் குறைபாடாகவோ இருக்கலாம். இந்தக் குறைபாடு உருவாக பல காரணங்கள் உள்ளன; மூளையின் இயல்மாறிய வளர்ச்சியாலோ நிறப்புரிசார் பிறழ்வுகளாலோ ஏற்படலாம். மைக்ரோசெபலின் மரபணுவொன்றில் ஒத்த கருமுட்டைசார் மரபணு திடீர்மாற்றம் குறுந்தலை உருவாக்கத்தின் காரணமாக அமைகின்றது.

குறுந்தலை
கபாலத்தின் நரம்பு நுணுகுநோக்கிக் காட்சி: வழமையான கபாலம் (இடது) குறுந்தலை (வலது)
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புமருத்துவ மரபணுவியல்
ஐ.சி.டி.-10Q02.
ஐ.சி.டி.-9742.1
ம.இ.மெ.ம251200
நோய்களின் தரவுத்தளம்22629
மெரிசின்பிளசு003272
ம.பா.தD008831

பொதுவாக, குறுந்தலை உள்ளோரின் வாணாள் அளவு குறைய வாய்ப்புள்ளது; தவிரவும் வழமையான மூளைச் செயற்பாட்டிற்கான முன்கணிப்பு மோசமாக உள்ளது. தொடர்புள்ள பிறழ்வுகளை ஒட்டி முன்கணிப்பு மாறுகின்றது.

அறிகுறிகளும் நோய் வெளிப்பாடும்

குறுந்தலை உள்ள குழந்தையும் (இடது) வழமையான தலை உள்ள குழந்தையும் ஒப்பீடு

பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பொதுவாக குறிப்பிடத்தக்க நரம்புசார் குறைபாடுகளும் வலிப்புகளும் காணப்படுகின்றன seizures. பொதுவாக அறிவுத்திறன் வளர்ச்சி மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றது; ஆனால் இயக்கச் செயல்களில் குறைபாடுகள் வயது வந்தபிறகே வெளிப்படலாம்.

குறுந்தலைக் குழந்தைகள் வழமையான தலையுடனோ அல்லது தலைச்சுற்றளவு குறைந்தோ பிறக்கலாம். பின்னதாக, தலை வளராது இருக்க, முகம் மட்டும் வழமையான வீதத்தில் வளரலாம்; இதனால் சிறிய தலையுடனும் பின்வாங்கிய முன்னந்தலையுடனும் சுருங்கிய உச்சந்தலையுடனும் காணப்படும். குழந்தை வளர வளர, கபாலத்தின் சிறிய அளவு வெளிப்படத் தொடங்கும். இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் எடை குறைந்தும் குள்ளமாகவும் இருப்பார்கள். இயக்கச் செயல்பாடுகளும் பேச்சும் தாமதமாகலாம். அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு, அறிவுத்திறன் குறைபாடு போன்றவை பொதுவாக நிகழ்பவை; இவற்றின் தாக்கம் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். வலிப்புகள் ஏற்படும்.

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=குறுந்தலை&oldid=3581977" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்