குளோரோ அசிட்டைல் குளோரைடு

வேதிச் சேர்மம்

குளோரோ அசிட்டைல் குளோரைடு (Chloroacetyl chloride) C2H2Cl2O என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். குளோரினேற்றம் செய்யப்பட்ட அசைல் குளோரைடு வகைச் சேர்மமாக வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் இரு வினைக்குழு சேர்மமாகும். ஒரு பயனுள்ள கட்டுறுப்புத் தொகுதி வேதிப்பொருளாக குளோரோ அசிட்டைல் குளோரைடு பயன்படுத்தாப்படுகிறது.

குளோரோ அசிட்டைல் குளோரைடு
Skeletal formula
ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
குளோரோ அசிட்டைல் குளோரைடு
வேறு பெயர்கள்
2-குளோரோ அசிட்டைல் குளோரைடு
குளோரோ அசிட்டிக் அமிலக்குளோரைடு
குளோரோ அசிட்டிக் குளோரைடு
மோனோகுளோரோ அசிட்டைல் குளோரைடு
இனங்காட்டிகள்
79-04-9 Y
ChemSpider13856283 N
EC number201-171-6
InChI
  • InChI=1S/C2H2Cl2O/c3-1-2(4)5/h1H2 N
    Key: VGCXGMAHQTYDJK-UHFFFAOYSA-N N
  • InChI=1/C2H2Cl2O/c3-1-2(4)5/h1H2
    Key: VGCXGMAHQTYDJK-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள்Image
KEGGC14859 Y
பப்கெம்6577
  • C(C(=O)Cl)Cl
பண்புகள்
C2H2Cl2O
வாய்ப்பாட்டு எடை112.94 g·mol−1
தோற்றம்நிறமற்றும் மஞ்சளுமான நீர்மம்
அடர்த்தி1.42 கி/மி.லி
உருகுநிலை −22 °C (−8 °F; 251 K)
கொதிநிலை 106 °C (223 °F; 379 K)
வினைபுரியும்
ஆவியமுக்கம்19 மி.மீ பாதரசம் (20°செ)[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்Oxford MSDS
ஈயூ வகைப்பாடுவிஷம் T சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது N அரிக்கும் C
தீப்பற்றும் வெப்பநிலைதீப்பற்றி எரியாது [1]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
none[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.05 பகுதி/மில்லியன் (0.2 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
N.D.[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

மெத்திலீன் குளோரைடை கார்பனைலேற்றம் எனப்படும் கார்பனோராக்சைடு சேர்க்கும் வினை, வினைலிடின் குளோரைடு|வினைலிடின் குளோரைடை ஆக்சிசனேற்றம் செய்தல் அல்லது கீட்டீனுடன்[2] குளோரின் சேர்த்தல் போன்ற முறைகளில் தொழிற்சாலைகளில் குளோரோ அசிட்டைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது. குளோரோ அசிட்டிக் அமிலமும் தயோனைல் குளோரைடு சேர்த்தும் அல்லது பாசுபரசு ஐங்குளோரைடும் பாசுசீன் சேர்த்தும் கூட இதைத் தயாரிக்க இயலும்.

வினைகள்

குளோரோ அசிட்டைல் குளோரைடு ஒர் இருவினைக்குழு சேர்மம் என்பதால் இந்த அசைல் குளோரைடு எளிதாக எசுத்தர்களாகவும், [3] அமைடுகளாகவும் உருவாகிறது. அதேவேளையில் இம்மூலக்கூறின் மறுமுனை அமீன்களுடன் சேர்ந்து வேறு இணைப்புகளாகவும் உருவாகிறது. குளோரோ அசிட்டைல் குளோரைடு பயன்படுத்தி இலிடோகெய்ன் சேர்மத்தைத் தயாரிக்கும் தொகுப்பு வினை இங்கு விளக்கப்பட்டுள்ளது:[4]

.

பயன்கள்

களைக்கொல்லிகளான ஆலாகுளோர் மற்றும் பியூட்டாகுளோர் தயாரித்தலின் போது ஓர் இடைநிலை வேதிப்பொருளாகப் பயன்படுவதுதான் குளோரோ அசிட்டைல் குளோரைடின் பிரதானமானதொரு பயனாகும். ஒரு ஆண்டுக்கு தோராயமாக நூறு மில்லியன் பவுண்டுகள் அளவிற்கு இது பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு வேதியியல் இடைநிலையும், கண்ணீர்ப்புகை வாயுமான பீனசைல் குளோரைடு தயாரிக்கவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். அலுமினியம் குளோரைடு வினையூக்கியின் உதவியால் பென்சீனை பிரைடல்-கிராப்ட்சு அசைலேற்றம் செய்து பீனசைல் குளோரைடு தயாரிக்கப்படுகிறது[2] Phenacyl chloride is synthesized in a Friedel-Crafts acylation of benzene, with an aluminium chloride catalyst:[5]

.

முன்பாதுகாப்பு

பிற அசைல் குளோரைடுகள் போலவே அமீன்கள், ஆல்ககால்கள் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியன்வற்றுடன் சேரும் போது கண்ணிர்ப் புகையாக மாறுகிறது.அமெரிக்காவின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக அமைப்பு இதைப் பயன்படுத்துவதற்கான எல்லைகள் எதையும் விதிக்கவில்லை என்றாலும் அந்நாட்டின் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார தேசிய நிறுவனம், எட்டுமணி நேர வேலை நேரத்தில் 0.05 பகுதிகள்/மில்லியன் அளவு அனுமதிக்கத்தக்க அளவாக பரிந்துரைக்கிறது[6].

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்