கொல்லம் தீவுகள்

கொல்லம் அல்லது குயிலான் நகரமானது அரபிக் கடலின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது. இது அரபிக்கடல் மற்றும் அஷ்டமுடி ஏரி ஆகியவற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்லம் மநகராட்சிப் பகுதியின் பெரும்பகுதி அஷ்டமுடி ஏரியைக் கொண்டுள்ளது. இது கேரளத்தில் அதிகம் பார்வையிடப்படும் உப்பங்கழி மற்றும் ஏரியாகும். இது ஒரு தனித்துவமான ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பாக, பனை வடிவ (ஆக்டோபஸ் வடிவம் என்றும் அழைக்கப்படுகிறது) பெரிய நீர்நிலைகளைக் கொண்டது. இது மாநிலத்தின் வேம்பநாட்டு ஏரி கழிமுக சூழ்நிலைத் தொகுப்புக்கு அடுத்ததாக உள்ளது. அஷ்டமுடி என்றால் மலையாளத்தில் 'எட்டு மகுடம்' ( அஷ்ட) = 'எட்டு'; முடி = 'மகுடம்') என்பதாகும். இந்த பெயர் ஏரியின் இட அமைப்பியலைக் குறிக்கிறது : ஏரியை மேலே இருந்து பார்த்தால் பல்வேறு கிளைகளுடன் எட்டு மகுடங்களைக் கொண்டுள்ளது போல் தோற்றமளிக்கும். மேலும் இது கேரளத்தின் கழிமுகங்களின் (காயல்) நுழைவாயில் என அழைக்கப்படுகிறது. இந்த ஏரி படகு வீடு மற்றும் கழிமுக விடுதிகளுக்கு மிகவும் பிரபலமானது. [1] [2] [3]

மன்ரோவில் மக்கள் வாழாத தீவு
கொல்லத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியான 'தி ரவிஸ்' தீவலி அருகே ஒரு தீவில் அமைந்துள்ளது

கொல்லத்தில் உள்ள அனைத்து தீவுகளும் அஷ்டமுடி ஏரியில் அமைந்துள்ளன. அஷ்டமுடி ஏரியில் ஏராளமான தீவுகள் உள்ளன. இந்த தீவுகளில் மன்றோ தீவு மற்றும் சவர தெக்கும்பாகம் ஆகியவை மிக முக்கியமானவை. தீவுகளும், அஷ்டமுடி ஏரியில் அழகும் கண்ணைக் கவருவன. இந்த தீவுகளில் பெரும்பாலானவை மாநிலத்தில் சுற்றுலா தல்ங்களாகும். இந்திய இரயில்வே கூட கொல்லத்தில் உள்ள தீவுகளில் ஒன்றை சுற்றுலா திட்டத்திற்காக உருவாக்க திட்டமிட்டுள்ளது. [4] இங்கு மனிதர்கள் வசிக்கும், வசிக்காத பெரிய, சிறிய தீவுகள் உள்ளன. கொல்லத்தில் உள்ள முக்கியமான தீவுகள்: [5]

அஷ்டமுடி உப்பங்கழிகளின் வான்வழி காட்சி
  • மன்றோ தீவு
  • சவர தேக்கும்பகம்
  • பல்லந்தருத்தி
  • செயின்ட். செபாஸ்டியன் தீவு
  • சான் தோம் தீவு (தாமஸ்ருத்)
  • வின்சென்ட் தீவு [6][6]
  • அவர் லேடி ஆஃப் பாத்திமா தீவு (பாத்திமாதுருத்)
  • பெழும்தூருத்
  • கக்கத்துருத்
  • பட்டம்துருத்
  • பாலியந்துருத்து (பல்லியமதுருத்து)
  • நீட்டம் துருத்
  • புத்தேந்துருத்
  • பூத்துருத்
  • பன்னாய்கத்துருத்
  • வேலுத்துருத்
  • நீலேஸ்வரம் துருத்
  • சீகெந்துருத்
  • கெரோலிதுருத்
  • கனக்காந்தூர்த்
  • புஷ்பமங்கலம்துருத்
  • ஜோசப்துருத்[7]

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொல்லம்_தீவுகள்&oldid=3040663" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்