சரசுவதி வனவிலங்கு சரணாலயம்

சரசுவதி வனவிலங்கு சரணாலயம் (Saraswati Wildlife Sanctuary) இந்தியாவின் அரியானா மாநிலத்திலுள்ள கைத்தல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு வன விலங்குச் சரணாலயம் ஆகும். சியோன்சர் காடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சரணாலயம் 4452.85 எக்டேர் பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது [1].

சரசுவதி வனவிலங்கு சரணாலயம்
Saraswati Wildlife Sanctuary
सरस्वती वन्य अभ्यारण
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்கைத்தல் மாவட்டம்
ஏற்றம்
215 m (705 ft)
மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-HR
இணையதளம்http://haryanaforest.gov.in/protect.aspx

கலேசர் தேசியப்பூங்கா, மர்னி குன்றுகள், சரசுவதி வனவிலங்கு சரணாலயம் என்பவை அரியானாவிலுள்ள முறையே முதல், இரண்டு மூன்றாவது பெரிய காடுகளாகும்[2].

அமைவிடம்

பெகோவாவில் இருந்து 10 கிலோமீட்டர், குருச்சேத்திரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவு, கைத்தலிலிருந்து60 கிலோமீட்டர் தொலைவுகளில் பெகோவா-சீக்கா-பட்டியாலா சாலையில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. மேலும் தில்லியில் இருந்து 200 கிலோமீட்டர், பட்டியாலாவில் இருந்து 62 கிலோமீட்டர், அம்பாலாவிலி இருந்து 66 கிலோமீட்டர், கர்னாலில் இருந்து 67 கிலோமீட்டர், சண்டிகாரில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவுகளில் இந்தச்சரணாலம் இருக்கிறது.

வரலாறு

சரசுவதி பெருந்தோட்டம் 1988 ஆம் ஆண்டு சூலை 29 இல் சரசுவதி வனவிலங்குச் சரணாலயம் என பெயரிடப்பட்டது [2].

தொல்லியல் எச்சங்கள்

2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 இல் தி டிரிப்யூன் என்ற ஆங்கிலச் செய்தித்தாள் வெளியிட்ட அறிக்கையில் இச்சரணாலயத்தில் இருந்ததாகக் கருதப்படும் சைவ சமயத்தைச் சார்ந்த மடத்தலைவர் மற்றும் அவருடைய உறுப்பினர்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக அறிவித்தது. சரணாலயத்தில் இருந்த பழைய ஆலமரத்தை பிடுங்கியபோது 15 அடி ஆழத்தில் பண்டைய செவ்வகச் செங்கற்கள் காணப்பட்டதாக நம்பப்படுகிறது.குருச்சேத்திர சிறீகிருட்டிணா அருங்காட்சியகத்தின் காப்பாளர் இராசேந்திர சிங் இராணா இச்செவ்வகச் செங்கற்கள் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தெரிவித்துள்ளார். குப்தர் காலம், குசானர்கள் காலம் ஆகியவற்றுக்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சரசுவதி இப்பகுதியில் பாய்ந்ததாகவும் கருதப்படுகிறது [3].முகலாயர் காலத்தைச் சேர்ந்த 40 ஆண்டுகால சிறிய செங்கற்களால் கட்டப்பட்ட பழைமையான தண்ணீர் கிணறு ஒன்றும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்