சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா)


சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் (இந்தியா) அல்லது சிறுபான்மையினர் விவகாரத் துறை அமைச்சகம் (Ministry of Minority Affairs), இந்திய அரசால் 2006 ஆம் ஆண்டின் ஜனவரி 29 அன்று ஏற்படுத்தப்பட்ட அமைச்சகம் ஆகும். இந்த அமைச்சகமே சிறுபான்மை மக்களின் நலன்களை காக்கும் இந்திய அரசின் உச்சகட்ட அமைப்பாகும். இந்திய சிறுபான்மையினருள் இசுலாமியர், சீக்கியர், கிறித்தவர், பௌத்தர், பார்சி மற்றும் சமணர் ஆகியோரும் அடக்கம்[1]இதன் தற்போதைய மூத்த அமைச்சர் இசுமிருதி இரானி மற்றும் இணை அமைச்சர் ஜான் பர்லா ஆவார்.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம்
துறை மேலோட்டம்
அமைப்பு29 சனவரி 2006
ஆட்சி எல்லைஇந்தியாஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
அமைப்பு தலைமைகள்
வலைத்தளம்http://www.minorityaffairs.gov.in/

முன்னாள் அமைச்சர்கள்

எண்புகைப்படம்பெயர்பணி காலம்பிரதமர்அரசியல் கட்சி
1ஏ. ஆர். அந்துலே29 ஜனவரி 200622 மே 2009மன்மோகன் சிங்இந்திய தேசிய காங்கிரசு
2 சல்மான் குர்சித்22 மே 200928 அக்டோபர் 2012
3 கா. ரஹ்மான்கான்28 அக்டோபர் 201226 மே 2014
4 நஜ்மா ஹெப்துல்லா26 மே 201412 ஜூலை 2016நரேந்திர மோதிபாரதிய ஜனதா கட்சி
5 முக்தர் அப்பாஸ் நக்வி12 ஜூலை 20166 ஜூலை 2022
6 இசுமிருதி இரானி06 சூலை 2022பதவியில்

நிறுவனங்கள்

  • சுயநிதி அமைப்பு
    • மௌலான ஆசாத் அறக்கட்டளை [3]
  • பொதுத்துறை மற்றும் கூட்டுத்துறை நிறுவனங்கள்
    • தேசிய சிறுபான்மையின மக்களின் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (NMDFC)

திட்டங்கள் மற்றும் உதவித்தொகைகள்

  • ஜியோ பார்சி - பார்சிகளின் மக்கள் தொகைக் குறைவைக் கட்டுப்படுத்தும் திட்டம் [4]
  • நய் ரோஷினி - சிறுபான்மை சமூக பெண்களின் தலைமைத்துவம் மேம்பாடு திட்டம் [5]
  • நய் மன்சில் - சிறுபான்மை சமூகங்களுக்கான ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதார திட்டம்[6]
  • நய் உடான் - சிறுபான்மை சமூகங்களின் மாணவர்கள் முதல்நிலை போட்டி தேர்விகளில் வெற்றிப்பெறுவதற்கு ஊக்கப்படுத்தும் திட்டம் [7]
  • சீக்கோ அவ்ர் கமோவ் - சிறுபான்மையினரின் திறன் மேம்பாட்டுக்கான திட்டம்[8]
  • ஹமரி தரோஹார் - இந்திய கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த கருத்தின் கீழ் சிறுபான்மை சமூகங்களின் வளமான பாரம்பரியத்தை பாதுகாக்கும் திட்டம்[9]
  • ப்ரி மெட்ரிக் உதவித்தொகை திட்டம் - சிறுபான்மை சமூக மாணவர்களைல் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்[10]
  • போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம் - சிறுபான்மை சமூக மாணவர்களில் பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட அனைத்து படிப்புகளும் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை திட்டம்[11]
  • சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஏழை மற்றும் திறமையான மாணவர்களுக்கு நிதி உதவித்தொகை திட்டம்[12]
  • சிறுபான்மை மாணவர்களுக்கான மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டம் [13]
  • படோ பர்தேஷ் - சிறுபான்மை சமூக மாணவர்களுக்கான வெளிநாட்டுப் படிப்புகளுக்கான கல்விக் கடன்களுக்கான வட்டி மானியத் திட்டம்[14]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்