செம்தேத் நசிர் காலம்

கீழ் மெசொப்பொத்தேமியாவில், கிமு 3100 முதல் கிமு 2900 வரை கானப்பட்ட தொல்பொருள் பண்பாடுக் காலம்

செம்தேத் நசிர் காலம் ( Jemdet Nasr Period) (கிமு 3100 — கிமு 2900) பண்டைய அண்மை கிழக்கின் கீழ் மெசொப்பொத்தேமியாவில், சுமேரிய நகரமான செம்தேத் நசிர் நகரத்தில், (தற்கால தெற்கு ஈராக்கில்) கிமு 3100 முதல் கிமு 2900 வரை காணப்பட்ட ஒரு தொல்பொருள் பண்பாடுக் காலம் ஆகும். செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் பெயரால் இதற்கு செம்தேத் நசிர் காலம் எனப்பெயரிடப்பட்டது. செம்தேத் நசிர் காலத்திற்குப் பின்னர் உரூக் காலமும், அதன் பின்னர் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் காலமும் துவங்கியது.

செம்தேத் நசிர் காலம்
கிமு 3100 — கிமு 2900
செம்தேத் நசிர் காலப் பண்பாட்டுக் களங்கள் (வெளிர் பழுப்பு நிறத்தில்), உரூக் பண்பாட்டுக் களங்கள் (மஞ்சள் நிறத்தில்)
புவியியல் பகுதிமெசொப்பொத்தேமியா
காலப்பகுதிவெண்கலக் காலம்
காலம்கிமு 3100 முதல் — கிமு 2900 வரை
வகை களம்செம்தேத் நசிர் தொல்லியல் மேடு
முக்கிய களங்கள்அபு சலாபிக், சுருப்பக், பாரா, கபாஜா, நிப்பூர், உக்கயர், ஊர் மற்றும் உரூக் தொல்லியல் மேடுகள்
முந்தியதுஉரூக் காலம்
பிந்தியதுமெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் காலம்
செம்தேத் நசிர் காலம் is located in ஈராக்
அபு சலாபிக்
அபு சலாபிக்
பாரா
பாரா
உக்கியர்
உக்கியர்
கபாஜா
கபாஜா
செம்தேத் நசிர் காலத்திய பண்டைய நகரங்கள் (தற்கால ஈராக்) (clickable map)

வரலாற்று ஆய்வுகள்

1900 ஆண்டுகளில் ஆப்பெழுத்துகளில் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட 36 களிமண் பலகைகள் தொல்பொருட்கள் வணிகச் சந்தையில் விற்பனைக்கு வந்தது. 1903-இல் இப்பலகைகளை வாங்கிய செர்மானிய தொல்லியல் அறிஞர், இப்பலகைகளின் செய்திகளை ஆய்ந்து, இவைகள் செம்தேத் நசிர் தொல்லியல் களத்தைச் சேர்ந்தது என முடிவு செய்து, 1926-இல் செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்தார். அகழாய்வின் போது களிமண் செங்கற் கட்டிடத்தில் துவக்க கால ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட 150 முதல் 180 களிமண் பலகைகளை கண்டெடுத்தார்.

செம்தேத் நசிர் அகழாய்வுகளின் மூலம் 1930-இல் உரூக் மற்றும் உபைதுகள் காலம் வரையறுக்கப்பட்டது.[1]

அகழாய்வு முடிவுகளின்படி, செம்தேத் நசிர் காலத்திற்குப் பின் மெசொப்பத்தோமியாவில் உரூக் காலமும், அதன் பின்னர் துவக்க வம்சத்தவர்களின் காலமும் கணிக்கப்பட்டது.செம்தேத் நசிர் தொல்லியல் அகழ்வாய்வுக்குப் பின்னர் நடு மெசொப்பொத்தோமியாவில் அபு சலாபிக், சிருப்பக், கபாஜா, நிப்பூர், உக்கியர், ஊர் மற்றும் உரூக் ஆகிய தொல்லியல் களங்கள் அகழாய்வு செய்யப்பட்டது.[2]

காலமும், காலவரிசையும்

பழைய அறிவியல் கணக்குப்படி, செம்தேத் நசிர் தொல்லியல் பண்பாட்டுக் காலத்தை கிமு 3,200 - கிமு 3,000 என வறையறை செய்தனர். நவீன அறிவியல் கருவிகளின் துணையுடன் செய்யப்பட்ட ஆய்வில் செம்தேத் நசிர் பண்பாட்டு காலம் கிமு 3,100–2,900 காலத்தியது என கண்டறிந்துள்ளனர்.[3][4][5][6]

செம்தேத் நசிர் தொல்லியல் பண்பாட்டின் சமகாலத்தியது என மேல் மெசொப்பொத்தேமியாவின் ஐந்தாம் நினிவே, கீழ் மெசொப்பொத்தேமியாவின் உரூக் மற்றும் ஆதி ஈலாம் தொல்லியல் பண்பாட்டுகளை தொல்லியல் அறிஞர்கள் குறிப்பிடுவர்.[7]

சோப்புக்கல்லில் செய்யப்பட்ட செம்தேத் நசிர் பண்பாட்டுக் காலத்திய உருளை வடிவ முத்திரை, கபாஜா தொல்லியல் களம், ஈராக்
ஆப்பெழுத்துகளுடன் கூடிய செம்தேத் நசிர் (கிமு 3100 - 2700) காலத்திய இரட்டைக் கல் சிற்பங்கள்

செம்தேத் நசிர் பண்பாட்டுக் காலத்திய சமுதாயம்

உரூக் நகரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட களிமண் பலகைகள், செம்தேத் நசிர் காலத்தியது (கிமு 3100–2900)

செம்தேத் நசிர் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட கட்டிடங்கள், ஆப்பெழுத்து களிமண் பலகைகள், உருளை வடிவ முத்திரைகள் மூலம் செம்தேத் நசிர் பண்பாடு சிறந்து விளங்கியதென்றும், இங்கு நீர் பாசான வடிகால்கள், வேளாண்மை, கைவினைத் தொழில்கள், பழத்தோட்டங்கள் மூலம்அ பொருளாதாரம் சிறந்து விளங்கியது என அறியப்படுகிறது. மேலும் மக்கள் ஆடு - மாடுகளை மேய்க்கும் தொழிலும் சிறந்து விளங்கியுள்ளது. வணிகம் சிறிய அளவில் நடந்துள்ளதற்கு, இத்தொல்லியல் களத்தில் அழகிய நவரத்தின மணிகள் செம்சேத் நசிர் முத்திரைகள் மூலம் ஊர், உரூக் மற்றும் லார்சா நகரங்கள் குறித்து அறிய அறியமுடிகிறது.[8]

செம்தேத் நசிரி காலத்திய தொல்பொருட்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்


🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்