சைலுரிடே

சைலுரிடே
பலாக்ரோனோடசு அபோகன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சைலுரிடே

குவியெர், 1816
மாதிரிப் பேரினம்
சைலுரசு
பேரினம்
  • சைலுரசு[1]
  • சைலுரிச்சிசு[1]
  • ஓம்போக்[1]
  • வாலாகோ[1]
  • பெலோடோன்டிச்சிசு[1]
  • கெமிசிலூரசு[1]
  • கிரிப்டோப்டெரசு[1]
  • பலாக்ரோனோடசு[1]
  • மைக்ரோனேமா[1]
  • தெரோக்ரிப்டிசு[1]
  • செரடோக்லானிசு[1]
  • பின்னிவாலகோ[1]
  • (வாலகோனியா) [2]

சைலுரிடே (Siluridae) என்பது சைலுரிபார்மிசு வரிசையில் உள்ளகெளிறு மீன் குடும்பமாகும். இதில் இன்றைக்கு சுமார் 105 சிற்றினங்கள் 12 அல்லது 14[3] பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும் சைலூரிபார்மிசு மீன்கள் காணப்பட்டாலும், இவை தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் வேறுபட்டவை. இதைத் தவிரக் கிழக்கு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் இவற்றின் பன்முகத்தன்மை குறைகிறது. சைலுரிபார்மிசு மத்திய ஆசியாவின் பெரும்பகுதியில் காணப்படவில்லை.[3] சைலுரிடே குடும்பத்தை இரண்டு பெரும் குழுக்களாகப் பிரிக்கலாம். இதில் ஒன்று மிதவெப்ப வடக்கு ஐரோவாசிய இனக்குழு மற்றும் மிகவும் மாறுபட்ட மிதவெப்பமண்டல/வெப்பமண்டல தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய இனக்குழு ஆகும்.[3]

குறிப்பிடத்தக்க சிற்றினங்கள்

  • வெல்சு கெளிறு, சிலுரஸ் கிளானிசு
  • பாண்டம் கெளிறு, கிரிப்டோப்டெரசு விட்ரோலசு
  • வாலகோ ஆட்டு
  • வாலகோனியா லீரி
  • அரிஸ்டாட்டில் கெளிறு
  • அமுர் கெளிறு
  • பலாக்ரோனோடசு அபோகன்
  • ஓம்போக்

பொதுவான பண்புகள்

சிலுரிடே குடும்பம் மிகவும் வேறுபட்ட சிற்றினங்களைக் கொண்டது. இருப்பினும் அனைத்து சிற்றினங்களுக்கிடையில் தனித்துவமான வேறுபாடுகள் இல்லை. ஆனால் சில முக்கிய வகைகளில் இராட்சத மற்றும் சிறு கெளிறு மீன் வழக்கமாகக் கொண்டிருக்கும் பண்புகளில் சிறிய துடுப்புகள் மற்றும் மீசை போன்றவை அடங்கும். இந்த கெளுத்தி மீன்களுக்கு இவற்றின் முதுகுத் துடுப்புகள் அல்லது கொழுப்புத் துடுப்புகளில் முதுகெலும்பு முட்கள் இல்லை. மேலும் இவற்றின் இடுப்புத் துடுப்புகள் சிறியதாகவோ அல்லது இல்லாததாகவோ இருக்கும். குத துடுப்பு அடித்தளம் பொதுவாக மிக நீளமாக இருக்கும்.[1] இந்தக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய சிற்றினம் வேல்சு கெளிறு சிலுரசு கிளானிசு ஆகும்.[1] இது 3 m (9.8 அடி)க்கும் மேற்பட்ட நீளமும் 300 lb (140 kg) வரை எடையும் கொண்டது.

மேற்கோள்கள்

  • 1 2 3 Bornbusch, A.H. (1995).
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சைலுரிடே&oldid=3737007" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்