சோழர் கடற்படை

சோழர் கடற்படை என்பது சோழப் பேரரசின் உள்ளடக்கப்பட்ட கடற்படைகள் மற்றும் அதன் ஏனைய கடல் படைக்கலங்கள் என்பவற்றைக் கொண்டிருந்தது. சோழப் பேரரசானது இலங்கை, சிறீவிஜயம் (தற்போதைய இந்தோனேசியா) ஆகியவற்றை வெற்றி கொண்டு விரிவடைவதற்கும், இந்து சமயம், திராவிடக் கட்டிடக்கலை, திராவிடக் கலாச்சாரம் என்பன தெற்காசியாவில் பரவுவதற்கும், பொ.ஊ. 900 காலப்பகுதியில் கடற்கொள்ளையினைத் தென்கிழக்காசியா தடுப்பதிலும் சோழர் கடற்படை முக்கியப் பங்காற்றியது.

சோழர் கடற்படை
உருவாக்கம்பொ.ஊ. 3ம் நூற்றாண்டு
நாடுசோழர் பேரரசு
பற்றிணைப்புசோழர் பேரரசு
கிளைகடற்படை
வகைகடற்படை
அளவுஉச்ச காலத்தில் 600-1000 கப்பல்கள்.
பகுதிசோழர் படை
சண்டைகள்
  • பாண்டியர் போர் வெற்றி (பொ.ஊ. 1172)
    • பாண்டியர் போர் வெற்றி (பொ.ஊ. 1167)
    • கலிங்க படையெடுப்பு (பொ.ஊ. 1081-83)
    • இரண்டாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (பொ.ஊ. 1025-1028)
    • முதலாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (பொ.ஊ. 1022-1025)
    • கம்போஜா எனப்பட்ட கம்போடியா இணைப்பு (பொ.ஊ. ?-996)
    • இலங்கை மீது படையெடுப்பு (பொ.ஊ. 977 - )
    • பல்லவ கடற்படையுடன் மோதல்கள் (பொ.ஊ. 903 - 908)
  • தளபதிகள்
    சக்கரவர்த்திஅதிகாரமிக்க கட்டளைத் தளபதி
    குறிப்பிடத்தக்க
    தளபதிகள்
  • பட்டினத்துப்பிள்ளை - (சங்ககாலம்)
    • அமரபூஜங்கள் (பொ.ஊ. 12ம் நூற்றண்டு)
    • பீமசேனன் - கெடா முற்றுகையின் புகழ்பெற்ற கடற்படைத் தளபதி (பொ.ஊ. 11ம் நூற்றாண்டின் பிற்பகுதி)
    • கருணாகரன் - கடற்படைத் தளபதி/தளபதி (பொ.ஊ. 12ம் நூற்றாண்டின் பிற்பகுதி)
  • இடைக்காலச் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் கடற்படை அளவிலும் தரத்திலும் வளர்ந்தது. சோழக் கடற்படைத் தளபதிகள் சமூகத்தில் அதிகம் மதிக்கப்பட்டும் செல்வாக்குப் பெற்றும் காணப்பட்டனர். கடற்படையின் கட்டளைத்தளபதிகள் சில சந்தர்ப்பங்களில் அரசதந்திரிகளாகவும் செயற்பட்டனர். பொ.ஊ. 900 முதல் பொ.ஊ. 1100 வரை, சிறிய காயல் உட்பகுதிகளிலிருந்து ஆசியா முழுவதற்கும் அரசதந்திர அடையாளமாகவும் மிகுந்த வல்லமை நீட்சியாகவும் கடற்படை காணப்பட்டது. ஆனால், தென்னிந்தியாவின் ஆந்திர-கருநாடகத் தலைமை நிலப்பகுதிகளில் இடம்பெற்ற சாளுக்கியர்களை வென்றடக்குவதற்கான சண்டைகளினால் படிப்படியாக மேலாதிக்கத்தைச் சோழர் இழந்தனர்.[1]

    வரலாறு

    வரலாற்றாளர்கள் சோழ ஆட்சியினை மூன்று புரிந்துகொள்ளக்கூடிய கட்டங்களாகப் பிரிக்கின்றனர். முதலாவது காலகட்டம் முற்காலச் சோழர்கள் காலம். இரண்டாவது காலம் இடைக்காலச் சோழர்கள் காலமாகவும், கடைசிக் காலகட்டம் சாளுக்கியச் சோழர் காலமாகவும் உள்ளது.

    சோழர்கள் 9ம் நூற்றாண்டு அரைப்பகுதி முதல் 13ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை தங்கள் வல்லமையின் உயரத்தில் காணப்பட்டனர்.[2] முதலாம் இராஜராஜ சோழன், அவருடைய மகன் இராசேந்திர சோழன் காலத்தில் சோழப் பேரரசு ஆசியாவில் ஓர் இராணுவ, பொருளாதார, கலாச்சார சக்தியாக விளங்கியது.[3][4] 1010 முதல் 1200 வரையான காலப்பகுதியில் சோழரின் நிலப்பகுதிகள் மாலத்தீவுகளிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி ஆறு வரை விரிவடைந்தது.[5] இராஜராஜ சோழன் தென்னிந்தியா தீபகற்பத்தை வெற்றி கொண்டு, இலங்கையின் சில பகுதிகள் மற்றும் மாலத்தீவுகளின் கைப்பற்றப்பட்ட பகுதிகளை இணைத்தார்.[4] இராசேந்திர சோழன் அனுப்பிய வெற்றிகரமான திட்டமிடப்பட்ட பயணம் வட இந்தியாவின் கங்கை ஆறு வரை சென்று, பாடலிபுத்திரம் மகிபாலவின் பாலப் பேரரசை தோற்கடித்தது. அவர் அவுத்திரேலியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான மலாய் தீவுக்கூட்டப் பேரரவு மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தினார்.[6][7]

    ஆரம்ப நடவடிக்கை

    பொ.ஊ. 900 இல் சோழப் பேரரசும் அதன் அயலும்

    சங்க இலக்கியத்தில் ஆரம்ப காலச் சோழ அரசர்கள் பற்றித் தெளிவாகச் சான்றுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்விலக்கியம் பொது ஊழியின் முதற் சில நூற்றாண்டு காலத்திற்கு உரியது என்று பொதுவாக அறிஞர்கள் உடன்படுகின்றனர்.[8] சங்க இலக்கியம் அரசர்களினதும் இளவரசர்களினதும், அவர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்களின் பெயர்களாலும் நிறைந்து காணப்படுகின்றது. ஆயினும், மக்களின் வாழ்க்கையையும் வேலையையும் சித்தரிக்கும் உயர் இயக்கியம், வரலாற்றைப் பிணைக்க முடியாது உள்ளது.

    புராதன கடற்படை

    சோழர் கடற்படை செயற்பாடுகள் பற்றிய ஆரம்ப குறிப்பு பொ.ஊ. முதலாம் நூற்றாண்டு வெளி மூலங்களில் காணப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினம் (தற்போது பூம்புகார்) பற்றிய உரோமர் குறிப்பு எவ்வாறு அரசனின் கடற்படையினால் வாணிப கடற்கலங்கள் கடற்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டன என்றும் அது காவிரி ஆற்றின் வாயிலில் அமைந்த இயற்கைத் துறைமுகம் என்றும் விபரிக்கின்றது.[9]

    இக்கால கடற் ரீதியான செயற்பாடுகள் பற்றிய, சில அகழ்ந்தெடுக்கப்பட்ட மரத்தாலான அலங்காரத் தட்டு பழைய நகர் அருகில் இடம்பெற்ற கடல் நிகழ்வுகளின் சித்தரிப்பு தவிர்த்த சிறு தொல்பொருளியல் சான்றுகள் உள்ளன.

    ஆயினும், சோழ கடற்ச் செயற்பாடுகள்பற்றிய அதிகமான நுழைபுலம் செங்கடல் செலவிலிருந்து சேர்க்கப்பட்டது. இதில் குறிப்பிடப்படாத வர்த்தகர் பெறுமதியான பொருட்களுடனான வாணிப கடற்கலங்களுக்குத் துணையாகச் செல்லும் கப்பல்களின் செயற்பாடுகள் பற்றி விவரிக்கிறார். இந்த ஆரம்ப கால கடற்கலங்கள் ஒருவித ஆரம்ப நிலை நெருப்பு எறி கருவி அல்லது கவண் முறையிலமைந்த ஆயுதத்திணைக் கொண்டு காணப்பட்டது.[10]

    சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களின் கடற்படை எடுப்பில் பயன்படுத்திய கப்பல்களாகும். இவற்றில் காவிரிபூம்பட்டினத்தில் இருந்து பசிபிக் தீவுகள் வரையில் முற்காலச் சோழர்களால் கடற்பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன.[11][12] இவை மிகப்பெரியதாகவும் பெரிய அளவு பொருட்களைச் சுமந்து செல்வதற்கு ஏற்பவும் வடிவமைக்கப்பட்டிருந்தது.[13] இந்த கப்பல்களின் தலைவர் பட்டினத்துப்பிள்ளை ஆவார்.[14]

    இடைக்கால கடற்படை

    இடைப்பட்ட ஆட்சிக் காலம்

    சங்க கால (கிட்டத்தட்ட பொ.ஊ. 300) முடிவிலிருந்து ஏறக்குறைய மூன்று நூற்றாண்டு தமிழ் நாட்டைப் பாண்டியரும் பல்லவரும் ஆட்சி செலுத்திய காலம் (கிட்டத்தட்ட பொ.ஊ. 600) வரையிலான மாறுதலுக்குள்ளான காலம் சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இருண்ட அரசாட்சியான களப்பிரர் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஏற்கெனவே இருந்த அரசுகளை மாற்றிவிட்டு ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் ஆட்சி செய்தனர். இவர்கள் 6ம் நூற்றாண்டில் பல்லவராலும் பாண்டியராலும் நீக்கப்பட்டனர்.

    மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்ட வரையான காலப்பகுதி சோழர் கடல் வலிமைப் பாரம்பரியத்தின் குருட்டுப் புள்ளியாகவே காணப்பட்டது. ஆனால் இது பாண்டிய, பல்லவ சமகால செயற்பாடுகளிலிருந்து ஊகிக்க முடிகின்றது. வரவிருக்கின்ற மூன்று நூற்றாண்டு சோழர்களின் சரிவு காலப்பகுதியிலிருந்து 9ம் நூற்றாண்டின் இரண்டாம் காலண்டில் விஜயலாயனின் பதவியேற்பு வரை சிறிதளவே அறியப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஆட்சிக் காலத்தில், சோழர்கள் பல்லவர்களுக்குக் கீழ் இருப்பதைக் குறைத்து, பாண்டியருடன் பக்கம் உறவை ஏற்படுத்தி, பல்லவர்களின் நிலப்பிரபுத்துவ அதிகாரத்ததை ஒழிக்க முயன்றனர். ஆயினும், இதுபற்றிய திடமான குறிப்போ, பதிவோ இல்லை.

    எவ்வாறு இருப்பினும், சோழர்களின் அக்குறிப்பிட்ட காலத்தில் காவேரி ஆற்றில் உட்புறத்தே சிறிய ஆனால், குறிப்பிடத் தக்க கடற்படை பராமரித்து இருந்தனர். இக்கால கட்டத்தில் அவர்கள் கவேரி ஆற்றுப் பள்ளத்தாக்கில் உட்புற வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி, முசிறியை அவர்களின் முக்கிய உட்புற துறைமுகமாகக் கொண்டு காணப்பட்டனர். உலர் கப்பல் கட்டுமிடங்கள் இக்காலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றை இன்றும் காணக்கூடியதாகவுள்ளது.[15]

    பேரரசின் கடற்படை ஆழ்கடல் திறன்களுடன்

    முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் சோழப் பேரரசும் அதன் வல்லமையின் உச்சமும் (கிட்டத்தட்ட பொ.ஊ. 1050).

    இப்பகுதி வரலாறு சாசனங்கள், கல்வெட்டுகள் மற்றம் வெளிநாட்டு குறிப்புக்கள் என்பவற்றுக்கூடாகச் சிறப்பாக ஆவனப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக வரலாற்றாலர்கள் சோழர் கடற்படை செயற்பாடுபற்றிய இடைச்செருகல்களைச் சேர்க்கக் கூடியதாகவுள்ளது.

    விஜயலாய அரசின் எழுச்சியுடன் சோழ வல்லமையின் விளைவாகச் சோழர் கடற்படை அதன் வடிவத்தைப் பெறலாயிற்று. பல்லவர் ஆட்சிக் காலத்தில் சோழர் நிலப்பகுதிகளை மட்டுமல்லாது கலாச்சார, சமூக பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். இடைக்காலச் சோழர் பல்லவரிடமிருந்து வாணிப, கடல் கட்டுப்பாடு ஆதிக்கத்தைப் பெற்றனர்.

    பல்லவ கடற்படையின் அபிவிருத்தியில் போர்க்கப்பல் பரிணாமம், கடற்சார் கட்டமைப்பு ஆகியன முக்கிய பங்காற்றின. மலாய் தீபகற்பத்தில் தமிழருக்கான நண்பரை உருவாக்கித் தென் கிழக்காசியாவில் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த பல்லவ அரசன் சிம்மவிஷ்னுவினால் காத்திரமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆயினும், சோழரின் கடற்படைப் பலத்தினால் இது மூன்று நூற்றாண்டுகள் வரையே நீடித்தது.

    சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தனுடனான மூன்று நூற்றாண்டு கால முரண்பாடு முதலாம் இராஜராஜ சோழன் (985-1014) முடியேற்புடனும் அவனது வெற்றிகரமான கடற்படையின் பாவனையினாலும் திருப்பமானதொரு முடிவுக்குக் கொண்டு வந்து சிங்கள அரசனை அடக்கச் செய்தது.

    இக்காலம் பழைமையான பாரம்பரியங்களிலிருந்து விடுபட்டுச் சிந்திக்கவும் செய்தது. இராஜராஜ சோழன் பல வெளிநாட்டவர்களை (குறிப்பாக அராபியாகள், சீனர்கள்) கடல்சார் கட்டுமான திட்டத்தில் நியமித்தான்[16] இம்முயற்சி தொடர்ந்ததன் விளைவால் இராஜராஜ சோழனுக்குப் பின் முடிசூட்டிக் கொண்ட முதலாம் இராசேந்திர சோழனினால் அதன் பயனைப் பெறக்கூடியதாகவிருந்தது. இராசேந்திர சோழன் வெற்றிகரமாக சிறீவிஜயத்திற்கெதிராக (தற்போதைய இந்தோனேசியா) சென்று சலிந்திராவை அடக்கச் செய்தது.

    வணிகம், வர்த்தகம், அரசியல் சாதூரியம்

    9ம் நூற்றாண்டு நெருப்பு வீசும் சீனக் கருவி வடிவமைப்பை ஒத்தவற்றை சோழர் கடற்படை பயன்படுத்தியது

    சோழர் கடல்சார் செயற்பாடுகளை அதிகரித்து, சீனா, தெற்கிழக்காசியா வரை அதை விரிபுபடுத்தினர்.[17] சுமாத்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ச் சாசனம் "நனதேச திசையய்யாயிரத்து ஐந்நூற்றுவர்" என்ற சோழ நாட்டின் புகழ்பெற்ற வணிக சங்கத்தைக் குறிப்பிட்டது.[18] 1088ம் ஆண்டுக்குரிய இச்சாசனம் சோழர்களின் கடற்சார் வர்த்தக செயற்பாட்டைக் குறிப்பிடுகின்றது.[19]

    9ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து தென்னிந்தியர்கள் சீனர்களுடனும் ஆராபியர்களுடனும் சேர்ந்து கடல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொண்டனர்.[18][20] சோழர் இந்திய தீபகற்ப மேற்கு மற்றும் கிழக்கை தங்களுக்குரியதாக்கி, முன்னனி வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.[21][22][23] சீனாவின் தாங் அரசமரபு, சைலேந்திரர்களின் சிறீவிஜயம், பக்தாத்தின் அப்பாசியக் கலீபகம் என்பன சோழர்களின் பிரதான வர்த்தக பங்காளிகளாகவிருந்தனர்.[24]

    சீனருடனான வணிகம் மிகவும் ஆதாயம் மிக்கதாகவிருந்தது. வெளிநாட்டு வணிபம் செய்ய அரசனின் அனுமதியையும் சுங்கத் துறையிடமிருந்து அனுமதிப் பத்திரமும் பெற்றிருக்க வேண்டியதாயிருந்தது.[25] அக்கால வணிபம் மூன்று வழிப் பயணம் மிக்கதாயிருந்து. இந்தியப் பொருட்கள் (காரச்சுவைப் பொருட்கள், பஞ்சு, இரத்தினம்) சீனாவுக்கு கப்பலில் அனுப்பப்பட்டு, சீனாவிலிருந்து பொருட்கள் (பட்டு, நறுமணப்பொருள், இரும்பு) கொண்டுவரப்பட்டு, சோழர்களின் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. உள்ளூர் தேவைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் மிகுதி மற்றும் இந்தியப் பொருட்கள் அராபியருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

    தென்கிழக்காசியாவில் கடற்கொள்ளையருடன் சண்டை

    சீன மற்றும் அரேபிய துறைமுகங்களுக்கு இடையேயான வர்த்தக பாதையின் மத்திய மையமான சிறீவிஜயம் மற்றும் கம்போஜ் (தற்போது கம்போடியா) தந்திரோபாய இடம் நெருக்கடிமிக்கதாகவிருந்தது. 5வது நூற்றாண்டுவரை, அரேபியர்கள் சீனாவுடனான வர்த்தகத்திற்கு நேரடியாகச் சிறீவிஜயத்தை துறைமுகமாக, முழுமையான மையப்பகுதியாகப் பயன்படுத்தினர். தங்கள் முக்கியத்துவத்தை உணர்ந்த சிறீவிஜய பேரரசு சுற்றியுள்ள பகுதியில் கடற்கொள்ளையை ஊக்குவிக்கத் தொடங்கியது.[26] இரண்டு மடங்கு ஆதாயமும், கடற்கொள்ளையும் நல்ல கொடையாகவும், இது வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினரிடமிருந்து அவர்களின் இறையாண்மை மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றிக்கு உறுதியளித்தது.[26] சிறீவிஜய அரியணைக்கான முரண்பாடு, அதற்கான இரு இளவரசர்கள் சண்டையிட்டது கடற்கொள்ளை பலமாக வளர வழிகோலியது. அவர்களின் உள்நாட்டுப் போருக்காகக் கடற்கொள்ளையில் தங்கியிருந்தனர்.[26]

    கடற்கொள்ளையர்களின் அபாயம் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வளர்ந்தது. ஒவ்வொரு கடற்பயணத் தொடரின்போதும் 1/3 இழப்பு இல்லாமல் சீனாவுடனான கடல் வர்த்தகம் சாத்தியம் இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு கடற்பயணத் தொடரின்போதும் தாக்குதல்தலுக்குள்ளானது புது காரணியாக இருந்தது. சிறீவிஜயம் கடற்கொள்ளையை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர நடவடிக்கைகள் சிறிய விளைவுகளைக் கொண்டுவந்தது. கடற்கொள்ளை எழுச்சியுடன், சீன வணிகப் பொருட்கள் இன்மை, சோழர் தங்கள் குதிரைப்படைப் பிரிவுக்கான குதிரைகளுக்கு அரேபியர்களைச் சார்ந்தது என்பன அவர்களின் வர்த்தகத்திற்கு அதிக விலையை அதிகரித்து. இதனால் சோழர் படையைக் குறைக்க வழி ஏற்படுத்தியது.[27] சீனர் இதேயளவிற்கு கடற்கொள்ளையர்களின் அபாயத்தினால் சீற்றமுற்றிருந்தனர்.

    பல்லவர் மற்றும் சோழர்களின் மூன்று நூற்றாண்டு உச்சக்கட்ட இணைந்த கடற்படை மரபுகள் சோழ கடற்படையின் மிகவும் பிரபலமான சாதனைக்கு வழிவகுத்தது.[28] மலாய் தீபகற்பம் நோக்கிய சோழ கடற்படையின் முதலாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் இதற்குக் குறிப்பிடலாம்.

    சீனருடன் ஒத்துழைப்பு

    சுலியன் (சோழர்) தூதரகம் சீன நீதிமன்றத்தை 1077 இல் அடைந்ததாகச் சீன சொங் அரசமரபு அறிக்கை குறிப்பிடுகின்றது.[19][29][30] அக்காலத்தில் இருந்த சோழ அரசனின் பெயர் டி-குவா-கியா-லோ.[31] இது "தேவ குலோ[துங்கன்]" (முதலாம் குலோத்துங்க சோழன்) என்பதைக் குறிக்கிறது. இத்தூதரக துணிச்சலான வணிப செயற்பாடு, வடிக்கையாளர்களுக்கு உயர் இலாபத்தைக் கொடுத்தது. இதனால் கண்ணாடி, காரச் சுவைப் பொருட்கள் உட்பட்ட பொருட்களுக்கு மாற்றுப் பண்டமாக அவர்களிடமிருந்து 81,800 செப்பு நாணயக் கம்பிகள் பொறப்பட்டன.[32]

    சொங் அரசமரபு மற்றும் இடைக்காலச் சோழர்கள் ஆகியவற்றுக்கிடையிலான நெருங்கிய அரசியல் சாதூரியம் பல நுட்ப முயற்சிகளுக்கு இரு வழியிலும் துணை புரிந்தன. இதில் குறிப்பிடத் தக்க விடயங்களாவன:

    • பிரபல்யமான சோழ கப்பல் வடிவமைப்பு கப்பலின் உடற்பகுதியில் தனித்த நீர் இறுக்க பிரிவுகளைக் கையாண்டது.
    • ஈரூடகப் படையின் திசைகாட்டி
    • கடற் சண்டையில் தொடர்ச்சியாகச் சுடக்கூடிய நெருப்பு வீசும் கருவி.[33]

    அமைப்பும் நிர்வாகமும்

    ஆரம்பத்தில் சோழர் சிறிய கடற்கலங்களை வடிவமைத்திருந்தனர். ஆயினும், இது வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்பு, கடற்படை சிறப்பு படையாக ஒவ்வொருவிதமான சண்டைக்கு ஏற்பவும் கப்பல்களைக் கட்டினர்.

    இடைக்காலச் சோழர்களின் கடற்படை தன் கட்டளையின் கீழ் பல எண்ணிக்கையான படைகளைக் கொண்டிருந்தது. இயல்பான கடற்படைக்கு (கப்பல் படை) மேலதிகமாகச் சண்டையில் பயன்படுத்தத் துணைப்படைகளையும் அது கொண்டிருந்தது. சோழர் கடற்படை அதன் சமகாலப் படைகள் போலல்லாது சுய ஆட்சியுரிமை சேவையைக் கொண்டிருந்தது. தரைப்படை போக்குவரத்திற்கும் விநியோகத்திற்கும் கடற்படையின் போர்க்கப்பற் படையில் தங்கியிருந்தது. கடற்படை ஈரூடக அணியையும் கொண்டிருந்தது. முத்துக்குளிப்போராகப் பயிற்றப்பட்ட நாசகார வேலையில் ஈடுபடுவோர் எதிரியின் கடற்கலங்களின் சுக்கனை அழிக்க அல்லது சேதப்படுத்த பயன்படுத்தப்பட்டளர்.[33]

    சோழர் கடற்படை பின்வரும் போர் அல்லது போரற்ற செயற்பாடுகளை முன்னெடுத்தனர்.

    • கடற்கொள்ளையினைத் தடுக்கும் சமாதான கால சுற்றுக்காவல் செய்தல்.
    • வாணிப கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளித்தல்.
    • நட்பு கடற்கலங்களுக்கு பாதுகாப்பு அளித்தல்.
    • தாயக துறைமுகத்திற்கு அருகிலும் ஆழ்கடலிலும் கடற்சமர் புரிதல்.
    • கடற்கரை முகப்புக்களை உருவாக்குதல் அல்லது தேவையான நேரத்தில் படைக் குவிப்பைச் செய்தல்.
    • நேசநாட்டின் எதிரிகளுக்குப் பயணத் தடை ஏற்படுத்தல்.
    • எதிரியின் கடற்கலங்களை நாசப்படுத்தல்.

    இந்தப் பல பரிமானங் கொண்ட படை சோழர்கள் தங்கள் பரந்த மேலாட்சியில் இராணுவ, அரசியல் மற்றும் கலாச்சாரத் திறனை அடைய உதவியது.

    நிர்வாகம்

    அரசன்/சக்கரவர்த்தி கடற்படை உட்பட்ட சகல படைத்துறைக்கும் ஒப்புயர்வற்ற தலைவராகக் காணப்பட்டார்.

    கடற்படை பங்கு வகிப்பு அடிப்படையில் படைப்பிரிவாகவும், குழுக்களாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, கப்பல்களும் துறைமுகங்களும் ஒதுக்கப்பட்டிருந்தது. இவ் நடைமுறை தேவையானதாக, குறிப்பாக இலங்கை மீதான வெற்றியின் பின் மாறியது. பொதுவாக கனம் (போர்க்கப்பல் படைப்பிரிவு) கனபதியால் கட்டளையிடப்பட்டது.

    கடற்படை பல உப பிரிவுகள் நடவடிக்கை, அமைப்பு போன்ற காரணங்களுக்காகக் காணப்பட்டன. அவற்றில் சில பின்வருமாறு:

    படைப்பிரிவின் பெயர்கட்டளையிடுபவர்தற்கால தரம்குறிப்புசெயற்பாடு
    கண்ணி - போர்க்கால தேவைக்கான அமைப்புமேல்நிலை களபதி, பொதுவாக களபதி கப்பலின் கட்டளை அதிகாரி தரம் உள்ளவர் (கப்டன்)ஐந்திற்கு மேற்படாத கப்பல்கள்தந்திரோபாய அமைப்பு, இது குறித்த இடத்திற்கு எதிரியை தந்திரமாக கொண்டுவர பயன்பட்டது. பெரிய அமைப்பு (பொதுவாக தளம்) கப்பல்கள் எதிரிக்காகப் பதுங்கியிருக்கும்.தந்திரோபாய நடவடிக்கையின்போது, எதிரியை பிரதான சண்டைக்கு உட்படுத்து முன் அமைப்பு பல தடவைகள் பயன்படுத்தப்படும். பெரிய கப்பல்கள் தாமதித்தால், பெரிய இழப்பு இவ்வமைப்புக்கு நேர்ந்தது.[34]
    ஜலதளம் அல்லது தளம் - நிரந்தர அமைப்பு.ஜலதளதிபதி - தளத்தின் தலைவர்5 பிரதான போர்க்கப்பல்கள், 3 துணை மற்றம் விநியோக கப்பல்கள், 1 அல்லலது 2 தனியார் படைக்கப்பல்கள் கொண்ட சிறிய சுய உறுதியுடைய கடற்படை அமைப்பு. தளம் புலனாய்வு, சுற்றுக்காவல், வழிமறிப்பு போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும்.பொதுவாக, 2-3 தளம் வேவு, தாக்கியழித்தல் ஆகியவற்றக்கு அகன்ற இடத்தில் பயன்படுத்தப்படும். பூரணமாக ஆயுதந்தரித்த தளம் அதனைவிட இருமடங்கு எதிரியை எதிர்த்து தாக்கவல்லது என கருதப்படுகின்றது. இதற்கான காரணம் சோழரிடம் காணப்பட்ட ஆயுத பலமாகும்.
    மண்டலம் - அரை நிரந்தர அமைப்பு. போர் மற்றும் வெளிநாட்டு படை நிறுத்தத்திற்காகப் பயன்படுத்தப்படும்.மண்டலதிபதி - மண்டலத்தின் தலைவர்அதிரடிப் படைக்கு அல்லது போர்ப்படைக் குழுவுக்குச் சமம்பல பணிகளுக்காக 40-50 கப்பல்கள் கொண்டது.இவை தனி சண்டைப் பிரிவாக, குறிப்பாக அபாயகரமான ஆழ் கடல் நடவடிக்கைகளுக்கு பயன்பட்டன.
    கனம் - நிரந்தர அமைப்புகனதிபதி - கனத்தின் தலைவர், தற்கால கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம்போர்க்கப்பல்களின் படைப்பிரிவுபல பணிகளுக்காக 100-150 கப்பல்கள் கொண்டது. ஒரு கனம் மண்டலங்களைக் கொண்டதுபோர்க்கப்பல்களின் படையைவிடக் குறைந்த, தற்சார்ரபுள்ள படையணி. சண்டை, வேவு, விநியோகம், மீள் வழங்கள்/திருத்தம் செய்தல் பிரிவு.
    அணிஅணிபதி - அணியின் தலைவர்அதிரடிப்படை அல்லது போர்ப்படைக் குழுகுறைந்தது 3 கனங்களைக் கொண்டது. பொதுவாக 300-500 கப்பல்கள் கொண்டது.சாதாரண அமைப்பைவிட விரைவு கட்டளையுடையது. ஆனால், நீண்ட படை நிறுத்தத்தின்போதும் இவை பயன்பட்டன.[35]
    பிரிவுபொதுவாக இளவரசரால் அல்லது அரசருக்கு நம்பிக்கையானவரின் கீழ் இயங்குபவை. போர்க்கப்பல்களின் படை கடலில் தரிக்கும் இடத்திற்கேற்ப பெயர் அமைந்தன. உதாரணமாக, கிழக்கு போர்க்கப்பல்களின் படைத்தலைவர் பெயர் அவருக்கு ஏற்ப கீழ்ப்பிரிவு-அதிபதி அல்லது நாயகன் அல்லது தலைவன்/ர் என அமையும்.போர்க்கப்பல்களின் படைஇவை தற்கால போர்க்கப்பல்களின் படை போன்று செயற்பட்டன. சோழ கடற்படையில் இரண்டு அல்லது நான்கு போர்க்கப்பல்களின் படைகள் காணப்பட்டன. கிழக்கில் முக்கிய போர்க்கப்பல்களின் படை தளமாகக் கொண்டது. பின்பு இரண்டாவது போர்க்கப்பல்களின் படை இலங்கையைத் தளமாகக் கொண்டது. முதலாம் இராஜேந்திரனின் பின் மூன்று முதல் நான்கு போர்க்கப்பல்களின் படைகள் காணப்பட்டன.சேரரின் கடற்படை எழுச்சி வருவாயில் சிறு இழப்பை ஏற்படுத்தி, சோழர்களை நிரந்தரமாக மலபாரில் போர்க்கப்பல்களின் படை நிறுத்தச் செய்து, கூலி கடற்படையின் உதவியுடன் தந்திரோபாய வடிவமைப்பை உருவாக்கச் செய்தது.

    பதவித் தர கட்டமைப்பு

    கவனத்திற்கு: உசாத்துணைற்று, கற்பனையில் நிகழ்பட விளையாட்டுக்காக உருவாக்கப்பட்ட சோழ ஈரூடகப் படை வீரர்கள்

    சோழர் கடற்படை கலப்பு பதவிக் கட்டமைப்பு கொண்டிருந்தது. அவர்கள் கடற்படை பதவிகளையும், தரைப்படையிலிருந்து பெறப்பட்ட பதவிகளையும் கொண்டிருந்தனர்.[36] சோழர் கடற்படையானது கடற்படை பதவி மற்றும் தரைப்படை பதவி முறைகளைப் பயன்படுத்தியது. தற்கால பதவி முறைகளும் அவர்களால் பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, தரைப்படை கப்டன் கடற்படை லெப்டிணட் தரத்திற்கும், கடற்படை கப்டன் தரைப்படை கேணல் தரத்திற்கும் சமமானது. மற்றவை முற்றிலும் வேறுபட்டன. சில பதவித் தர ஒப்பீடுகள் பின்வருமாறு:

    • மிகச்சிறந்த படைத்தலைவர் :சக்கரவர்த்தி - பேரரசன்
    • கடற்படையின் கட்டளை அதிகாரி :ஜலதிபத்தி - கடற்படையின் கடற்படைத் தலைவருக்குச் சமம்
    • போர்க்கப்பல்களின் படைத்தலைவர் : பிரிவு+ அதிபதி அல்லது தேவர்/ன் அல்லது நாயகன் - கடற்படை துணைத் தலைவருக்குச் சமம்
    • போர்க்கப்பல்களின் படைப்பிரிவு படைத்தலைவர்  : கனதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம்
    • குழு படைத்தலைவர்  : மண்டலதிபதி - கடற்படை துணைத் தலைவருக்கு அடுத்த அதிகாரிக்குச் சமம்
    • கப்பல் படைத்தலைவர்  : கலபதி - கப்டன் தரத்திற்குச் சமம்
    • கப்பலின் ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி : காப்பு - ஆயுதங்களுக்களுக்கான அதிகாரி
    • கப்பலோட்டிகளின் பொறுப்பதிகாரி  : சேவை - மூத்த மற்றும் பொறியியல் அதிகாரி
    • தரையிறக்க பொறுப்பதிகாரி (ஈரூடக அணி) : ஈட்டிமார் - ஈரூடக அணி மேஜர் அல்லது கப்டன்

    ஏனைய கடற்படைசார் பிரிவுகள்

    சோழ கடற்படையின் துணை படைகள்: அரச கடற்படையைக் கொண்டிருந்த சோழர் மற்ற சேவைகளாகக் கடலுக்குரிய தங்கள் சொந்த பிரிவுகளைக் கொண்டிருந்தனர். இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகச் சுங்கத் திணைக்களம், குடிப்படை, முத்துக் குளித்தலுக்கான பிரத்தியோக அரச உரிமையைக் கொண்டிருந்தனர். இந்த அரச சேவைகளுடன் சிறிய ஆனால் வல்லமைமிக்க படைகள் பல்வேறு வர்த்தக கழகங்களினால் பராமரிக்கப்பட்டன. இக்கழகங்கள் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, தேவையான காலங்களில் கூலிப்படையாகவும் வலிமையூட்டவும் பயன்படுத்தப்பட்டன.[37]

    சுங்கம் மற்றும் தீர்வை

    சுங்கு (சுங்க இலாகா) என அழைக்கப்பட்ட சுங்கப் பிரிவு மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்டு, புராதன உலகில் அவ்வாறு ஒன்று இல்லாதவாறு தனித்துவம் பெற்றிருந்தது. இது இயக்குனர் தளபதியின் கீழ் இயங்கியது. அவர் தலை-திறை என அழைக்கப்பட்டார். இப்பிரிவு மிகவும் வளர்ச்சியடைந்த, கொண்டிருந்தது பல்வேறு துறைகளைக் கொண்டிருந்தது.[38]

    கடலோர காவலர்கள்

    12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கடற்படை சோழரின் வர்த்தக, சமய, அரசியல் விருப்பங்களுக்காகத் தொடர்ச்சியாக சண்டையிட்டது. இதனால் தாய்நாட்டு துறைமுகம் பாதுகாப்பற்றுக் காணப்பட்டது. இது கடற்படையின் தந்திரோபாயத்தை மாற்றச் செய்து, பெரிய கலங்களைப் படைப் பெருக்கத்திற்கு அழைக்க நேரிட்டதால், பெரிய எண்ணிக்கையில் பாரிய ஆயுதந்தரித்த இலகு கப்பல்கள் துணைப் படையின் மேம்பாட்டிற்கு வழிவகுத்தது. முன்பு, கரைப்பிரிவு இத்தேவையின் இயற்கைத் தெரிவாகவும் சோழர் பிரதேச நீர்கள், தாய்நாட்டுத் துறைமுகங்கள், புதிதாகக் கைப்பற்றிய துறைமுகங்கள் மற்றும் கரையோர நகரங்களின் சுற்றுக் காவல் ஆகிய பொறுப்புக்கள் கொண்ட படையாகக் காணப்பட்டது.

    தனியார் படைகள்

    பெறுமதிமிக்க வெளிநாட்டுப் பரிமாற்றத்திற்காக அரசு வெளிநாட்டு வர்த்தகத்தில் தங்கியிருந்தமை சக்தி வாய்ந்த வர்த்தக சங்கங்களை உருவாக்கி, அவற்றில் சில பிராந்திய ஆளுனர்கள் விடச் சக்தி வாய்ந்த வளர்ந்தது.[39] சர்வதேச வணிகத்தின் போட்டிக்களப் பெருக்கத்தினால் ஆழ்கடலில் சிரமங்களில் சிக்கிய வணிக கப்பல்களைக் காப்பாற்றல், வலுப்படுத்தல் உதவி ஆகியவற்றை உரிய காலத்தில் செய்வதில் அரசு சிரமங்களை எதிர்நோக்கியது. இனால் தனியார் கடற்படைகளை உருவாக்க வேண்டியதாயிற்து. ஐரோப்பியர்களைப் போல இவர்களுக்கு எந்தத் தேசிய அடையாளங்களும், பல்தேசிய குழுக்களும் இல்லை.

    ஆனால், அவர்கள் பேரரசுகளைவிட வர்த்தக சங்கங்களினால் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். பொதுவாக, அவர்கள் பாதையைக் கண்டறிதல், வழித்துணை மற்றும் பாதுகாப்பு கடமைகளைச் செய்தனர். ஆயினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் இவர்கள் பேரரசு நலன்களுக்கு வேலை செய்ய அழைக்கப்பட்டிருந்தனர். வர்த்தக சங்கங்கள் வேலைக்கமர்த்திய குறிப்பிடத் தக்க தனியார் கடற்படைகள் காணப்பட்டன.

    கடற்கலங்களும் ஆயுதங்களும்

    13ம் நூற்றாண்டு சொங் அரசமரபு பாய்மரக்கப்பல்கள் தண்ணீர் உட்புகுதலை தடுக்க ஏற்றவாறு அடித்தளங்களைக் கொண்டிருந்தன. இவ்வகைக் கப்பல்களில் சில சோழ கடற்படை பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.[40]

    பொ.ஊ.மு. 1 ம் நூற்றாண்டுக்கு முன்னர் கப்பல் கட்டுதல், போர்ப்படகுகள் பற்றி அவர்கள் எழுதியிருந்தனர். பொ.ஊ.மு. 2 ஆம் நூற்றாண்டில் கடற்படை கட்டிடக்கலை பற்றிய ஒரு விரிவான புத்தகம் இந்தியாவில் இருந்தது என்று பேராசிரியர் ஆர். சி. மயும்தர் கூறுகிறார்.

    ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மகனின் ஆட்சிக்காலத்தில் சிக்கலான வகைப்பாட்டுக் கடற்கலங்கள வகைள் மற்றும் அதன் பயன்பாடு என்பன இருந்தன. அவற்றில் எஞ்சிய கடற்கள வகைகளின் பெயர் மற்றும் பயன்பாட்டு என்பன கீழ் வருமாறு.[41]

    • தாரணி - ஆழ்கடல் போருக்காக வடிவமைக்கப்பட்ட தற்கால அழிப்பு கடற்கலங்களுக்குச் சமமானது.
    • லூலா - சிறு போர் மற்றும் வழித்துணை கடமைகளைச் செய்ய வடிவமைக்கப்பட்ட தற்கால வழித்துணைக்கப்பல்களுக்குச் சமமானது.
    • வஜிரா - சிறியளவு ஆயுதம்தரித்த, விரைவுத் தாக்குதல் போர்க்கப்பல்.
    • திரிசடை - பெரியளவில் ஆயுதம் தரித்த இரண்டுக்கு மேற்பட்ட இலக்குகள் சண்டையிடக்கூடிய என அறிக்கையிடப்பட்ட போர்க்கப்பல்கள் அல்லது போர்க்கலங்கள். இவை வேகம் மற்றும் தாக்குதல் என்பவற்றைவிட அதன் கட்டுமானத்தில் தங்கியிருந்தன.[42]

    அக்காலக் கப்பல்கள் ஒரு சிறிய ஈரூடகப்படையை வேலைக்கமர்தியபோதும், இவ்வகைக் கப்பலில் அவர்களுக்குத் தனி அறைகள் மற்றும் பயிற்சி பகுதியில் என்பவற்றைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.[43] இக்கப்பல் சமநிலையற்ற போர் நடவடிக்கை ஈடுபடக்கூடியது என்று கூறப்படுகிறது.

    இவ்வகை கடற்களங்களைத்தவிர அரச உல்லாசப்படகுகளும் இருந்தன. அவை பின்வருமாறு:

    • அக்ரமண்டம் - பின்பகுதியில் அரச தங்குமிடத்துடன் கூடிய அரச உல்லாசப்படகு.
    • நீலமண்டம் - நீதிமன்றங்கள் நடத்தக்கூடிய, உயர் அதிகாரிகள் / அமைச்சர்கள் தங்கக்கூடிய விரிவான வசதிகள் கொண்ட அரச உல்லாசப்படகு.
    • சர்ப்பமுகம் - நதியில் பயன்படுத்தப்பட்ட சிறிய உல்லாசப்படகு (அலங்கார பாம்பு தலையைக் கொண்டிருந்தன)

    இவை தவிர, கடலிலும் தரைப்பகுதி நீர்ப்பகுதிகளிலும் பயன்படக்கூடிய பல கப்பல் வகைகளையும் அவற்றின் பயன்பாட்டையும் புறநானூறு குறிப்பிடுகின்றது. அவை பின்வருமாறு:

    • இயந்திரம் - சக்கரங்கள் நடைமுறைப்படுத்தும் இயந்திர துடுப்புகள் கொண்ட கலப்பினக் கப்பல்.
    • கலம் - மூன்று பாய்மரங்கள் கொண்ட காற்றுத் திசையைப் பொருட்படுத்தாது பயணிக்கக்கூடிய பெரிய கப்பல்கள்.
    • புனை - கடலோர கப்பல் மற்றும் தரைப்பகுதி நீர்நிலைகளில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர அளவிலான கப்பல்.
    • பற்றி - வர்த்தக பொருட்களை நீர்நிலைகளில் ஏற்றிச் செல்லக்கூடிய பெரிய படகு
    • ஓடம் - பெரிய துடுப்புகள் கொண்ட சிறிய படகு
    • அம்பி - ஒற்றைப் பாய்மரம், துடுப்பு என்பவற்றுடன் கூடிய நடுத்தர அளவிலான படகு.
    • தோணி - பாறைப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சிறிய படகு.

    போர் நடவடிக்கைகள்

    சோழர் கடற்படை 500 வருடங்களாகப் போரில் ஈடுபட்டுள்ளது.[44] இதில் தொடர்ச்சியான சிறு சண்டைகள் முதல் போர்கள்வரை அடங்கும். தீபகற்பத்தை கட்டுப்படுத்த பாண்டியருக்கும் சோழருக்கும் இடையிலான 5ம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட முரண்பாடு பல கதைகளையும் நாடோடிக் கதைகளயும் உருவாக்கியது. குறிப்பிடத் தக்க போர் நடவடிக்கைகள் பின்வருமாறு:[45][46][47]

    • பாண்டியர் போர் வெற்றி (பொ.ஊ. 1172)
    • பாண்டியர் போர் வெற்றி (பொ.ஊ. 1167)
    • பாலி போர்க் கப்பல்கள் அழிப்பு (பொ.ஊ. 1148)
    • கலிங்க படையெடுப்பு கடற் சண்டைகள் (பொ.ஊ. 1081-83)
    • இரண்டாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (பொ.ஊ. 1025-1028)
    • முதலாவது சிறீவிஜயம் திட்டமிட்ட பயணம் (பொ.ஊ. 1022–1025)
    • கடாரம் மீதான சோழர் படையெடுப்பு (பொ.ஊ. 1024-1025)
    • கம்போஜா எனப்பட்ட கம்போடியா இணைப்பு (பொ.ஊ. ?-996)
    • இலங்கை மீது படையெடுப்பு (பொ.ஊ. 993–1077)
    • பல்லவ கடற்படையுடன் மோதல்கள் (பொ.ஊ. 903–908)

    ஆட்சேர்ப்பும் சேவையும்

    கப்பற்படைத்தலைவர்கள் கடற்படை வீரர் ஆட்சேர்ப்பு, பயிற்சி போன்ற விடங்களில் சுதந்திரமாகச் செயற்பட சோழ சக்கரவர்த்திகள் அனுமதி அளித்திருந்தனர். அங்குச் சிக்கலான சோதனைகள் மற்றும் மதிப்பீடு இருக்கவில்லை. எக்குடிமகனும் அல்லது குடிமகன் அல்லாதவரும் கடற்படை சேவையில் சேர முடியும்.

    துறைமுகம், போர்க்கப்பல்கள்

    சோழர்களால் பயன்படுத்தப்பட்ட மிகப் புராதன துறைமுகமாக காவிரிப்பூம்பட்டினம் விளங்கியது. பின்பு அவர்கள் மேலும் பல துறைகங்களை பயன்படுத்தவும், புதிதாகக் கட்டவும் செய்தனர். அவற்றில் சில முக்கிய துறைமுகங்களாவன:

    இலக்கியத்திலும் பண்பாட்டிலும்

    சங்க கால கவிதை முதல் கலிங்கத்துப்பரணியில் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்க படையெடுப்பு வெற்றி கொண்டாட்டம்வரை புகழ்பாடுகின்றது. பரணி சிறப்பு இலக்கிய கையில் ஒன்றும் பாரம்பரியத்தின்படி போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் அரசன் அல்லது தளபதியின் படைமீது பாடப்படுவது ஆகும்.

    தற்காலத்தில் தமிழ் இலக்கியத்தில், சோழர் கடற்படையின் சில காதல் கதைகளும் இடம்பெற்றுள்ளது.

    ராஜாளி: டாக்டர் எல். கைலாசம் எழுதிய புதினம் சோழருக்கும் சேரநாட்டவருக்கும் நடந்த யுத்தத்தை பற்றி விரிவாக சொல்லுகிறது. இந்த புதினம், கருணாகரப் பல்லவர் கடற்படையை நிர்வகிப்பதிலும், சோழ யுத்தக் கலக் கட்டுமானத்திலும் எவ்விதம் சேரரை வெல்ல குலோத்துங்க சோழருக்கு உதவினார் என்பதை சொல்கிறது.

    • யவன ராணி: சாண்டில்யன் எழுதிய புதினம். 1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கரிகாலன் வரலாறுபற்றி எடுத்துரைக்கின்றது.
    • பொன்னியின் செல்வன்: கல்கி எழுதிய புகழ் பெற்ற புதினம். பொ.ஊ. 1000 ஆம் ஆண்டு காலத்தில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
    • கடல் புறா: சாண்டில்யன் எழுதிய புதினம். சிறீவிஜயம் நாட்டிலிருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் உதவுவது கதையின் ஒரு பகுதி. இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர்.
    • கன்னி மாடம்: சாண்டில்யன் எழுதிய புதினம். பாண்டிய உள்ளநாட்டுச் சண்டைகள் பற்றியும், சிங்களவர்களுக்கும் சோழர்களுக்கும் இடையிலான போர் பற்றியும் விபரிக்கின்றது. இதில் போர் தந்திர முறைகள்பற்றிய விபரமும், வெளிநாட்டுச் சண்டையில் கடற்படையின் வல்லமை மற்றும் விநியோக முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிடுகின்றது.
    • ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் இயக்கத்தில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் நாடுகடத்தப்பட்ட சோழ இளவரசனை தேடுவது பற்றியது.

    இவற்றையும் பார்க்க

    உசாத்துணை

    வெளி இணைப்புக்கள்

    "https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சோழர்_கடற்படை&oldid=3606152" இலிருந்து மீள்விக்கப்பட்டது
    🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்