மலாய் தீபகற்பம்
மலாய் தீபகற்பம் (Malay Peninsula, மலாய்: Semenanjung Tanah Melayu, தாய் மொழி: คาบสมุทรมลายู) தென்கிழக்காசியாவில் உள்ள மூவலந்தீவு ஆகும். ஏறத்தாழ வடக்கு-தெற்காக அமைந்துள்ள இந்நிலப்பகுதியின் தென்கோடி முனை ஆசிய நிலப்பகுதியின் தென்கோடி முனையாக விளங்குகிறது. இதில் மியான்மர், மலேசியத் தீபகற்பம், தெற்கு தாய்லாந்தின் தென்கோடி முனைகள் அடங்கியுள்ளன.
தெனாசெரிம் மலைகளின் அங்கமான தித்திவாங்சா மலைகள் இத்தீபகற்பத்தின் முதுகெலும்பாக விளங்குகின்றன.[1] மலாக்கா நீரிணை மலாய் தீபகற்பத்தையும் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவையும் பிரிக்கிறது. யோகார் நீரிணை தென் கடற்கரையை சிங்கப்பூர் தீவிலிருந்து பிரிக்கிறது.
அரசியல் பிரிவுகள்
மலாய் மூவலந்தீவு மூன்று அரசியல் பிரிவுகளாகப் பிரிபட்டுள்ளது. அவையாவன:
- வடமேற்குப் பகுதி மியான்மரின் தென்கோடிப் பகுதியாகும்;
- நடுப்பகுதியும் வடகிழக்கும் தாய்லாந்தின் தென்பகுதியாகும்;
- இந்த மூவலந்தீவின் தெற்குப் பகுதி மலேசியாவின் பகுதியான மலேசியத் தீபகற்பம் அல்லது மேற்கு மலேசியா ஆகும்.
மேற்சான்றுகள்
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை