திட்டுச் சொட்டை

திட்டுச் சொட்டை அல்லது குறிப்பிட்ட இடத்திலான வழுக்கை (Alopecia areata அல்லது spot baldness) என்பது தலையில் உரோமங்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வழுக்கை ஆகும். இது ஒருவகையான நோய் எதிர்ப்பு சக்திக் குறைப்பாட்டால் ஏற்படுகிறது. இதன் விளைவாக அனைத்து பாகங்களிலும் அல்லது சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வழுக்கை ஏற்படும். இது பெரும்பாலும் தலையின் அதிகபட்ச உயரமான உச்சந்தலையில் ஏற்படும். இதன் ஆக்கிரமிப்பு வலுக்கும் வேளையில் தன்னிலையினை மறப்பதால், தனது திசுக்களையே இவை அழிக்கும்.[1][2]

திட்டுச் சொட்டை
Alopecia areata.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புDermatology
ஐ.சி.டி.-10L63.
ஐ.சி.டி.-9704.01
ம.இ.மெ.ம104000
நோய்களின் தரவுத்தளம்430
மெரிசின்பிளசு001450
ஈமெடிசின்derm/14
ம.பா.தD000506

இதனால் தலையின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் உரோமங்களற்று (வழுக்கையாக) காட்சியளிக்கும். முக்கியமாக இதன் முதன்மை நிலைகளில் இதுபோன்று ஏற்படும். ஒன்று முதல் இரண்டு சதவீதத்திலான அளவில் இவை உடலின் மற்ற இடங்களில் பரவும். இது மனிதனுக்கு மட்டுமல்லாமல் பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.[3]

வகைகள்

இது போன்ற வழுக்கைக்கான வகைகள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வகையில் முடிகளை இழக்கச் செய்யும்.[4]

1. அலோபேசியா அரேடா (தலையில் ஏற்படும் வழுக்கை)

தலையின் முடிகளுக்குக் கீழேயுள்ள தோல் வகையில் ஏற்படும் வழுக்கை அலோபேசியா அரேடா எனப்படும்.

2. அலோபேசியா டோடெய்ல்ஸ் (தலையின் முடியினை இழத்தல்)

தலையின் முடிகளுக்குக் கீழேயுள்ள தோல் வகையில் ஏற்படும் இவ்வகை வழுக்கையினால், தலையிலுள்ள மொத்த முடிகளையும் இழக்க நேரிடும்.

3. அலோபேசியா யுனிவெர்சல் (உடலின் அனைத்துப் பகுதிகளிலும் முடிகளை இழத்தல்)

அலோபேசியா என்பது தொற்றும் வகையிலான நோய் அல்ல. அலோபேசியாவின் வகையான முழுமையான முடி இழப்பு மிகவும் அரிதான ஒன்று. 5 சதவீதம் மட்டுமான, மிகவும் குறைந்த அளவிலே மக்கள் இதுபோன்ற முழு அளவிலான முடி இழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலவேளைகளில் முடிகள் மீண்டும் வளர்வது இயலாமல் போகலாம் அல்லது அவ்வாறு முடிகள் வளர்வதற்கான கால அவகாசம் அதிகரிக்கலாம்.

அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

இதன் முதல் அறிகுறி யாதெனில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வழுக்கை தோன்றுதல் ஆகும். இப்படி ஏற்பட்ட தலையின் பகுதிக்கு கீழ் அமைந்துள்ள தோலின் பகுதி சாதாரணமானதாகவே அமைந்திருக்கும். எவ்வித பாதிப்புகளோ, வெடிப்புகளோ ஏற்பட்டிருக்காது. இந்த குறிப்பிட்ட இடத்தில் ஏற்படும் வழுக்கை பலவிதமான வடிவங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலான நேரங்களில் வட்ட வடிவம் அல்லது நீள் வட்ட வடிவில் இவை தோன்றும்.[5] இத்தகைய பிரச்சினைகள் பெரும்பாலும் தலைமுடி மற்றும் தாடி அமையும் பகுதிகளில் அமையும், இருப்பினும் உடலில் முடிகள் உள்ள அனைத்து இடங்களிலும் இவை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் உரோமங்களைத் தாங்கி நிற்கும் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வாறு ஏற்படும் வாய்ப்பு அமைந்துள்ளது.[6] உடலின் வெவ்வேறு பகுதியில் இதுபோன்று ஏற்படும்போதிலும், அவை மீண்டும் வளருகின்றன. இந்நோய் குறிப்பிட்ட கால இடைவெளிவிட்டு மீண்டும் வரலாம் அல்லது நிரந்தரமாக குணமடையலாம்.

இவ்வாறு ஏற்பட்ட இடங்கள் வலியுடனோ அல்லது சிறியளவிலான வலியுடனோ இருக்கலாம்.[7] இவை மருத்துவ சிகிச்சை முறைகள் அல்லது பிற முறையான மருத்துவ முறைகளைக் கொண்டு கையாளப்படக் கூடியவை.

தோல் பாதுகாப்பிற்கான சில குறிப்புகள்

  • குளிர்காலத்தில் வெப்பக் குளியல் எடுப்பதை தவிர்க்கலாம். அதிகப்படியான சூடான தண்ணீரினை உபயோகிக்கும்போது, உடலிலுள்ள ஈரப்பதம் வெகுவாக வெளியேறுகிறது. இந்த ஈரப்பதம் மனிதனின் தோலில் அமைந்து உடலுக்கும் ஈரப்பதம் வழங்கி வெளிப்புறத்தில் இருந்து உடலை பாதுகாக்கவல்லது. இவ்வாறு நடக்கும்போது உடலின் தோல் பகுதியில் வெடிப்புகள் மற்றும் உலர்ந்த தன்மை உணரப்படும். இதற்கு மாற்று வழியாக சிறிது சூடான நீரின் மூலம், குறுகிய நேரக் குளியலை எடுத்துக்கொள்ளலாம்.
  • மூக்கில் சில உரோமங்களின் அடிப்பாகம் சாதாரண வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் அந்த இடத்தினைவிட்டு நீங்குவதில்லை. அதை எவ்வாறு சுத்தம் செய்தாலும் அதன் நிலையினை மாற்றிவிடாமல் வலுவான பிணைப்பாக அமைந்து, கரும்புள்ளிகள் போன்று காட்சியளிக்கும். இவற்றினை முற்றிலும் நீக்க வேண்டுமெனில், ND YAG 1064 nm என்ற நவீன லேசர் சிகிச்சையினைப் பயன்படுத்தலாம்.
  • சிலவேளைகளில், வயது முதிர்வினைத் தடுக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது அல்லது தோலில் உள்ள புண்கள் அல்லது சில வித்தியாசமான அமைப்புகள் சரியாகும் முன்பே பல பொருட்களை அதன் மீது பயன்படுத்திப் பார்ப்பது போன்ற செயல்பாடுகள் உடலின் தோலினை மேலும் எரிச்சல் அடையச்செய்வதுடன் மட்டுமல்லாமல், சிவப்பாகவும், செதில்கள் போன்ற அமைப்பு கொண்டதாகவும் மாற்றக்கூடும். அத்துடன் நுண்ணிய வீக்கங்கள் மற்றும் உலர்ந்த தோல்பகுதியின் காரணமாக பல கோடுகள் கொண்ட அமைப்பு போன்று அவை காட்சியளிக்கும். அதுபோன்ற சமயங்களில் தோலினை சரிசெய்ய அடுத்தடுத்த பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, சிறிது கால இடைவெளி கொடுக்கலாம். இந்தக் கால இடைவெளியில் எத்தகைய அவசியமற்ற பொருட்களையும் பயன்படுத்தாது இருக்க வேண்டும். அதன்பின்பு பாதிக்கப்பட்ட தோல் தானாகவே அழிந்து புதியதாக உருவாகும், அதற்கான கால அவகாசத்தினைக் கொடுத்தால் மட்டும் போதுமானது.
  • கை கிரீம்கள் வழக்கமான லோஷன் பயன்பாடுகளைவிட சிறிது அதிக தடிமன் கொண்டவை. அத்துடன் அவை கைகளை மிருதுவானதாக மாற்ற அதிகப்படியான சத்துக்கள் தேவை. எனவே அத்தகைய கிரீம்களை கைகளை கழுவிய உடனோ அல்லது படுக்கைக்குச் செல்லும் முன்னரோ பயன்படுத்துதல் நல்லது.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திட்டுச்_சொட்டை&oldid=2095839" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்