தோகா ஒப்பந்தம், 2020

தோகா ஒப்பந்தம் (2020) (Doha Agreement (2020), இதனை ஆப்கானித்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் என்றும் அழைப்பர். இது ஐக்கிய அமெரிக்க நாடு மற்றும் தாலிபான்களுக்கும் இடையே கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் 29 பிப்ரவரி 2020 அன்று செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். [2]இந்த ஒப்பந்தத்தில் ஆப்கானித்தான் அதிபர் அஷ்ரப் கனியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் பிரதிநிதி சல்மாய் கலீல்சாத் மற்றும் தாலிபான் பிரதிநிதி அப்துல் கனி பராதர் கையெழுத்திட்டனர். [3] [4]இந்த ஒப்பந்தப்படி, ஆப்கானித்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை 14 மாதங்களுக்குள் (31 ஆகஸ்டு 2021) விலக்கப்படும் என்றும், அதுவரை தாலிபான்கள் மற்றும் அல்-கொய்தா படைகள் அமெரிக்கப்படைகளை தாக்குவதில்லை என உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை சீனா, ருசியா, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை வரவேற்றது. [5]

தோகா ஒப்பந்தம் (2020)
ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான் ஒப்பந்தம்
29 பிப்ரவரி 2020 அன்று தோகாவில் அமெரிக்காவின் பிரதிநிதி சல்மாய் கலீல்சாத் (இடது) மற்றும் தாலிபான் பிரதிநிதி அப்துல் கனி பராதர் (வலது) ஆப்கான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் காட்சி
ஒப்பந்த வகைஅமைந்தி ஒப்பந்தம்
அமைப்புஆப்கானித்தானில் போர் (2001-2021)[1]
கையெழுத்திட்டது29 பெப்ரவரி 2020; 4 ஆண்டுகள் முன்னர் (2020-02-29)
இடம்செரட்டன் கிராண்ட் தோகா விடுதி, தோகா, கத்தார்
கையெழுத்திட்டோர்ஐக்கிய அமெரிக்கா சல்மாய் கலீல்சாத்
ஆப்கானித்தான் அப்துல் கனி பராதர்
தரப்புகள் ஐக்கிய அமெரிக்கா
ஆப்கானித்தான் தாலிபான்
மொழிகள்
முழு உரை
ஆப்கானித்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் விக்கிமூலத்தில் முழு உரை

ஒப்பந்தத்திற்கு பிந்தைய மாற்றங்கள்

சூலை 2020-இல் ஆப்கானித்தானில் அமெரிக்கப் படைகளின் அளவு 13,000 முதல் 8,600 வரை குறைத்துக் கொள்ளப்பட்டது. மேலும் ஐந்து இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்கப்படைகள் திரும்பப் பெற்றது. 11 செப்டம்பர் 2021 தேதிக்குள் அனைத்து அமெரிகக மற்றும் நோட்டோ படைகள் ஆப்கானித்தானிலிருந்து வெளியேறும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் என 13 ஏப்ரல் 2021 அன்று அறிவித்தார். ஒப்பந்த நாளுக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்குள், ஒப்பந்தத்தை மீறி 15 ஆகஸ்ட் 2021 அன்று தாலிபான் படைகள் காபூலைக் கைப்பற்றியது. [6]இருப்பினும் காபூல் பன்னாட்டு வானூர்தி நிலையம் மட்டும் அமெரிக்கப் படைகள் கைகளில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தோகா_ஒப்பந்தம்,_2020&oldid=3253547" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்