தாலிபான்

இஸ்லாமிய பெயரிலான தேசியவாத அமைப்பாகும்

தாலிபான் (Taliban, பாஷ்தூ மொழி: طالبان, தலிபான்) எனப்படுவோர் ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை ஆட்சி செய்த சுன்னி இஸ்லாமிய தேசியவாத அமைப்பாகும். 2001 இல் ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் உதவியுடன் இவ்வமைப்பின் தலைவர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டனர். அடிப்படைவாத தீவிரவாத அமைப்பாகக் கருதப்படும் "தாலிபான்" பாகிஸ்தானின் பழங்குடியினரின் பகுதிகளில் தோற்றம் பெற்றது. ஆப்கானிஸ்தானின் அரசுக்கெதிராகவும் நேட்டோ படைகளுக்கெதிராகவும் கெரில்லா[தெளிவுபடுத்துக] முறையில் போரிட்டது[61].

தாலிபான்
طالبان
கலிமாவைக் கொண்ட தாலிபானின் கொடி
நிறுவனர்
தலைவர்கள்
செயல்பாட்டுக் காலம்
முன்னோடிதருல் உலூம் அக்கானியா[1][2][3] மற்றும் சமியா உலூம்-உல்-இசுலாமியாவின் மாணவர்கள்[4][5]
செயல்பாட்டுப் பகுதி(கள்)
  தாலிபானின் கீழுள்ள பகுதிகள்
சித்தாந்தம்
அளவுஅடிப்படை எண்ணிக்கை -
  • 45,000 (2001 மதிப்பீடு)[19]
  • 11,000 (2008 மதிப்பீடு)[20]
  • 36,000 (2010 மதிப்பீடு)[21]
  • 60,000 (2014 மதிப்பீடு)[22]
  • 60,000[23] (2017 மதிப்பீடு. 90,000 உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் மற்றும் 50,000 உதவி படை தவிர)
  • 75,000 (2021 மதிப்பீடு)[24][25][26]
தலைமையகம்காந்தாரம், ஆப்கானிஸ்தான் (1994–2001)
பற்று ஆப்கானித்தான்
குழு(க்கள்)பெரும்பான்மையாக பஷ்தூன் மக்கள்;[27][28] சிறுபான்மை தஜிக்குகள், துருக்குமேனியர்கள், மற்றும் உஸ்பெக்கியர்[29][30]
கூட்டாளிகள்நாடுகள்
  •  கட்டார்[31][32][33]
  •  பாக்கித்தான் (2001 வரை வெளிப்படையாக, 2001க்குப் பிறகு மறுத்து வந்துள்ளது)[34][35]
  •  துருக்மெனிஸ்தான் (2001 வரை)[36][37]
  • இச்கேரியாவின் செச்சன் குடியரசு (2001 வரை)[38][39]
  •  ஐக்கிய அரபு அமீரகம் (2001 வரை)[40]
  •  ஈரான் (2021 வரை கூறப்பட்டது)[41][42][43]
  •  சவூதி அரேபியா (2001 வரை வெளிப்படையாக, 2013 வரை எனக் கூறப்பட்டது)[33][44]
இயக்கங்கள்
எதிரிகள்நாடுகள்
  • ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு[52]
  •  இந்தியா
  •  ஈரான்
  •  ஐக்கிய அமெரிக்கா
  •  ஐக்கிய இராச்சியம்
  •  நேட்டோ[53]
  • ஐ எஸ் ஏ எஃப்
இயக்கங்கள்
யுத்தங்கள் மற்றும் போர்கள்
  • ஆப்கானித்தான் உள்நாட்டு யுத்தம் (1992–1996)
  • தஜிகிஸ்தான் உள்நாட்டு யுத்தம் (1992–1997)[60]
  • ஆப்கானித்தான் உள்நாட்டு யுத்தம் (1996–2001)
  • ஆப்கானித்தானில் போர் (2001–2021)
    • ஐ எஸ் ஐ எஸ்-தாலிபான் சண்டை
    • 2021 தாலிபான் தாக்குதல்

தாலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் ஆவார். தாலிபானின் படைகளில் பெரும்பாலானோர் தெற்கு ஆப்கானிஸ்தானிலும், வடமேற்கு பாகிஸ்தானிலும் உள்ள பஷ்தூன் மக்கள் ஆவார். இவர்களைவிட சிறிய அளவில் ஐரோப்பா மற்றும் சீனாவைச் சேர்ந்த தீவிரவாதிகளும் இவ்வமைப்பில் உள்ளனர். தாலிபான் பாகிஸ்தான் அரசிடம் இருந்து இராணுவப் பயிற்சிகளையும் பெருமளவு இராணுவத் தளவாடங்களையும் பெற்றனர்.[1] பரணிடப்பட்டது 2008-02-22 at the வந்தவழி இயந்திரம்பெண்கள் கல்விக்கு எதிர்ப்பாளர்களான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரி, பள்ளிகளில் அமைந்துள்ள நீர்தொட்டியில் விசத்தைக் கலந்தும், பள்ளியின் வகுப்பறையில் விச வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வி கற்றலை அழிக்க முயற்சி செய்தார்கள்.[62]

1996 முதல் 2001 வரை முகமது ஓமார் தலைமையில் தாலிபான்கள் ஆப்கானித்தான் இசுலாமிய அமீரகத்தை ஆட்சி செய்தார்கள். 2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்க ராணுவம் இவர்களைப் பதவியிறக்கியது. அதைத் தொடர்ந்து 20 வருடங்கள் ஆப்கானித்தானில் வன்முறைகள் நடந்தது.பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தாலிபான் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனாலும் சமீபகாலமாக இந்தக் குழுவின் ஆதிக்கமும், ராணுவ பலமும் அதிகரித்திருக்கிறது. 2021ல் இவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000 முதல் 1 லட்சம் பேர் வரை. பத்து வருடங்களுக்கு முன்பு தாலிபானில் 30,000 பேர் மட்டுமே இருந்ததாக அமெரிக்கா கணித்திருந்தது. இந்த அளவுக்கு பிரம்மாண்டமான குழுவை வைத்துக்கொண்டு கிளர்ச்சி செய்வதற்கு ஆப்கானிஸ்தானுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் இவர்களுக்கு நிதியுதவி வந்திருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் உள்ளிட்ட இசுலாமிய நாடுகளின் நன்கொடைகள், ஆப்கானில் விளையும் அபின் சுத்திகரிக்கப்பட்டு ஹெராயினாக மாற்றப்பட்டு 1.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர் வரை ஏற்றுமதி வருமானம் மூலம் கிடைக்கிறது. அபின் வர்த்தகத்தைத் தாண்டியும், தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் வரிவிதிப்பு மூலம் நிதியுதவி பெறுகிறது.[63]

2020 முதல் தற்போது வரை தாலிபான்கள்

2020 தோகா ஒப்பந்தப்படி அமெரிக்கா மற்றும் நோட்டோ நாடுகளின் படைகள் 31 ஆகஸ்டு 2021 அன்று முழுவதுமாக வெளியேறிவிடுவதாகவும், அதுவரை படைவீரர்களுக்கும், வெளியேறுதல்களுக்கும், தாலிபான் உள்ளிட்ட பிற இயக்கங்கள் தீங்கு விளைவிக்கக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. அமெரிக்கா தனது துருப்புக்களை ஆப்கானிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், 15 ஆகஸ்டு 2021 அன்று காபூலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தாலிபான் படைகள் காபூல் நகரத்தின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டதுடன், நாட்டில் ஷரியா சட்டம் மீண்டும் கைப்பிடிக்கப்படும் என்றனர். இதனிடையில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி 14 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானை விட்டு வெளியேறினார். ஆப்கான் துணி அதிபர் அம்ருல்லா சலே தனது சொந்தப் பகுதியான பாஞ்சிரி பள்ளத்தாக்கிற்கு சென்றார்.

தாலிபான்களுக்கு எதிராக செயல்பட்ட அர்சு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் படைவீரரகளுக்கு தாலிபான்கள் பொது மன்னிப்பு வழங்கி, அவர்கள் துன்புறுத்த மாட்டார்கள் என வாக்களித்தனர். ஆப்கானிய அறிவு ஜீவிகள் மட்டும் ஆப்கானிலேயே தங்க வேண்டும் என தாலிபான்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டனர். இருப்பினும் 16 ஆகஸ்டு 2021 முதல் காபூல் நகரத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் தூதரக அதிகாரிகள், ஊழியர்கள், தூதரகத்தில் வேலைபார்த்த ஆப்கானியர்கள் தங்கள் குடும்பத்துடன் வானூர்திகளில் ஏறி மேற்குலக நாடுகளுக்குச் சென்றனர். இதனிடையே ஹமித் கர்சாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் நுழைவாயில் அருகே அடுத்தடுத்து இரண்டு தற்கொலை குண்டு வெடிப்புகள் நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்புகளுக்கு இசுலாமிய அரசு, கொராசான் பெறுப்பு ஏற்றது.[64] குண்டு வெடிப்பில் 68க்கும் மேற்பட்ட ஆப்கானியர்களும், 13 அமெரிக்கத் துருப்புகளும், 2 பிரித்தானிய துருப்புகளும் கொல்லப்பட்ட்டனர்.[65]

தற்போதைய தாலிபான் தலைவர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாலிபான்&oldid=3931242" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை