நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம், இந்தியா

நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (National Centre for Disease Control) என்பது முன்னதாக தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனம் என அழைக்கப்பட்டது. இந்த மையம் இந்திய சுகாதார சேவைகள் இயக்குநரகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஜூலை 1963 இல் நிறுவப்பட்டது தொற்றுநோயியல் ஆராய்ச்சி, தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இந்திய மலேரியா நிறுவனத்தின் செயல்பாடுகளை மறுசீரமைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த மையமானது தொடங்க்பட்டது. தற்போது இந்த மையமானது அல்வார், பெங்களூரு, திருவனந்தபுரம், கோழிக்கோடு, குன்னூர், ஜெகதல்பூர், பாட்னா, ராஜமன்றி மற்றும் வாரணாசி ஆகிய எட்டு கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பானது அந்தந்த மாநில அரசுகளுக்கு பொது சுகாதாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குகிறது. இந்த அமைப்பின் தலைமையகம் புதுதில்லியில் உள்ள ஷாம் நாத் மார்க்கில் உள்ளது.

நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம்
துறை மேலோட்டம்
அமைப்பு1909; 115 ஆண்டுகளுக்கு முன்னர் (1909)
முன்னிருந்த அமைப்புகள்
  • தொற்றுநோய்களுக்கான தேசிய மையம்(1963-2008)
  • மத்திய மலேரியா பணியகம் (1909 - 1963)
பின்வந்த அமைப்பு
  • ஏதுமில்லை
ஆட்சி எல்லைஇந்தியா
தலைமையகம்புது தில்லி
ஆண்டு நிதி₹2000 கோடிகள் ($270 மில்லியன்) (2017-18)
பொறுப்பான அமைச்சர்கள்
அமைப்பு தலைமை
  • மருத்துவர் சுஜீத் குமார் சிங் (2018-தற்போது வரை), இயக்குநர்
மூல அமைப்புசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)
வலைத்தளம்ncdc.gov.in

வரலாறு

புதிதாக மறுபெயரிடப்பட்ட மத்திய தொற்று நோய்களுக்கான மத்திய நிறுவனத்தின் அடையாளத்துடன் அதன் இயக்குநர் எஸ்.பி. ராமகிருஷ்ணன் நன்றி வெல்கம் நிறுவனம்

1909 ஆம் ஆண்டில் இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தின் கசௌலியில் நிறுவப்பட்ட மத்திய மலேரியா பணியகமே இந்த அமைப்பின் தோற்றத்தின் மூலமாகும். இது 1938 ஆம் ஆண்டில் இந்திய மலேரிய நிறுவனமாகவும், 1963 ஆம் ஆண்டில் தொற்றுநோய்களுக்கான தேசிய மத்திய நிறுவனம் என மறுபெயரிடப்பட்டு அறியப்பட்டது. [1]

தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தை உருவாக்க மறுசீரமைக்கப்பட்ட நிறுவனம் நிறுவப்பட்டது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் பல ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்தை வழங்குவதற்கான ஒரு சிறப்பம்சம் பொருந்திய மையமாக செயல்பட நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் கொள்ளும் தொடர்பு மூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தத் துறையில் திறம்பட பயன்படுத்தக்கூடிய, நம்பகமான, விரைவான, சிக்கனமான தொற்றுநோயியல் கருவிகளை உருவாக்கும் பணியை இந்த நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. நிறுவனத்தின் நோக்கங்கள் பரவலாக மூன்று நடவடிக்கைகளை உள்ளடக்கியது ஆகும். அவை, நாட்டின் தொற்றுநோயியல் துறையில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்கான பயிற்சி, சேவை மற்றும் செயல்பாட்டு ஆராய்ச்சி ஆகியவை ஆகும். இந்த மையம் டெல்லியின் குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் மற்றும் தொடர்புடைய நோய்களுக்கான மையம் தொற்றுநோய்களுக்கான தேசிய நிறுவனத்துடன் (என்ஐசிடி) தேசிய வழிகாட்டு ஆய்வகமாக 2002 ஆம் ஆண்டில் என்ஏசிஓ (NACO) வழிகாட்டுதலின் படி நிறுவப்பட்டது. இதற்கு முன்னர் இது 1985 முதல் எய்ட்ஸ் வழிகாட்டு ஆய்வகமாக இருந்தது, இது இந்தியாவின் முதல் வழிகாட்டு மையங்களில் ஒன்றாகும், இது நாட்டில் எச்.ஐ.வி தொற்று குறித்து கண்காணிக்கத் தொடங்கியது.

30 ஜூலை 2009 அன்று, இது நோய்களுக்கான தேசிய மையம் என்று பெயரிடப்பட்டது.

பிரிவுகள்

இந்த மையமானது பதினான்கு தொழில்நுட்ப மையங்கள் / பிரிவுகளைக் கொண்டுள்ளது

நிர்வாகம்

இந்த மையத்தில் 434 அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். [2]

செயல்பாடுகள்

2002 ஆம் ஆண்டில் பஞ்சாபில் வளியிய பிளேக், [3] 2004 ஆம் ஆண்டில் SARS வெடிப்பு, 2005 ல் டெல்லியில் மூளைக்காய்ச்சல் வெடிப்பு, மற்றும் 2006 இல் பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து விசாரிக்க இம்மையத்தின் மருத்துவர்கள் முன்வரவழைக்கப்பட்டனர். 2019-2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸிற்கான தயார்நிலை மதிப்பாய்வு செய்யப்பட்டது. [4]

உலகளாவிய நோய் கண்டறிதல்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுடன் இணைந்து இம்மையம் இந்தியாவின் புதுதில்லியில் உலகளாவிய நோய் கண்டறிதல் (ஜி.டி.டி) பிராந்திய மையத்தை அமைத்துள்ளது. இது முக்கியமான மனித தொற்று நோய்கள் குறித்து உயர்தர ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பை நிறுவுதல், இந்திய தொற்றுநோயியல் நுண்ணறிவு அமைப்பு திட்டத்தை நிறுவுதல் மற்றும் தெற்காசியாவில் ஒரு சர்வதேச முன்னோடி வழிகாட்டு நிறுவனமாக.மாறுதல் ஆகிய பொது சுகாதார தளங்களில் பணிபுரிவதற்கான நீண்ட கால தொலைநோக்குகளைக் கொண்டுள்ளது.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்