பர்வீனா அஹங்கர்

பர்வீனா அஹங்கர் (Parveena Ahanger) ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தார். இவர், ஜம்மு மற்றும் காஷ்மீரில் காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.

பர்வீனா அஹங்கர்
பிறப்புசிறிநகர், காஷ்மீர், இந்தியா
மற்ற பெயர்கள்காஷ்மீரின் இரும்புப் பெண்மணி
பணிகாணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் நிறுவனர் (APDP)
அறியப்படுவது2017 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ராஃப்டோ பரிசை பெற்றவர்
வலைத்தளம்
http://www.apdpkashmir.com

2017 ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான ராஃப்டோ பரிசை இவர் "கட்டாயமாக காணாமல் போதல்களுக்கு எதிரான போராட்டங்களுக்காக" வென்றார். மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீரில் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியதற்காக வென்றார். [1] [2] 2019 ஆம் ஆண்டிற்கான உலகெங்கிலும் உள்ள 100 ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க பிபிசி 100 பெண்களின் பட்டியலில் ஒருவராக இவர் பெயரிடப்பட்டார் [3]

பர்வீனாவை 'காஷ்மீரின் இரும்புப் பெண்மணி' என்று குறிப்பிடுகிறார்கள். காஷ்மீரிகளின் வலி மற்றும் துயரங்கள் குறித்து இந்திய ஊடகங்களின் வஞ்சக அணுகுமுறையின் காரணமாக இவரால் நிராகரிக்கப்பட்ட இந்திய ஊடக நிறுவனமான சிஎனென்-ஐபிஎன் ஆல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். [4]

காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம்

பர்வீனா, 1994 ஆம் ஆண்டு "காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம்" என்கிற அமைப்பை பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதால் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஆதரிப்பதற்கும் அணிதிரட்டுவதற்கும், காஷ்மீரில் 8-10,000 தன்னிச்சையான காணாமல் போன வழக்குகளை விசாரிக்க இந்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தொடங்கினார். [5] இந்த அமைப்பு தன்னிச்சையாக காணாமல் போனவர்களுக்கு எதிரான ஆசிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாகும். [6]

காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கத்தின் இணை நிறுவனரும் தலைவருமான பர்வீனா அஹங்கர், பிலிப்பைன்ஸ் (2000), தாய்லாந்து (2003), இந்தோனேசியா (2005), சியாங் மாய் (2006), ஜெனிவா (2008), கம்போடியா (2009) மற்றும் லண்டன் (2014). [7] போன்ற நகரங்களில் இந்த அமைப்பின் காரணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் விரிவுரை

பர்வீனாஅஹங்கர் 2014 இல் லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேசினார் [8] அவரது உரையிலிருந்து ஒரு மேற்கோள்: [9] 

தாயின் வலி யாருக்கும் புரிவதில்லை. நான் பாதிக்கப்பட்டவள், எங்களைப் போல் பலர் இருக்கிறார்கள். காணாமல் போனவர்களின் பெற்றோர் சங்கம் எனது வலியிலிருந்தும் என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான தாய்மார்களின் வலியிலிருந்தும் உருவானது.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பர்வீனா_அஹங்கர்&oldid=3766598" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்