பிரூசு சா துக்ளக்

தில்லியை ஆட்சி செய்த சுல்தான்

சுல்தான் பிரூசு சா துக்ளக் (Sultan Firuz Shah Tughlaq) (1309 – 20 செப்டம்பர் 1388) துக்ளக் வம்சத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் ஆவார்.[1] இவர் 1351 முதல் 1388 வரை தில்லி சுல்தானகத்தை ஆட்சி செய்தார்.[2][3] குசராத்தில் கலகம் செய்த துருக்கிய அடிமைப் பழங்குடியினரான தாகிக்கு எதிராக சிந்துவில் உள்ள தட்டாவில் முகம்மது பின் துக்ளக் போர் புரிந்தபோது இறந்தார். சுல்தானகத்தின் வரலாற்றில் முதன்முறையாக, அதிகாரத்தை யாரும் ஏற்கத் தயாராக இல்லாத சூழ்நிலை அப்போது இருந்தது. பிரூசை பொறுப்பேற்கும்படி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். அந்த நேரத்தில், முகமது பின் துக்ளக்கின் பிரதமரான கவாஜா ஜஹான், முகமது பின் துக்ளக்கின் மகன்[4] எனக் கூறி ஒரு சிறுவனை அரியணையில் அமர்த்தினார். பின்னர் அவரும் சரணடைந்தார். பரவலான அமைதியின்மை காரணமாக, பிரூசின் சாம்ராச்சியம் முகம்மதுவை விட மிகவும் சிறியதாக இருந்தது. வங்காளம் மற்றும் பிற மாகாணங்களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளால் சுதந்திரத்தை வழங்கும் கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. இவர் இசுலாமியச் சட்ட முறைமையை தனது ஆட்சி முழுவதும் நிறுவினார்.[5]

பிரூசு சா துக்ளக்
பிரூசு சா துக்ளக் இபின் மாலிக் ரஜாப்
பிரூசு சா துக்ளக்
19வது தில்லி சுல்தான்
ஆட்சிக்காலம்23 மார்ச் 1351 – 20 செப்டம்பர் 1388
முன்னையவர்முகம்மது பின் துக்ளக்
பின்னையவர்துக்ளக் கான்
பிறப்பு1309
ஜான்பூர்
இறப்பு20 செப்டம்பர் 1388 (வயது 78–79)
ஜான்பூர்
புதைத்த இடம்20 செப்டம்பர் 1388
ஜான்பூரிலுள்ள் பிரூசு சா கல்லறை
குழந்தைகளின்
பெயர்கள்
  • பத்தே கான்
  • சாபர் கான்
  • மூன்றாம் நாசிர் உத் தின் சா
பெயர்கள்
பிரூசு சா துக்ளக்
மரபுதுக்ளக்
அரசமரபுதுக்ளக் வம்சம்
தந்தைமாலிக் ரசாப்
தாய்பீபி நைலா
மதம்சுன்னி இசுலாம் இசுலாம்

சொந்த வாழ்க்கை

இவரது தந்தையின் பெயர் ரஜப் ( கியாத் அல்-தின் துக்ளக்கின் இளைய சகோதரர்) அவர் சிபக்சலார் என்ற பட்டத்தைக் கொண்டிருந்தார். இவரது தாயார் நைலா, ஒரு இந்துப் பெண், தற்போது பாக்கித்தானின் பஞ்சாப் பகுதியில் உள்ள தீபல்பூரைச் சேர்ந்த பதி ராஜ்புத் இனத்தைச் சேர்ந்தவர்.[3][6]

ஆட்சி

பித்தௌத்-இ-பிரோசாகி என்ற தலைப்பிலான இவரது 32-பக்கச் சுயசரிதையின் மூலம் இவரைப் பற்றி ஓரளவு அறிய முடிகிறது.[7][8] 1351-இல் தில்லி சுல்தானக ஆட்சியின் போது இவருக்கு வயது 42. இவர் 1388 வரை ஆட்சி செய்தார். முகமது துக்ளக்கின் மரணத்திற்குப் பிறகு, அவர் வங்காளம், குஜராத் மற்றும் வாரங்கல் உட்படப் பல பகுதிகளில் கிளர்ச்சிகளை எதிர்கொண்டார். ஆயினும்கூட, இவர் பேரரசின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குக் கால்வாய்கள், ஓய்வு இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகள், நீர்த்தேக்கங்களை உருவாக்குதல் மற்றும் புதுப்பித்தல் மற்றும் கிணறுகளைத் தோண்டுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார். தில்லியைச் சுற்றி ஜான்பூர், பிரோசுபூர், ஹிசார், பிரோசாபாத், பதேகாபாத் உள்ளிட்ட பல நகரங்களை நிறுவினார்.[9] பிரோசாபாத் நகரின் பெரும்பகுதி அழிந்தது. பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அதன் கட்டிடங்களைத் தகர்த்து, அதன் பொருட்களைப் புதிய கட்டுமானப் பொருட்களாகப் பயன்படுத்தினார்கள்.,[10] மீதமுள்ளவை புது தில்லி வளர்ந்ததால் சேதமடைந்தன.

மத மற்றும் நிர்வாகக் கொள்கைகள்

ஒரு தீவிர முஸ்லிமாக இருந்த இவர் இசுலாத்தின் சட்டங்களை நிலைநிறுத்த முயன்றார். மேலும், ஷரியா கொள்கைகளை ஏற்றுக்கொண்டார். இவர் இறையியலாளர்களுக்குப் பல முக்கியமான சலுகைகளை வழங்கினார். இவர் முஸ்லிம் பெண்கள் புனிதர்களின் கல்லறைகளுக்கு வழிபடச் செல்வதைத் தடை செய்தார். துக்ளக் தனது மாமா முகமதுவின் ஆட்சியில் செய்த தவறுகளை மனதில் கொண்டு பிரிந்து போன பகுதிகளை மீளக் கைப்பற்ற வேண்டாம் என்றும், மேலும் சில பகுதிகள் சுதந்திரம் பெறாமல் இருக்கவும் முடிவு செய்தார். இவர் ஒரு சுல்தானைப் போல் பாகுபாடின்றிக் கருணையும் மென்மையும் கொண்டிருந்தார். தனது ராச்சியத்தை அமைதியாக ஆட்சி செய்ய அனுமதிப்பார்கள் எனக் கருதி இவர் பிரபுக்களையும் உலமாக்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிவு செய்தார்.[11]

இவரது ஆட்சியில் தென் மாநிலங்கள் சுல்தானகத்திலிருந்து விலகிவிட்டன. குசராத் மற்றும் சிந்துவில் கிளர்ச்சிகள் இருந்தன. அதே நேரத்தில் வங்காளம் தனது சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது. இவர் 1353 மற்றும் 1358 இல் வங்காளத்திற்கு எதிரான படையெடுப்புகளை வழிநடத்தி கட்டக்கைக் கைப்பற்றினார். புரி ஜெகன்நாதர் கோயிலை இழிவுபடுத்தினார். மேலும் ஒடிசாவில் உள்ள ஜஜ்நகரின் ராஜா கஜபதியை கப்பம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினார். 14 ஆம் நூற்றாண்டில் சௌகான் ராஜபுத்திரர்களை இந்து மதத்திலிருந்து இஸ்லாமியராக மாற்றினார்.. அவர்கள் இப்போது ராஜஸ்தானில் கைம்கானிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இவர் காங்ரா கோட்டையை முற்றுகையிட்டார். நாகர்கோட் மற்றும் தாட்டாவிலும் கப்பம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தினார். இவரது காலத்தில் குராசனின் தாதர் கான் பஞ்சாப்பைப் பலமுறை தாக்கினார். குர்தாஸ்பூரில் நடந்த இறுதிப் போரின்போது அவர் அடக்கப்பட்டார். பிரூஸ் ஷா துக்ளக் தனது மகளை ராஜா கைலாஷ் பாலுவிற்குத் திருமணம் செய்து வைத்து, அவரை இசுலாத்திற்கு மாற வைத்தார். அவர்களை குராசனை ஆள அனுப்பினார். அங்கு இவர்களுக்கு 'பாட்பேஜி' என்ற சாதியால் அறியப்பட்ட பதினொரு மகன்கள் பிறந்தனர். [12]

பெரோஸ் ஷா கோட்லா அரண்மனை, அசோகன் தில்லி-தோப்ரா தூண் (இடது) மற்றும் ஜாமியா மஸ்ஜித் (வலது) ஆகியவற்றின் மேல் தெரிகிறது

சாகிர் ஒருவர் இறந்த பின்னால் தகுதியின் அடிப்படையில் பதவியை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களது சாதாரண மகன்களை சாகிராக ஆக்கினார்.[13] இராணுவத்திலும் இவ்வாறே பதவிகள் வழங்கப்பட்டது. பிரபுக்களின் சம்பளத்தை உயர்த்தினார். கைகளை வெட்டுவது போன்ற அனைத்து வகையான கடுமையான தண்டனைகளையும் நிறுத்தினார். முகமது உயர்த்திய நில வரிகளையும் குறைத்தார். துக்ளக்கின் ஆட்சியானது இடைக்கால இந்தியாவில் ஊழலின் மிகப்பெரிய யுகமாக விவரிக்கப்பட்டுள்ளது: இவர் ஒரு தரமற்ற தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தினார்.[14]

உள்கட்டமைப்பு மற்றும் கல்வி

துக்ளக் தனது மக்களின் பொருளாதார நலனை அதிகரிக்கக் கொள்கைகளை நிறுவினார். பல ஓய்வு இல்லங்கள் , தோட்டங்கள் மற்றும் கல்லறைகள் ( துக்ளக் கல்லறைகள் ) கட்டப்பட்டன. முஸ்லிம்களின் மதக் கல்வியை ஊக்குவிப்பதற்காகப் பல மதராசாக்கள் (இசுலாமிய மதப் பள்ளிகள்) திறக்கப்பட்டன. ஏழைகளின் இலவசச் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நிறுவி யூனானி மருத்துவத்தை ஊக்குவித்தார். [15] திவான்-இ-கைராத் துறையின் கீழ் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு இவர் பணம் வழங்கினார். இவர் தில்லியில் பல பொதுக் கட்டிடங்களை நிறுவினார். கி.பி.1354 இல் ஹிசாரில் பிரோஸ் ஷா அரண்மனை வளாகத்தைக் கட்டினார். 300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் ஐந்து பெரிய கால்வாய்களைத் தோண்டினார். பிருத்திவிராச் சௌகான் காலத்தின் மேற்கு யமுனை கால்வாயைப் புதுப்பித்தல் உட்பட, தானியங்கள் மற்றும் பழங்களை வளர்ப்பதற்காக அதிக நிலத்தைச் சாகுபடிக்குக் கொண்டுவந்தார். அன்றாட நிர்வாகத்திற்காக, சுல்தான் பிரூஸ் ஷா துக்ளக், முன்னர் வாரங்கல் கோட்டையின் தளபதியாக இருந்த மாலிக் மக்புலைச் சார்ந்து இருந்தார். பின்னர் அவரும் இசுலாத்திற்கு மாற்றப்பட்டார்.[16] ஆறு மாதங்களாக துக்ளக் சிந்து மற்றும் குசராத்தில் போரில் ஈடுபட்டிருந்தபோது, மக்புல் தில்லியைப் பாதுகாத்து வந்தார்.[17] துக்ளக்கின் அரசவையில் இருந்த கணிசமான எண்ணிக்கையிலான பிரபுக்களில் இவர் மிகவும் விரும்பப்பட்டவர் மற்றும் சுல்தானின் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டார்.[18] சுல்தான் பிரூஸ் ஷா துக்ளக் மக்புலை 'அண்ணன்' என்று அழைத்தார். தில்லியின் உண்மையான ஆட்சியாளர் என மாலிக் மக்புலை சுல்தான் குறிப்பிட்டார்.[19]

இவரது காலத்தில் இந்து சமயப் படைப்புகள் சமசுகிருதத்திலிருந்து பாரசீக மற்றும் அரபு மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டன.[20] பாரசீகம், அரபு மற்றும் பிற மொழிகளில் கையெழுத்துப் பிரதிகளின் ஒரு பெரிய தனிப்பட்ட நூலகத்தை இவர் வைத்திருந்தார். இவர் மீரட்டில் இருந்து 2 அசோகரின் தூண்களையும், அரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ராதௌர் அருகே உள்ள தோப்ராவையும், கவனமாக வெட்டி எடுத்து தில்லிக்குக் கொண்டு வந்தார். அவற்றில் ஒன்றை பிரோஸ் ஷா கோட்லாவில் உள்ள தனது அரண்மனையின் கூரையில் மீண்டும் எழுப்பினார். [20]

பிரோசு ஷா கோட்லாவின் எச்சங்கள் தில்லி, 1795

மூலதன பரிமாற்றம் இவரது ஆட்சியின் சிறப்பம்சமாக இருந்தது. கி.பி. 1368 இல் குதுப் மினார் மின்னல் தாக்கியபோது, அதன் மேல் தளத்தைத் தட்டிச் சென்றபோது. சிவப்பு மணற்கற்கள் மற்றும் வெள்ளைப் பளிங்குகளால் அமைக்கப்பட்டிருந்த இரண்டு தளங்களை இவர் மாற்றினார். இவரது வேட்டையாடும் விடுதிகளில் ஒன்றான சிகர்கா, குசாக் மகால் என்றும் அழைக்கப்படுகிறது. இது தில்லியின் தீன் மூர்த்தி பவன் வளாகத்தில் அமைந்துள்ளது. அருகில் உள்ள குசாக் சாலை அதன் பெயரால் அழைக்கப்படுகிறது, மேலும் துக்ளக் சாலை ஒன்றும் உள்ளது.[21][22]

மரபு

தனது மூத்த மகன் பதே கான் 1376 இல் இறந்த பின்னர் இவர் ஆகஸ்ட் 1387 இல் பதவி துறந்தார். இவரது மற்றொரு மகன் இளவரசர் முகம்மதுவை அரசனாக்கினார். ஒரு அடிமைக் கிளர்ச்சியினால் தனது பேரன் துக்ளக் கானுக்கு அரசப் பட்டத்தை வழங்கக் கட்டாயப்படுத்தியது.[9]

துக்ளக்கின் மரணம் வாரிசுப் போருக்கு வழிவகுத்தது. மேலும் பிரபுக்கள் சுதந்திர அரசுகளை அமைக்கக் கிளர்ச்சி செய்தனர். இவரது மென்மையான அணுகுமுறை பிரபுக்களைப் பலப்படுத்தியது. இதனால் இவரது நிலை பலவீனமானது. இவருக்குப் பின் வந்த இரண்டாம் கியாஸ்-உத்-தின் துக்ளக் அடிமைகளையோ பிரபுக்களையோ கட்டுப்படுத்த முடியவில்லை. இராணுவம் பலவீனமடைந்தது . மேலும், பேரரசின் அளவும் சுருங்கியது. இவர் இறந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தைமூரின் படையெடுப்பு தில்லியை அழித்தது. இவரது கல்லறை ஹவுஸ் காஸில் (புது தில்லி), அலாவுதீன் கில்சியால் கட்டப்பட்ட குளத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 1352-53 இல் பிரோஸ் ஷாவால் கட்டப்பட்ட மதராசா கல்லறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நாணயத் தொகுப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முன்னர்தில்லி சுல்தானகம்
1351–1388
பின்னர்
மூன்றாம் கியாசு-உத்-தின் துக்ளக்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பிரூசு_சா_துக்ளக்&oldid=3848811" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்