மூவிணைய-அமைல் ஆல்ககால்

வேதிச் சேர்மம்

மூவிணைய-அமைல் ஆல்ககால் (tert-Amyl alcohol) என்பது பெண்டனாலின் ஒரு வகையாகும். பக்கக் கிளையுள்ள பெண்டனால் சேர்மமான இதை 2-மெத்தில்பியூட்டேன்-2-ஆல் என்ற பெயராலும் அழைக்கலாம்.பொதுவாக ஒரு மயக்க மருந்தாக மூவிணைய-அமைல் ஆல்ககால் பயன்படுத்தப்படுகிறது [3]. சமீபத்தில் இதை ஒரு கிளர்ச்சியூட்டி என்றும் அறிவித்துள்ளார்கள் [4]. பெரும்பாலும் எத்தனாலைப் போல காபா ஏ ஏற்பிகளுக்கான நேர்மறை மாற்றுத்தூண்டல் பண்பேற்றியாக இது செயல்படுகிறது [5]. இவ்விரண்டின் விளைவுகளும் ஒரே மாதிரியானவையாகும். மூவிணைய-அமைல் ஆல்ககால் நிறமற்றதாகும். விருபத்தகாத நெடியான [6] நெருப்பில் தீய்ந்த மணம் கொண்டது [7]. அதாவது சிறிதளவு கற்பூரம் போன்ற பாரால்டிகைடு மணம் கொண்டது என்றும் கூறலாம் [8]. அறை வெப்பநிலையில் நீர்ம நிலையில் இருப்பதால் மூவிணைய பியூட்டைல் ஆல்ககாலுக்கு மாற்று கரைப்பானாக இது பயன்படுகிறது.

முவிணைய அமைல் ஆல்ககால்
tert-Amyl alcohol
Stereo, skeletal formula of 2-methyl-2-butanol
Ball-and-stick model of 2-methyl-2-butanol
Ball-and-stick model of 2-methyl-2-butanol
Space-filling model of the 2-methyl-2-butanol
Space-filling model of the 2-methyl-2-butanol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்பியூட்டேன்-2-ஆல்
வேறு பெயர்கள்
2-மெத்தில்-2-பியூட்டனால்
மூவிணைய-அமைல் ஆல்ககால்
மூ-அமைலால்
TAA
,ஈவிணைய-பெண்டைல் ஆல்ககால்
2-மெத்தில்-2-பியூட்டல் ஆல்ககால்
மூவிணைய-பெண்டைலால்
அமிலீன் ஐதரேட்டு
டைமெத்தில்யெத்தில்கார்பினால்
இனங்காட்டிகள்
75-85-4 Y
Beilstein Reference
1361351
ChEBICHEBI:132750
ChEMBLChEMBL44658 Y
ChemSpider6165 Y
EC number200-908-9
InChI
  • InChI=1S/C5H12O/c1-4-5(2,3)6/h6H,4H2,1-3H3 Y
    Key: MSXVEPNJUHWQHW-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள்Image
KEGGD02931 Y
ம.பா.தtert-amyl+alcohol
பப்கெம்6405
வே.ந.வி.ப எண்SC0175000
  • CCC(C)(C)O
UNII69C393R11Z Y
UN number1105
பண்புகள்
C5H12O
வாய்ப்பாட்டு எடை88.15 g·mol−1
தோற்றம்நிறமற்ற நிர்மம்
மணம்கற்பூரத்தன்மை
அடர்த்தி0.805 கி/செ.மீ−3[1]
உருகுநிலை −9 °C; 16 °F; 264 K
கொதிநிலை 101 முதல் 103 °C; 214 முதல் 217 °F; 374 முதல் 376 K
120 கிராம்•டெ.மீ−3
கரைதிறன்soluble in water, பென்சீன், குளோரோஃபார்ம், டை எத்தில் ஈதர் and எத்தனால்[2]
மட. P1.0950.5:1 கன அளவு வீதம்
ஆவியமுக்கம்1.6 கிலோபாசுக்கல் (20 °செல்சியசில்)
−7.09×10−5 செ.மீ3/மோல்
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.405
பிசுக்குமை4.4740 மெகாபாசுக்கல்•நொடி (298.15 K)[1]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation ΔfHo298
−380.0 to −379.0 கிலோயூல் மோல்−1
Std enthalpy of
combustion ΔcHo298
−3.3036 to −3.3026 மெகாயூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
229.3 யூல் கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்hazard.com
GHS pictogramsThe flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal wordஅபாயம்
H225, H315, H332, H335
P210, P261
தீப்பற்றும் வெப்பநிலை 19 °C (66 °F; 292 K)
Autoignition
temperature
437 °C (819 °F; 710 K)
வெடிபொருள் வரம்புகள்9%
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு

முதன்மையாக ஓர் அமில வினையூக்கியின் முன்னிலையில் 2-மெத்தில் -2-பியூட்டீன் சேர்மத்தை நீரேற்றம் செய்து மூவிணைய-அமைல் ஆல்க்கால் தயாரிக்கப்படுகிறது.

இயற்கைத் தோற்றம்

மூவிணைய-அமைல் ஆல்ககால் போன்ற கலவை ஆல்ககால்கள் தானிய நொதித்தல் செயல்முறையின் விளைவாகத் தோன்றும் உடன் விளைபொருள் தயாரிப்புகளாகும், எனவே பல மதுபானங்களில் மூவிணைய-அமைல் ஆல்ககால் சுவடு அளவுகளில் உள்ளது [9].வறுத்த பன்றி இறைச்சி [10], மரவள்ளி [11] மற்றும் ரூய்போசு எனப்படும் சிவப்புத் தேநீர் [12] போன்ற பிற உணவுகளில் மூவிணைய-அமைல் ஆல்ககால் சேர்மத்தின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வரலாறு

சுமார் 1880 ஆம் ஆண்டுகள் முதல் 1950 ஆம் ஆண்டுகள் வரை, மூவிணைய அமைல் ஆல்ககால் அமிலீன் ஐதரேட்டு என்ற சமகால பெயருடன் ஒரு மயக்க மருந்தாக பயன்படுத்தப்பட்டது, ஆனால் மிகவும் திறமையான மருந்துகள் இருந்ததால் அரிதாகவே பயன்படுத்தப்பட்டது.. 1930 ஆம் ஆண்டில் மூவிணைய அமைல் ஆல்ககால் முக்கியமாக முதன்மை மயக்க மருந்து டிரைபுரோமோயெத்தனாலின் கரைப்பானாக குளோரோஃபார்மைப் போலவே,பயன்படுத்தப்பட்டது.. டிரைபுரோமோயெத்தனால் மனித உடலில் கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை அளிக்கக்கூடியது, எனவே இதுபோன்ற கரைசல்களின் பயன்பாடு 1940 களில் மனிதர்களில் குறைந்தது. ஆய்வக எலிகள் மற்றும் சுண்டெலிகளுக்கு மட்டும் குறுகிய செயல்பாட்டு மயக்க மருந்துகளாக இவ்விரண்டு கரைசல்களும் பயன்பாட்டில் இருந்தன. இத்தகைய கரைசல்கள் சில நேரங்களில் அவெர்டின் என்று அழைக்கப்படுகின்றன, இப்பெயர் இப்போது நிறுத்தப்பட்டுள்ள மூவிணைய அமைல் ஆல்ககால் மற்றும் டிரைபுரோமோயெத்தனால் கரைசல்களுக்கான ஒரு வியாபார குறியீட்டுப் பெயராக இருந்தது, இது வின்ட்ரோப் ஆய்வகங்களால் 0.5: 1 கலப்பு விகிதத்தில் தயாரிக்கப்பட்டது. இப்போதெல்லாம் மூவிணைய அமைல் ஆல்ககால் ஒரு பொழுதுபோக்கு மருந்தாக கண்டறியப்பட்டுள்ளது.

பயன் மற்றும் விளைவுகள்

மூவிணைய அமைல் ஆல்ககாலை உட்கொள்வது அல்லது மூச்சிழுப்பது போன்ற செயல்கள் நன்னிலை உணர்வூட்டி , மயக்க மருந்து ஊக்கி, மற்றும் வலிப்படக்கி போன்ற விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவை எத்தனால் சேர்மத்தால் உண்டாகும் விளைவுகளை ஒத்திருக்கிறது[13]. இதை உட்கொள்ளும்போது விளைவுகள் சுமார் 30 நிமிடங்களில் தொடங்கி 1-2 நாட்கள் வரை நீடிக்கும்[14]. 2-4 கிராம் மூவிணைய அமைல் ஆல்ககாலை உட்கொள்வதால் மயக்கமடைய நேரிடும். . சுமார் 100 கிராம் எத்தனால் இதே போன்ற மயக்கத்தை தூண்டுகிறது[6].

நச்சு அளவு

ஒரு நபரைக் கொல்லும் மூவிணைய அமைல் ஆல்ககாலின் மிகச்சிறிய அளவு 30 மில்லியாகும்[14].அதிகப்படியான அளவு ஆல்ககால் போன்ற நச்சுத்தன்மையை அறிகுறிகளை உருவாக்குகிறது மற்றும் மயக்க மருந்து / மனச்சோர்வு பண்புகள் காரணமாக இது ஒரு மருத்துவ அவசரநிலை நோயாக கருதப்படுகிறது. அதிகப்படியான அளவுகளில் ஆபத்தான சுவாச மன அழுத்தமாக வெளிப்படுகிறது . எலிகளில் வாய்வழியாக கொடுக்கப்படும்போது உயிர் கொல்லும் அளவு 1 கிராம்/கிலோகிராம் ஆகும். சுண்டெலிகளை கொல்லும் அளவு 2.1 கிராம் /கிலோகிராம் ஆகும்[15].

விரைவான நனவிழப்பு, ஒரே நேரத்தில் சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்ற அமிலத்தன்மை[14], வேகமான இதயத் துடிப்பு, அதிகரித்த இரத்த அழுத்தம், கண்மணி சுருக்கம், கோமா எனப்படும் உணர்விழப்பு, சுவாச மன அழுத்தம் மற்றும் மரணம் போன்ற பாதிப்புகள் இதை அதிகப்படியாக உட்கொள்வதால் ஏற்படலாம்[16]. இவ்வாறு அதிகப்படியான அளவு மற்றும் சுவாச மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் மூச்சுக்குழாய் அடைப்பைச் செய்வதன் மூலம் உயிருடன் வைத்திருக்கலாம், பின்னர் செயற்கை சுவாசத்தை அளித்து காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளலாம்[14].

வளர்சிதைமாற்றம்

எலிகளில் மூவிணைய அமைல் ஆல்ககால் முதன்மையாக குளுக்குரோனேற்றம் வழியாக வளர்சிதை மாற்றம் அடைகிறது. அத்துடன் ஆக்சிசனேற்றத்தால் 2-மெத்தில்-2,3- பியூட்டேன் டையால் ஆக மாற்றமும் அடைகிறது. மனிதர்களிடமும் இதே பாதை பின்பற்றப்படலாம், பழைய ஆதாரங்கள் மூவிணைய அமைல் ஆல்ககால் மாறாமல் அப்படியே வெளியேற்றப்படுவதாகக் கூறுகின்றன[17] though older sources suggest TAA is excreted unchanged.[3]

மூவினைய அமைல் ஆல்க்கால், 2-மெத்தில்-2,3-பியூட்டேன்டையாலாக ஆக்சிசனேற்றம் அடைதல்

.

மூவிணைய அமைல் ஆல்ககாலின் பயன்பாட்டை பொதுவான எத்தனால் சோதனைகள் அல்லது பிற சாதாரண மருந்து சோதனைகள் மூலம் கண்டறிய முடியாது. நுகர்வுக்குப் பிறகு 48 மணி நேரம் வரை வாயு குரோமாட்டோகிராபி-நிறை நிறமாலையியல் பயன்படுத்துவதன் மூலம் இரத்தம் அல்லது சிறுநீர் மாதிரியிலிருந்து அதன் பயன்பாட்டைக் கண்டறிய முடியும்[16].

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை