பென்சீன்

வேதிச் சேர்மம்

பென்சீன் என்பது ஆறு கரிம அணுக்கள் ஒரு வளையம் போல் சேர்ந்து உருவாகும் ஒரு கரிமவேதியியல் சேர்வையாகும். இதன் வேதியியல் குறியீடு C6H6ஆகும். ஐதரசன் மற்றும் கார்பன் அணுக்கள் மட்டுமே இணைந்து பென்சீன் உருவாவதால் இதுவும் ஒரு ஐதரோ கார்பனாகவே கருதப்படுகிறது. இது சுருக்கமாக Ph-H எனவும் குறிக்கப்படுவதுண்டு. பென்சீன், ஒரு நிறமற்ற, எரியக்கூடிய நீர்மம் (திரவம்). ஒப்பீட்டளவில் உயர்ந்த உருகுநிலையைக் கொண்டது. இது புற்றுநோயைத் தூண்டக்கூடிய தன்மை கொண்டதால், எரிபொருட்களில் இவற்றைச் சேர்ப்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இது தொழில்துறையில் ஒரு முக்கியமான கரைப்பானாகப் பயன்படுவதுடன், மருந்துப் பொருட்கள், நெகிழிகள், செயற்கை இறப்பர், மற்றும் சாயப் பொருட்களின் உற்பத்தியில் முன்னணிப் பொருளாகவும் உள்ளது. பென்சீன், கச்சா எண்ணெயில் ஒரு சேர்பொருளாக உள்ளது. ஆனாலும், இது பெட்ரோலியப் பொருட்களில் இருக்கும் வேறு சேர்வைகளிலிருந்து செயற்கையாக ஆக்கப்படுகின்றது.

பென்சீன்
Full skeletal formula of benzene
Full skeletal formula of benzene
Ball-and-stick model of benzene
Ball-and-stick model of benzene
Simplified skeletal formula of benzene
Simplified skeletal formula of benzene
Space-filling model of benzene
Space-filling model of benzene
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்சீன் (benzene)
முறையான ஐயூபிஏசி பெயர்
வளையஎக்சா-1,3,5-டிரையீன்
வேறு பெயர்கள்
  • 1,3,5-cyclohexatriene
  • benzol
  • phene
இனங்காட்டிகள்
71-43-2 Y
ChEBICHEBI:16716 Y
ChEMBLChEMBL277500 Y
ChemSpider236 Y
InChI
  • InChI=1S/C6H6/c1-2-4-6-5-3-1/h1-6H Y
    Key: UHOVQNZJYSORNB-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H6/c1-2-4-6-5-3-1/h1-6H
    Key: UHOVQNZJYSORNB-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள்Image
KEGGC01407 Y
பப்கெம்241
வே.ந.வி.ப எண்CY1400000
SMILES
  • c1ccccc1
UNIIJ64922108F Y
பண்புகள்
C6H6
வாய்ப்பாட்டு எடை78.11 g·mol−1
தோற்றம்நிறமற்ற நீர்மம்
அடர்த்தி0.8765(20) கி/செமீ3[1]
உருகுநிலை5.5 °செ, 278.7 கெல்வின்
கொதிநிலை80.1 °C, 353.3 K
1.8 கி/லி (15 °செ)[2][3][4]
λmax255 நேனோமீட்டர்
பிசுக்குமை0.652 cP 20 °செல்சியசில்
இருமுனைத் திருப்புமை (Dipole moment)0 டிவை
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு
  • Flammable (F)
  • Carc. Cat. 1
  • Muta. Cat. 2
  • Toxic (T)
R-சொற்றொடர்கள்R45, R46, R11, R36/38,R48/23/24/25, R65
S-சொற்றொடர்கள்S53, S45
தீப்பற்றும் வெப்பநிலை−11.63 °செ, 262 கெல்வின்
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

கண்டுபிடிப்பு

பென்சீன் என்ற சொல் பென்சோயின் பிசின் என்ற இத்தாலிய சொல்லிலிருந்து பெறப்பட்டது ஆகும். சில நேரங்களில் இது "பெஞ்சமின் பிசின்" அல்லது சாம்பிராணி பிசின் என்றும் அழைக்கப்படுகிறது, பதங்கமாதல் மூலமாக பென்சோயினிலிருந்து ஒரு அமிலத்தன்மை கொண்ட பொருளாக இது வடித்தெடுக்கப்பட்டு பென்சாயின் மலர்கள் அல்லது பென்சாயிக் அமிலம் எனப்பெயர் சூட்டப்பட்டு இறுதியாக பென்சால் அல்லது பென்சீன் என்ற பெயரைப் பெற்றது.

1825 ஆம் ஆண்டு, ஒளியூட்டப்பட்ட எரிவாயுவை உற்பத்தி செய்யும்போது எண்ணெய்பசை கொண்ட ஒரு வீழ்படிவாக மைக்கேல் பாரடே பென்சீனைத் தனிமைப்படுத்தினார். ஹைட்ரஜனின் பைகார்புரெட் என்று அதற்கு பெயருமிட்டார்

1833 இல், இலார்டு மிட்செர்லி என்பவர் பென்சாயிக் (பென்சோயின் பிசின்) அமிலம் மற்றும் சுண்ணாம்பை வடிகட்டுதல் வழியாக ஒரு கலவையைத் தயாரித்து அதற்கு பென்சீன் என்ற பெயரைக் கொடுத்தார்.

1836 ஆம் ஆண்டில், பிரஞ்சு வேதியியலாளர் அகஸ்டி லாரெண்ட் என்பவர் இக்கலவைக்கு பீனே என்று பெயரிட்டார்.. ஹைட்ராக்சில் ஏற்றம் பெற்ற பென்சீனான பீனால் சேர்வைக்கும் மற்றும் பென்சீனிலிருந்து தனி ஹைட்ரஜன் அணு பிரித்தெடுப்பு எதிர்வினையின் மூலமாக உருவாகும் பினைல் தனிஉறுப்புக்கும் இப்பெயரே வேர்ச் சொல்லாக அமைந்தது

Historic benzene formulae as proposed by Kekulé.[5]

மேற்கோள்களும் குறிப்புகளும்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பென்சீன்&oldid=3330689" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை