மோக்லி: லெஜண்ட் ஆஃப் த ஜங்கிள்

2018 திரைப்படம்

மோக்லி: லெஜண்ட் ஆஃப் த ஜங்கிள் (Mowgli: Legend of the Jungle) என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த சாகச நாடகத் திரைப்படமாகும். ஆண்டி செர்கிஸின் இயக்கத்தில், காலீ க்ளோவ்ஸின் திரைக்கதையுடன் ருட்யார்ட கிப்ளிங்கின் அனைத்து மொக்லி கதைகளையும் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் ரோஹன் சந்த், மத்தேயு ரைஸ் மற்றும, ப்ரீடா பிண்டோவின் நடித்திருக்கின்றனர். கிறிஸ்டியன் பேல், கேட் பிளான்செட், பெனடிக் கம்பெர்பாட்ச், நவோமி ஹாரிஸ் ஆகியோர் குரல் பதிவு மற்றும் மோசன் கேப்சருடன் நடித்துள்ளனர்.

மோக்லி: லெஜன்ட் ஆப் த ஜங்கிள்
இயக்கம்ஆண்டி செர்கிஸ்
தயாரிப்பு
  • ஸ்டீவ் க்ளோஸ்
  • ஜொனாதன் கவென்டிஸ்
  • டெவிட் பரோன்
மூலக்கதை மோக்லியின் அனைத்து கதைகளும்”
படைத்தவர் ருட்யர்ட் கிப்ளிங்
திரைக்கதைகலி க்ளொவ்ஸ்
இசைநிதின் சவன்னா
ஒளிப்பதிவுமைக்கல் சிரேசின்
படத்தொகுப்பு
  • மார்க்
  • அலெக்ஸ் மாரிகிஸ்
  • ஜெரிமியா ஒ டெரிஸ்கோல்
கலையகம்
  • வார்னர் பிரதர் பிக்சர்ஸ்[1]
  • தி இமேஜினேரியம்
விநியோகம்நெட்பிளிக்ஸ்
வெளியீடு25 நவம்பர் 2018 (2018-11-25)(மும்பை)
29 நவம்பர் 2018 (ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடு
மொழி

நடிகர்கள்

ஓநாய்களால் வளர்க்கப்படும் சிறுவன் மொக்லி - ரோஹன் சந்த்

காலனித்துவ வேட்டைக்காரர் - ஜான் லாக்வுட்

மெசுவா என்ற பெண் - ப்ரீடா பிண்டோ

குரல் பதிவுகள்

பகீரா (கருஞ் சிறுத்தை) - கிறிஸ்டின் பேல்

பாலு (இமயமலை பழுப்பு நிறக்கரடி) - ஆண்டி செர்கிஸ்

ஷேர்கான் (வங்காள புலி) - பெனடிக் கம்பெர்பாட்ச்

மலைப்பாம்பு - கேட் பிளான்செட்

கோடிட்ட கழுதைப்புலி - டாம் ஹாலேண்டர்

அகிலா (ஓநாய்) - பீட்டர் முல்லன்

மோக்லியின் வளர்ப்புத் தாயான இந்திய ஓநாய் - நவோமி ஹாரிஸ்

மோக்லியின் வளர்ப்பு தந்தையான இந்திய ஓநாய் - எடி மார்சன்

தயாரிப்பு

2012 ஆம் ஆண்டில் வார்னர் பிரதர் பிக்சர்ஸ் ஸ்டிவ்ஸ் க்ளோவ்ஸுடன் திரைப்படத்தை எழுதுவதற்கும், இயக்குவதற்கும், தயாரிப்பதற்கும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்தது. 2013 ஆம் ஆண்டு திசம்பரில் க்ளோவ்ஸ் இப்படத்தை தயாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.[2] க்ளோவ்ஸின் மகள் காலி க்ளோசுடன் அலெசான்ட்ரோ கோன்சலஸ் இரிருட்டு படத்தின் இயக்கத்திற்காக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். இருப்பினும் முரண்பாடுகளன் காரணமாக கோன்சலஸ் இரிருட்டு திரைப்படத்தில் இருந்து விலகினார்.[3] 2014 ஆம் ஆண்டில் ஆண்டி செர்கிஸ், தி இமாஜினேரியத்தின் ஒத்துழைப்பாளரான ஜொனாதன் கேவென்டிசுடன் இணைந்து இந்த படத்தை இயக்கி தயாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.[4] தயாரிப்பு வடிவமைப்பாளராக ஃப்ரீமேன், ஆடை வடிவமைப்பாளராக அலெக்சான்ட்ரா பைர்ன் ஆகியோர் பணியாற்றினார்கள்.

2014 ஆம் ஆண்டில் சேர்கானின் எதிர்மறையான கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுப்பதற்காக பெனடிக்ட் கம்பெர்பாட்ச் படத்தில் இணைந்தார்.[5] கிறிஸ்டியன் பேல், கேட் பிளான்செட், நவோமி ஹாரிஸ், டாம் ஹாலண்டர், எடி மார்சன், பீட்டர் முல்லன் மற்றும் ரோஹன் சந்த் ஆகியோர் நடிப்பதாக மறுநாள் அறிவிக்கப்பட்டது.[6] 2015 ஆம் ஆண்டு மார்ச் 9 அன்று முதன்மை புகைப்படம் எடுத்தல் தொடங்கியது.[7] இது தென்னாப்பிரிக்காவிலும், இங்கிலாந்தின் லீவ்ஸ்டனில் உள்ள வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவிலும் படமாக்கப்பட்டது.[8]

வெளியீடு

இந்த திரைப்படத்திற்கு முதலில் ஜங்கிள் புக்: ஆரிஜின்ஸ் என்று பெயரிடப்பட்டது. 2016 அல் வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் வால்ட் டிஸ்னியின் த ஜங்கிள் புக் என்ற திரைப்படத்தின் வெளியீட்டினால் இந்த திரைப்படத்தின் 2018 ஆம் ஆண்டில் வெளியிட மாற்றியமைக்கப்பட்டது.[9] 2017 ஆம் ஆண்டில் திசம்பரில் அதிகாரப்பூர்வ தலைப்பு மொக்லி என மாற்றப்பட்டது.[10] இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் 2018 ஆம் ஆண்டு மே 21 அன்று திரையிடப்பட்டது.

2018 ஆம் ஆண்டில் சூலையில் நெட்பிக்ஸ் இந்த திரைப்படத்தின் உலகளாவிய விநியோக உரிமையை வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கியதாகவும் 3டி வெளியிட்டு திகதியை  நிர்ணயிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.[11] 2018 ஆம் ஆண்டில் நவம்பர் 7 அன்று இந்த திரைப்படத்திற்கான புதிய முன்னோட்டத்தை நெட்ஃபிக்ஸ் வெளியிட்டது. மொக்லி: லெஜண்ட் ஆஃப் தி ஜங்கிள் திரைப்படம் 2018 ஆம் ஆண்டில் நவம்பர் 18 ஆம் திகதி மும்பையில் உலகத் திரையிடலைக் கொண்டிருந்தது. முதன் முறையாக ஹாலிவுட் திரைப்படம் இந்தியாவில் திரையிடலை கொண்டிருந்தது.[12]

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்