மோனோபொட்டாசியம் பாசுபேட்டு

மோனோபொட்டாசியம் பாசுபேட்டு (Monopotassium phosphate) (இது பொட்டாசியம் டைஐதரசன்பாசுபேட்டு, அல்லது ஒற்றைகாரத்துவ பொட்டாசியம் பாசுபேட்டு எனவும் அழைக்கப்படுகிறது) என்பது KH2PO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கனிமச் சேர்மம் ஆகும். இருபொட்டாசியம் பாசுபேட்டு (K2HPO4).(H2O)x) உடன் சேர்த்து இது பெரும்பாலும் உரம், உணவு சேர்க்கைப் பொருள் மற்றும் இடையகக் காரணியாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்பு பெரும்பாலும் இருபொட்டாசியம் உப்பு மற்றும் பாசுபோரிக் அமிலத்துடன் இணைபடிகமாதலுக்கு உள்ளாகிறது.

மோனோபொட்டாசியம் பாசுபேட்டு

பி அச்சு வழியாக மோனோ பொட்டாசியம் பாசுபேட்டின் இரண்டு படிக அமைப்புகள்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
பொட்டாசியம் டைஐதரசன்பாசுபேட்டு
பொட்டாசியம் டைஐதரசன்(டெட்ராக்சிடோபாசுபேட்டு)(1−)
முறையான ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் டைஐதராக்சிடோபாசுபேட்டு(1−)
வேறு பெயர்கள்
பொட்டாசியம் பாசுபேட்டு ஒற்றைச்சாய்வு;
பாசுபோரிக் அமிலம், ஒற்றைபொட்டாசியம் உப்பு;
பொட்டாசியம் பைபாசுபேட்டு
இனங்காட்டிகள்
7778-77-0 Y
ChEMBLChEMBL1200925 N
ChemSpider22914 N
EC number231-913-4
InChI
  • InChI=1S/3K.H3O4P/c;;;1-5(2,3)4/h;;;(H3,1,2,3,4)/q3*+1;/p-3 Y
    Key: LWIHDJKSTIGBAC-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3K.H3O4P/c;;;1-5(2,3)4/h;;;(H3,1,2,3,4)/q3*+1;/p-3
    Key: LWIHDJKSTIGBAC-DFZHHIFOAX
யேமல் -3D படிமங்கள்Image
பப்கெம்516951
வே.ந.வி.ப எண்TC6615500
  • [K+].OP(O)([O-])=O
UNII4J9FJ0HL51 Y
பண்புகள்
KH
2
PO
4
வாய்ப்பாட்டு எடை136.086 கி/மோல்
தோற்றம்வெண்மை நிறத் தூள்
நீர் உறிஞ்சும் திறன்
மணம்மணமற்றது

pH-??

அடர்த்தி2.338 கி/செமீ3
உருகுநிலை 252.6 °C (486.7 °F; 525.8 K)
கொதிநிலை 400 °C (752 °F; 673 K) (சிதைவுறுகிறது)
22.6 கி/100 மிலி (20 °செல்சியசு)
83.5 கி/100 மிலி (90 °செல்சியசு)
கரைதிறன்எத்தனாலில் சிறிதளவு கரையும்
காடித்தன்மை எண் (pKa)6.86[1]
காரத்தன்மை எண் (pKb)11.9
ஒளிவிலகல் சுட்டெண் (nD)1.4864
கட்டமைப்பு
படிக அமைப்புநான்முகி[2]
புறவெளித் தொகுதிI42d
Lattice constanta = 0.744 நேனோமீட்டர், b = 0.744 நேனோமீட்டர், c = 0.697 நேனோமீட்டர்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்External MSDS
GHS pictogramsThe exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[3]
GHS signal wordஎச்சரிக்கை[3]
H315, H319[3]
P264, P280, P305+351+338, P321, P332+313, P337+313[3]
தீப்பற்றும் வெப்பநிலைஎளிதில் தீப்பற்றாதது
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
3200 மிகி/கிகி (எலி, வாய்வழி)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள்மோனோசோடியம் பாசுபேட்டு
மோனோஅம்மோனியம் பாசுபேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அறை வெப்பநிலையில் தனித்த ஒற்றைப் படிகங்கள் பாராமின்தன்மையைப் (மின்புலத்தின் கீழ் முனைவுறும் தன்மை) பெற்றுள்ளன. மேலும், −150 °C (−238 °F) க்கும் குறைவான வெப்பநிலையில், அவை பெர்ரோமின்தன்மையைப் (தன்னிச்சையாக முனைவுறும் தன்மை) பெறுகின்றன.

அமைப்பு

ஒற்றைபொட்டாசியம் பாசுபேட் பல்உருவ அமைப்பைக் கொண்டுள்ளது. அறை வெப்பநிலையில் இது நான்முகி சமச்சீர் தன்மை கொண்ட பாராமின்தன்மை கொண்ட படிகங்களை உருவாக்குகிறது. –150°செல்சியசு (–238° ஃபாரன்கீட்) என்ற வெப்பநிலைக்கு குளிர்ந்தவுடன் இச்சேர்மம் செஞ்சாய்சதுர சமச்சீர் தன்மையும், ஃபெர்ரோமின்தன்மையும் கொண்ட நிலைக்கு மாறுகிறது. ஐதரசனை டியூட்டீரியத்தால் இடப்பெயர்ச்சி செய்யும்போது, நிலைமாறு வெப்பநிலை –50° செல்சியசு முதல் வரை மாறுகிறது. 190° செல்சியசுக்கு வெப்பப்படுத்தும் போது அதன் கட்டமைப்பை ஒற்றைச் சாய்வு நிலைக்கு மாற்றுகிறது. மேலும், வெப்பமடையும் போது, மோனோபொட்டாசியம் பாசுபேட்டானது, நீர் இழப்பால், பொட்டாசியம் மெட்டாபாசுபேட்டாக, (KPO3) மாறுகிறது.

இயற்பண்புகள்

இதன் மூலக்கூறு நிறை 136.086 கிமோல் ஆகும். இதன் உருகுநிலை 252.6 °செல்சியசு ஆகும். இது நீரில் சிறிதளவு கரையக்கூடியது. ஆல்ககாலில் கரையாது.

வேறு பெயர்கள்

மோனோபொட்டாசியம் டைஐதரசன் பாசுபேட்டு, மோனாேபொட்டாசியம் மோனோபாசுபேட்டு, மோனோபொட்டாசியம் ஆர்த்தோபாசுபேட்டு, பாசுபாரிக் அமிலத்தின் மோனோபொட்டாசியம் உப்பு, பாசுபாரிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பு, பொட்டாசியம் டைஐதரசன் பாசுபேட்டு, பொட்டாசியம் டைபாசுபேட்டு, பொட்டாசியம் ஆர்த்தோபாசுபேட்டு ஆகியவை இச்சேர்மத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்களாகும்.

உற்பத்தி

பொட்டாசியம் கார்பனேட்டின் மீதான பாசுபாரிக் அமிலத்தின் வினையால் மோனோபொட்டாசியம் பாசுபேட்டு தயாரிக்கப்படுகிறது.

பயன்பாடுகள்

உர-தர ஒற்றை பொட்டாசியம் பாசுபேட்டு தூள் 52% P
2
O
5
மற்றும் 34% K
2
O
ஆகியவற்றிற்கு சமானமானதாகும். இந்தக் கலவை நைட்ரசன்-பொட்டாசியம்-பாசுபரசு 0-52-34 என பெயரிடப்பட்டுள்ளது. மோனோபொட்டாசியம் பாசுபேட்டு தூள் பெரும்பாலும் பசுமைக்குடில் வர்த்தகம் மற்றும் நீரியல் தாவர வளர்ப்பு ஆகியவற்றில் ஊட்டச்சத்து மூலமாக பயன்படுத்தப்படுகிறது.

ஒரு படிகமாக, மோனோகால்சியம் பாசுபேட்டு அதன் நேரியல் அல்லாத ஒளியியல் பண்புகளுக்காக குறிப்பிடத்தக்கதாகும். ஒளியியல் குறிப்பேற்றிகளிலும், இரண்டாம் அடுக்குச்சுர உருவாக்கம் (எஸ்.எச்.ஜி) போன்ற நேரியல் அல்லாத ஒளியியல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இது பொட்டாசியம் டைடியூட்ரியம் பாசுபேட்டாக, சிறிதளவு வேறுபட்ட பண்புகளுடன் குறிக்கப்பட வேண்டியதாய் உள்ளது. உயர்ந்த அளவு டியூட்டிரேற்றம் செய்யப்பட்ட பொட்டாசியம் டைடியூட்ரியம் பாசுபேட்டானது நேரியலல்லாத அதிர்வெண மாற்றிகளில் வழக்கமான புரோட்டானேற்றம் செய்யப்பட்ட பொட்டாசியம் மைபாசுபேட்டுக்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

இச்சேர்மம் உரக்கலவைகளில் காரகாடித்தன்மைச் சுட்டெண்ணைக் குறைவான நிலையில் வைப்பதன் மூலம் அம்மோனியா விடுபடுதலைத் தடுக்கிறது. அம்மோனியம், நைட்ரேட்டு அல்லது யூரியா போன்ற இதர நைட்ரசனைக் கொண்டுள்ள உரங்களோடு இணைத்துப் பயன்பட மிகவும் உகந்ததாகும். பூச்சிக்கொல்லிகளுடன் இணைத்துப் பயன்படுத்தப்படும் போது அந்தப் பூச்சிக்கொல்லிகளின் செயலுறுதிறனை அதிகரிக்கிறது.

குறிப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்