பாசுபாரிக் காடி

பாசுபாரிக் காடி (phosphoric acid) என்றும் ஆர்த்தோபாசுபாரிக் காடி (Orthophosphoric acid)என்றும் பாசுபாரிக் (V) காடி என்றும் அழைக்கப்படும் பாசுபரசு உள்ள ஒரு கரிமமற்ற காடி. இக்காடியில் மூன்று ஐதராக்சைல் (-OH) குழுக்கள் உள்ளன. பாசுபாரிக் காடி ஐதரச அணுக்களும் நான்கு ஆக்சிசன் அணுக்களும் ஒரு பாசுபரசு அணுவும் சேர்ந்த சேர்மங்களால் ஆனது. இதன் வேதியியல் வாய்பாடு H3PO4. மூன்று நீர் (H2O). மூலக்கூறுகளுடன் ஒரு பாசுபரசு பென்ட்டாக்சைடு (P2O5) மூலக்கூற்றை சேர்த்தால் இரண்டு பாசுபரசுக் காடி மூலக்கூறுகள் கிட்டும். ஆர்த்தோபாசுபாரிக் காடி மூலக்கூறுகள் பலவும் தன்னுடனே சேர்ந்து பல்வேறு வேதியியல் சேர்மங்களாகக்கூடும். இவையும் பாசுபாரிக் காடிகள் என்று கூறப்படுகின்றன. பாசுபாரிக் காடிகள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் உரம் செய்யப் பயன்படுகின்றது. இது தவிர இரும்புத் துருவை நீக்கவும், பூச்சிக் கொல்லிகளிலும், பல் மருத்துவத்திலும், சிலிக்கான் நுண்மின்சுற்றுகள் (தொகுசுற்றுகள்) உருவாக்குவதில் அலுமினியத்தை அரித்தெடுக்கவும், புளிப்பு சுவை தருவதால் சில கோலா குடிநீர்மங்களிலும் பயன்படுத்தபடுகின்றது.

பாசுபாரிக் காடி
பாசுபாரிக் காடி Phosphoric acid
பாசுபாரிக் காடி Phosphoric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
trihydroxidooxidophosphorus
phosphoric acid
பாசுபாரிக் காடி
வேறு பெயர்கள்
ஆர்த்தோபாசுபாரிக் காடி
Orthophosphoric acid
இனங்காட்டிகள்
7664-38-2 N
ChemSpider979
EC number231-633-2
வே.ந.வி.ப எண்TB6300000
UN number1805
பண்புகள்
H3PO4
வாய்ப்பாட்டு எடை98.00 g/mol
தோற்றம்வெள்ளை திண்மம் அல்லது நிறமற்ற, பிசுப்புமையான நீர்மம் (>42 °C)
அடர்த்தி1.685 கி/மிலி (g/ml) (நீர்மம்)
உருகுநிலை 42.35 °C (108.23 °F; 315.50 K)
கொதிநிலை 158 °C (316 °F; 431 K)
காடித்தன்மை எண் (pKa)2.12, 7.21, 12.67
பிசுக்குமை2.4-9.4 cP (85% aq. soln.)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்ICSC 1008
ஈயூ வகைப்பாடுஅரிப்புத்தன்மை C
Corrosive (C)
R-சொற்றொடர்கள்R34
S-சொற்றொடர்கள்(S1/2), S26, S45
தீப்பற்றும் வெப்பநிலைதீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
phosphorus oxoacids
தொடர்புடையவை
Hypophosphorous acid
Phosphorous acid
Pyrophosphoric acid
Tripolyphosphoric acid
Hypophosphoric acid
Perphosphoric acid
Permonophosphoric acid
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆர்த்தோபாசுபாரிக் காடி வேதியியல்

நீர் கலக்கா (நீரற்ற) தூய பாசுபாரிக் காடி ஓர் வெண்மையான திண்மம். இது 42.35 °C வெப்பநிலையில் உருகி நிறமற்ற பிசுப்புமையான நீர்மமாக மாறுகின்றது

இக் காடியின் ஆர்த்தோ என்னும் முன்னொட்டு பாலி பாசுபாரிக் காடிகள் என்று அழைக்கப்படும் மற்றவற்றில் இருந்து பிரித்துக் காட்டவே. ஆர்த்தோபாசுபாரிக் காடி நச்சுத்தனமையற்ற, கரிமமற்ற, வலிமைகுறைந்த (மென்மையான), மூன்று ஐதரச (முப்புரோட்டிக்) காடி. இது அறை வெப்ப, அழுத்த நிலைகளில் திண்மநிலையில் உள்ளது. ஆர்த்தோபாசுபாரிக் காடி முனைத்தன்மை கொண்ட மூலக்கூறு ஆகையால நீரில் எளிதில் கரையும். ஆர்த்தோ மற்றும் பிற பாசுபாரிக் காடிகளின் ஆக்சிசனாக்க நிலை +5; எல்லா ஆக்சிசன் அணுக்களின் ஆக்சிசனாக்கு நிலை -2, ஐதரசனின் நிலை +1. ஆர்த்தோபாசுபாரிக் காடி, மூன்று ஐதரசக்காடி என்பதால் மின்மமாக்கப்பட்ட ஐதரச அணுவை H+ மூன்று மடங்கு நீரில் பிரியச் செய்ய இயலும். இது நீர் மூலக்கூறுடன் இணைந்து கீழ்க்காணும் வேதியியல் வினைகளுக்கு உட்படும்.

H3PO4(s)   + H2O(l) H3O+(aq) + H2PO4(aq)       Ka1= 7.5×10−3
H2PO4(aq)+ H2O(l) H3O+(aq) + HPO42–(aq)       Ka2= 6.2×10−8
HPO42–(aq)+ H2O(l) H3O+(aq) +  PO43–(aq)        Ka3= 2.14×10−13
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பாசுபாரிக்_காடி&oldid=2498651" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை