கொனியேட்டி ரோசையா

(ரோசையா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொனிஜெடி ரோசையா (Konijeti Rosaiah, தெலுங்கு: కొణిజేటి రోశయ్య, 4 சூலை, 1933- 4 திசம்பர், 2021) ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார்.[2][3] இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியான அவர் அமைச்சுப் பதவிகளில் இருந்துள்ளார். அவர் மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய பாங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்கி முதல்வர் பணியேற்ற இவர் நவம்பர் 24, 2010 அன்று தமது சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார்.[4] இவரது பதவி விலகலை அடுத்து கிரண்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கொனிஜெடி ரோசையா
Konijeti Rosaiah
13வது தமிழக ஆளுநர்
பதவியில்
31 ஆகஸ்டு 2011 – 30 ஆகஸ்டு 2016
முன்னையவர்சுர்சித் சிங் பர்னாலா
பின்னவர்சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு)
15வது முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம்
பதவியில்
03 செப்டம்பர் 2009 – 24 நவம்பர் 2010
முன்னையவர்யெ.சா.ராசசேகர ரெட்டி
பின்னவர்கிரண் குமார் ரெட்டி
தொகுதிகுண்டூர்[1](சட்ட மேலவை உறுப்பினர்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 சூலை 1933 (1933-07-04) (அகவை 90)
வேமூரு, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா இந்தியா
இறப்பு4 திசம்பர் 2021(2021-12-04) (அகவை 88)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சிவலட்சுமி
பிள்ளைகள்கே எசு சுப்பாராவ், பி ரமாதேவி, கே எசு என் மூர்த்தி
வாழிடம்(s)அமீர்பேட், ஐதராபாத்

ஆகத்து 31, 2011 முதல் ஆகத்து 30, 2016 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார்.[5]

பதவிகள்

  • 1968, 1974 மற்றும் 1980 ஆந்திர மாநில சட்டப்பேரவை
  • 1977-1979 ஆந்திர மாநிலம் தொழில்துறை உட்கட்டமைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர்.
  • 1978-1979, 1983-1985 ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர்.
  • 1979-1980 ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடத்துறை அமைச்சர்.
  • 1980-1981 ஆந்திர மாநில வீட்டு வசதி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர்.
  • 1982-1983 ஆந்திர மாநில உள்துறை அமைச்சராக இருந்தார்.
  • 1989-1990 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், போக்குவரத்து, உயர்கல்வி, கைத்தறி மற்றும் கதர்துறை, அமைச்சர்.
  • 1991-1992 ஆந்திர மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
  • 1992-1994 ஆந்திர மாநில நிதி, மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்.
  • 1995-1997 ஆந்திரமாநிலம் காங்கிரஸ் கட்சித் தலைவர்.
  • 1998 நரசரொபேட் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
  • 2004-2009 ஆந்திர மாநில நிதி, திட்டம்,குடும்ப நலத்துறை அமைச்சர்.
  • 2009-2010 ஆந்திர மாநில முதல்வர்.
  • 2011-2016 தமிழ்நாடு ஆளுநர்.[6][7]

விருதுகள்

2007 ஆம் ஆண்டு ஆந்திரப் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.[8]

மறைவு

உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சைபெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி, ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 2021 திசம்பர் 4 அன்று காலை 8 மணியளவில் உயிரிழந்தார்.[9]

மேற்கோள்கள்

அரசியல் பதவிகள்
முன்னர்
யானமல இராமகிருஷ்ணுடு
ஆந்திரப் பிரதேச நிதியமைச்சர்
2004–2010
பின்னர்
அனம் இராம நாராயண இரெட்டி
முன்னர்ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்
2009–2010
பின்னர்
அரசு பதவிகள்
முன்னர்பின்னர்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=கொனியேட்டி_ரோசையா&oldid=3583124" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்