தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
(தமிழக ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழக ஆளுநர் -தமிழக ஆளுநர்களின் பட்டியல் தென்னிந்தியாவின் மாநிலமான, தமிழ்நாடு மாநிலத்தில், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பெற்ற ஆளுநர் தமிழகத்தின் அரசயலமைப்புத் தலைவராக அவரின் பிரதிநிதியாக செயல்படுபவர். இவரே மாநிலத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர்.

தமிழ்நாடு ஆளுநர்
ராஜ் பவன், தமிழ்நாடு
தற்போது
ஆர். என். ரவி

18 செப்டம்பர் 2021 (2021-09-18) முதல்
வாழுமிடம்ராஜ் பவன், சென்னை, (தமிழ்நாடு)
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
இணையதளம்www.tnrajbhavan.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள தமிழகம்

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆளுநர்கள் 1946ல் இருந்தே நியமனம் செய்யப்பட்டவர்களாகவும், தற்காலிகப் பொறுப்புகளுடனும் பதவி வகித்து வந்துள்ளனர்.

தற்போதுள்ள தமிழகம் முன்னர் பிரதேசங்களையும், மாநிலங்களையும் உள்ளடக்கிய மதராஸ் இராஜதானியாக (சென்னை இராஜதானியாக-- மெட்ராஸ் பிரசிடென்சி) இருந்தக் காலத்திலிருந்தே ஆளுநர்கள் நியமனம் இருந்து வந்தது என்பது வரலாற்று சான்றாகும்.[1][2]

இம்மாநிலத்தின் தற்பொழுதைய ஆளுநராக மேதகு ஆர். என். ரவி[3] பதவி வகித்துக் கொண்டு வருகின்றார்.

ஆளுநர்கள்

மதராஸ் இராஜதானி 1909, தெற்குப் பகுதி

மதராஸ் இராஜதானி அல்லது மதராஸ் மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் அதிகார எல்லைக்குட்பட்ட மாகாணமாக, செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் (புனித ஜார்ஜ் கோட்டை) தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.

இப்பொழுதுள்ள தமிழ்நாடு, மலபார் பிராந்தியமான வட கேரளம் , ஆந்திராவின் கடற்கரை மற்றும் ராயலசீமா பிராந்தியங்கள், பெல்லாரி, தக்சன கன்னடா, மற்றும் கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மிகப் பெரிய மாகாணமாக விளங்கியது.

மதராஸ் இராஜதானி 1653 இல் ஆங்கிலேயர் குடியேறிய கோரமண்டல் கடற்கரைப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு பெரிய மாகாணமாக நிர்மாணிக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலையடைந்ததற்குப்பின், மதராஸ் மாநிலம் என்றப் பெயருடனும், தற்பொழுது தமிழ்நாடு மாநிலம் என்றப் பெயருடன் அமைந்ததின் முன்னோடியாக மதராஸ் இராஜதானி விளங்குகின்றது. இதனோடு இணைந்திருந்த பிராந்தியங்கள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் கேரளம் ஆகியப் பிராந்தியங்கள் தனி மாநிலங்களாக பிரிந்து தற்பொழுது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.[4]

Tabular
#பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவுகாலவரை[nb 1]
1William Thomas Denison18 February 186126 November 1863
2Edward Maltby (acting)26 November 186318 January 1864
3William Thomas Denison18 January 186427 March 1866
4Lord Napier27 March 186619 February 1872
5Alexander John Arbuthnot (acting)19 February 187215 May 1872
6Lord Hobart15 May 187229 April 1875
7William Rose Robinson (acting)29 April 187523 November 1875
8Duke of Buckingham and Chandos23 November 187520 December 1880
9William Huddleston (acting)24 May 18815 November 1881
10Mountstuart Elphinstone Grant Duff5 November 18818 December 1886
11Robert Bourke, Baron Connemara8 December 18861 December 1890
12John Henry Garstin1 December 189023 January 1891
13Bentley Lawley, Baron Wenlock23 January 189118 March 1896
14Arthur Elibank Havelock18 March 189628 December 1900
15Arthur Oliver Villiers-Russell, Baron Ampthill28 December 190030 April 1904
16James Thompson (acting)30 April 190413 December 1904
17Arthur Oliver Villiers-Russell, Baron Ampthill13 December 190415 February 1906
18Gabriel Stoles (acting)15 February 190628 March 1906
19Arthur Lawley, Baron Wenlock28 March 19063 November 1911
20Thomas David Gibson-Carmichael, Baron Carmichael3 November 191130 March 1912
21Sir Murray Hammick (acting)30 March 191230 October 1912
22John Sinclair, Baron Pentland30 October 191229 March 1919
23Sir Alexander Gordon Cardew29 March 191910 April 1919
24George Freeman Freeman-Thomas, Baron Willingdon10 April 191912 April 1924
During dyarchy (1920–1937)
1Sir P. Rajagopalachari19201923Non-Partisan
1ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை6 மே19467 செப்டம்பர் 19481
2கிருஷ்ண குமாரசிங் பவசிங்7 செப்டம்பர் 194812 மார்ச் 19521
3ஸ்ரீ பிரகாசா12 மார்ச்195210 டிசம்பர் 19561
4ஏ.ஜெ. ஜான்10 டிசம்பர்195630 செப்டம்பர் 19581
5பகாலா வெங்கட்ட ராஜமன்னார் (தற்காலிகம்)1 அக்டோபர் 195824 ஜனவரி 19581
6விஷ்ணுராம் மேதி24 ஜனவரி 19584 மே 19641
7ஜெயச்சாமராஜா உடையார் பகதூர்4 மே 196424 நவம்பர் 19641
8பி. சந்திர ரெட்டி (தற்காலிகம்)[5]24 நவம்பர் 19647 டிசம்பர் 19651
9ஜெயச்சாமராஜா உடையார் பகதூர் [nb 2]7 டிசம்பர் 196528 ஜூன் 19661
10சர்தார் உஜ்ஜல் சிங் (தற்காலிகமாக 16 ஜூன் 1967 வரை)28 ஜூன் 196614 ஜனவரி 19691

தமிழ்நாடு

மதராஸ் மாநிலம் ஜனவரி 14, 1969,[2] அன்று தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் கொண்டது. தமிழக ஆளுநர்கள் மாநில அளவில் மைய அரசின் வரையறையின்படி இந்தியக் குடியரசுத் தலைவரின் அதிகாரவரம்பையேப் பெற்றுள்ளனர். ஆனால் ஆளுநர் பெயரளவில் மட்டுமே தமிழக மாநிலத் தலைமையை ஏற்றுள்ளார். மாநிலப் பொறுப்புகள் மற்றும் ஆட்சி அதிகாரங்களை தமிழக மாநில முதல்வர்கள் மற்றும் அவரது அமைச்சரவையே பெற்றுள்ளன. தமிழக மாநில அரசின் திட்டங்கள், சட்டங்கள் மற்றும் செயல் வடிவங்கள் ஆளுநரின் பெயரிலேயே நிறைவேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டவணை
வ.எண்பெயர்படம்பதவி ஆரம்பம்பதவி முடிவுகாலவரை[nb 1]ஜனாதிபதி
1சர்தார் உஜ்ஜல் சிங்14 ஜனவரி 196927 மே 19711சாகீர் உசேன்
2(கே. கே. ஷா) 27 மே 197116 ஜூன் 19761வி. வி. கிரி
3மோகன் லால் சுகாதியா 16 ஜூன் 197608 ஏப்ரல் 19771பக்ருதின் அலி அகமது
_பி. கோவிந்தன் நாயர் (தற்காலிகம்)[6]09 ஏப்ரல் 197727 ஏப்ரல் 19771பசப்பா தனப்பா ஜாட்டி
4பிரபுதாஸ் பட்வாரி27 ஏப்ரல் 197727 அக்டோபர் 19801
_எம். எம். இஸ்மாயில் (தற்காலிகம்)27 அக்டோபர் 198004 நவம்பர் 19801நீலம் சஞ்சீவ ரெட்டி
5சாதிக் அலி04 நவம்பர் 198003 செப்டம்பர் 19821
6சுந்தர் லால் குரானா (எஸ். எல். குரானா)03 செப்டம்பர் 198217 பெப்ரவரி 19881ஜெயில் சிங்
7பி. சி. அலெக்சாண்டர்17 பெப்ரவரி 198824 மே 19901ரா. வெங்கட்ராமன்
8சுர்ஜித் சிங் பர்னாலா 24 மே 199015 பெப்ரவரி 19911
9பீஷ்ம நாராயண் சிங் 15 பெப்ரவரி 199131 மே 19931
10எம். சென்னா ரெட்டி31 மே 199302 டிசம்பர் 19961சங்கர் தயாள் சர்மா
_கிரிஷன் காந்த் (தற்காலிகம்)[6] 02 டிசம்பர் 199625 ஜனவரி 19971
11எம். பாத்திமா பீவி 25 ஜனவரி 199703 ஜூலை 20011
_சி. ரங்கராஜன் (தற்காலிகம்) 03 ஜூலை 200118 ஜனவரி 20021கே. ஆர். நாராயணன்
12பி.எஸ். ராம்மோகன் ராவ் 18 ஜனவரி 200203 நவம்பர் 20041அப்துல் கலாம்
(8)சுர்ஜித் சிங் பர்னாலா 03 நவம்பர் 200431 ஆகஸ்ட் 20112
13கொனியேட்டி ரோசையா 31 ஆகத்து 201130 ஆகத்து 20161பிரதிபா பாட்டில்
_சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு ) 02 செப்டம்பர் 201606 அக்டோபர் 20171பிரணாப் முகர்ஜி
14பன்வாரிலால் புரோகித் 06 அக்டோபர் 201717 செப்டம்பர் 20211ராம்நாத் கோவிந்த்
15ஆர். என். ரவி 18 செப்டம்பர் 2021தற்போது பதவியில்1

வரலாற்றுப் பதிவுகள்

மேதகுசுர்ஜித் சிங் பர்னாலாஇரண்டு முறை ஆளுநர் பதவி வகித்தவர்.
  • ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா மட்டுமே இருமுறை தமிழகத்தின் ஆளுநராகப் பதவி வகித்தவர் மற்றும் அதிக நாட்கள் பதவி வகித்தவர்- மே 24, 1990 முதல் பெப்ரவரி 15, 1991 வரை மற்றும் நவம்பர் 3, 2004 முதல் ஆகஸ்ட் 31 2011 வரை.
  • தமிழகத்தின் ஆளுநராக குறைந்த நாட்கள் பதவி வகித்தவராக எம்.எம். இஸ்மாயில் என்பவர். தற்காலிக ஆளுநராகப் பதவி வகித்த இவர் பதவி வகித்த காலம் 9 நாட்கள் மட்டுமே. (அக்டோபர் 27, 1980-நவம்பர் 4. 1980).

மேற்கோள்கள்

குறிப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை