ஆர். என். ரவி

தமிழக ஆளுநரும் மேனாள் காவல் துறை அதிகாரியும் ஆவார்

ஆர். என். ரவி (Ravindra Narayana Ravi; பிறப்பு: 3 ஏப்ரல் 1952) என்பவர் முன்னாள் இந்திய அதிகாரி ஆவார். தமிழக ஆளுநராக 2021 செப்டம்பர் 18 அன்று பதவியேற்ற இவர்,[2] நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றியவராவார்.[3][4][5][6]

இரவீந்திர நாராயண ரவி
15 ஆவது தமிழ்நாடு ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
18 செப்டம்பர் 2021[1]
முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்
முன்னையவர்பன்வாரிலால் புரோகித்
18 ஆவது நாகாலாந்து ஆளுநர்
பதவியில்
1 ஆகத்து 2019 – 17 செப்டம்பர் 2021
முதலமைச்சர்நைபியு ரியோ
முன்னையவர்பத்மனாப ஆச்சாரியா
பின்னவர்ஜகதீஷ் முகீ
மேகாலயா ஆளுநர்
கூடுதல் பொறுப்பு
பதவியில்
18 திசம்பர் 2019 – 26 சனவரி 2020
முதலமைச்சர்கான்ராட் சங்மா
முன்னையவர்ததகதா ராய்
பின்னவர்ததகதா ராய்
இந்திய தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர்
பதவியில்
05 அக்டோபர் 2018 – 31 சூலை 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 ஏப்ரல் 1952 (1952-04-03) (அகவை 72)
பட்னா, பீகார், இந்தியா
தேசியம்இந்தியன்
துணைவர்லெட்சுமி ரவி
வாழிடம்(s)ராஜ் பவனம், கிண்டி, சென்னை

குடும்பம்

பீகாரின் பாட்னாவில் பிறந்த இவருக்கு இலட்சுமி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மூன்று குழந்தைகளும் உள்ளனர்.[7]

பணி

இந்தியக் காவல் துறை அதிகாரியான இவர், கேரள மாநில 1976ஆம் ஆண்டு தொகுதி அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் 2012இல் இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2014 தேசிய பாதுகாப்பு மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்டோபர் 5, 2018 அன்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

ஆளுநர் பணி

நாகாலாந்து ஆளுநர்

2014 முதல் தேசிய சோசியலிசக் கவுன்சில் ஆப் நாகாலாந்து குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையில் மத்தியத்தராகப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். இவரது முயற்சியின் பலனாகப் போராட்டக் குழுவிற்கும் இந்திய அரசிற்கும் இடையே நாகாலாந்து அமைதி உடன்படிக்கை ஆகத்து 2015 இல் கையெழுத்தானது.[8][9] 20 சூலை 2019 இல் நாகாலாந்து மாநில ஆளுநராகப் பதவியேற்றார்.[5]

தமிழ்நாடு ஆளுநர்

இவர் செப்டம்பர் 9, 2021 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ஆல் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 18, 2021 அன்று சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சன்ஜிப் பானர்ஜி முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றார்.[10]

மேற்கோள்கள்

முன்னர்
பன்வாரிலால் புரோகித்
தமிழக ஆளுநர்
18 செப்டம்பர் 2021 முதல்
பின்னர்
பதவியில்


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆர்._என்._ரவி&oldid=3920679" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை