விஜய் ருபானி

இந்திய அரசியல்வாதி

விஜய் ருபானி (Vijay Rupani (பிறப்பு 1956 ஆகத்து 2) என்பவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தற்போது குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக 2016 ஆகத்து 7 முதல் 2021 செப்டம்பர் 12 வரை இருந்தவர்.[2] இவர் கட்சியின் மாநிலத் தலைவராகவும் மேற்கு ராஜ்கோட் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளார்.[3]

விஜய் ருபானி
Vijay Rupani
16வது குஜராத் முதலமைச்சர்
பதவியில்
7 ஆகத்து 2016 – 12 செப்டம்பர் 2021
முன்னையவர்ஆனந்திபென் படேல்
பின்னவர்புபேந்திர படேல்
தொகுதிராஜ்கோட் மேற்கு
சட்டமன்ற உறுப்பினர் Member
for ராஜ்கோட் மேற்கு
பதவியில் உள்ளார்
பதவியில்
19 அக்டோபர் 2014
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை, குஜராத் மாநிலத்தில் இருந்து
பதவியில்
2006–2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 ஆகத்து 1956 (1956-08-02) (அகவை 67)[1]
யங்கோன், பர்மா[1]
தேசியம்இந்தியக் குடிமகன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அஞ்சலி ருபானி
பிள்ளைகள்ஒரு மகன் ஒரு மகள்
பெற்றோர்ராம்னிகால், மாயாபென்
வாழிடம்ராஜ்கோட்
வேலைஅரசியல்வாதி
மந்திரி சபைகுஜராத் அரசு
உடைமைத்திரட்டுஅமைச்ர் - போக்குவரத்து, குடிநீர் வழங்கல், தொழிலாளர் நலத்துறை (நவம்பர் 2014 - ஆகத்து 2016)

துவக்கக்கால வாழ்க்கை

விஜய் ருபானி 1956 ஆகத்து 2 அன்று[3] பர்மாவின் ரங்கூனில் பணியா சமூகத்தில் பிறந்தவர். இவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர்.[4][5] பர்மாவில் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக இவர் குடும்பம் பர்மாவிலிருந்து 1960 இல் ராஜ்கோட்டிற்கு இடம் பெயர்ந்தது. இவர் தன் இளங்கலைப் பட்டத்தை தர்மேந்தர் சிங் கலைக்கல்லூரியில் முடித்து சவுராஷ்டிரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.[1][3][6][7]

வாழ்க்கை

இவர் மாணவப் பருவத்திலேயே அரசியலில் நுழைந்தார். 1971 ஆம் அப்போதைய பாரதிய ஜனதாவான ஜனசங்கத்தில் இந்தார். நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அறிவித்தபோது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 1987 ராஜ்கோட் நகராட்சிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 1996 ஆம் ராஜ்கோட்டிற்கு மேயர் ஆனார். 2006 இல் இவர் குஜராத்தின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக மோடியால் நியமிக்கப்பட்டார். 2006 முதல் 2011 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ஆனந்திபென் அமைச்சரவையில் 2015 நவம்பரில் அமைச்சரான ருபானி பதவியேற்ற ஐந்து மாதங்களில் குஜராத் மாநில பாஜக தலைவராக ஆனார்.

முதலமைச்சர் (2016-2021)

இவர் ஆனந்திபென் படேலுக்குப் பின் குஜராத்தின் முதலமைச்சராக 2016 ஆம் ஆண்டு 7 ஆம் திகதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9][10][11]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=விஜய்_ருபானி&oldid=3992482" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்