வீவா உலகக்கோப்பை

வீவா உலகக்கோப்பை (Viva World Cup) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்த திட்டமிடப்பட்டு நடாத்தப்படும், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான, புதிய கூட்டமைப்பு வாரியத்தினால் (Nouvelle Fédération-Board, NFB) ஒழுங்குபடுத்தப்பட்ட பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும். 2012 ஆம் ஆண்டு போட்டிகள் ஈராக்கிய குர்திஸ்தானில் சூன் 4 முதல் 9 வரை இடம்பெறுகின்றது. இப்போட்டிகளில் முதன் முதலாக தமிழீழ அணியும் பங்குபற்றுகின்றது.

வீவா உலகக்கோப்பை
ஓவியரின் கற்பனையில் நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணம்
தோற்றம்2006
மண்டலம்பன்னாடு (புதிய கூட்டமைப்பு வாரியம்)
தற்போதைய வாகையாளர் ஈராக்கிய குர்திஸ்தான்
அதிக முறை வென்ற அணி படானியா
(3 வெற்றிகள்)
இணையதளம்வீவா
2012 வீவா உலகக்கோப்பை

வரலாறு

ஏப்ரல் 2005 இல், புதிய கூட்டமைப்பு வாரியம் தனது முதலாவது வீவா உலகக்கோப்பை போட்டித்தொடரை வடக்கு சைப்பிரசில் நடத்துவதாக அறிவித்தது. சைப்பிரசு-துருக்கிய காற்பந்தாட்டக் கூட்டமைப்பின் (KTFF) 50 ஆண்டுகள் நிறைவையொட்டி வடக்கு சைப்பிரசு தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் போட்டியிடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 2005 இல் வடக்கு சைப்பிரசில் ஆட்சியேறிய புதிய அரசு, மற்ற நாடுகளூடன் சுமூகமான உறவைப் பேண முடிவெடுத்தது. வீவா போட்டித் தொடரில் எந்த நாடுகள் பங்குபற்றலாம், எவை பங்குபற்ற முடியாதென அது நிபந்தனைகளை விதித்ததாக புதிய கூட்டமைப்பு வாரியம் குற்றம் சாட்டியது. பதிலாக, நிதிக் கோரிக்கையில் வாரியம் நியாயமற்ற நிபந்தனைகளை விதித்ததாக வடக்கு சைப்பிரசு கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.[1] இதனையடுத்து முதலாவது வீவா உலகக்கோப்பைத் தொடரை ஒக்சித்தானியாவில் நடத்துவதற்கு வாரியம் தீர்மானித்தது. பதிலாக, சைப்பிரசு-துருக்கிய காற்பந்தாட்டக் கூட்டமைப்பு தனியாக வீவா உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவிருக்கும் அதே நாட்களில் "எல்ஃப் கோப்பை" என்ற போட்டியை நடத்தவிருப்பதாக அறிவித்தது. இத்தொடரில் வாரியத்தின் சில உறுப்பு நாடுகளும் பங்குபற்றுவதாக அறிவித்தன.

ஒக்சித்தானியா 2006

முதலாவது உலக்கோப்பை ஒக்சித்தானியாவில் 2006 நவம்பர் 19 முதல் 25 வரை நடைபெற்றது. நான்கு அணிகளே இத்தொடரில் போட்டியிட்டன. சாப்மி அணி இறுதிப் போட்டியில் மொனாக்கோ அணியை 21-1 என்ற கணக்கில் வென்று வீவா உலககோப்பையைக் கைப்பற்றியது.

போட்டி முடிவுகள்

வருடம்இடம்இறுதி3ம் இடத்துக்கான போட்டி
வெற்றியாளர்ஆட்டக்கணிப்பு2ம் இடம்3ம் இடம்ஆட்டக்கணிப்பு4ம் இடம்
2006
2006 வீவா உலகக்கோப்பை
 ஒக்சித்தானியா  சாப்மி21–1  மொனாகோ  ஒக்சித்தானியாஎளிய வெற்றி  தென் கமரூன்
2008
2008 வீவா உலகக்கோப்பை
 சாப்மி  படானியா2–0  அராமியன் சீரியாக்கு  சாப்மி3–1  ஈராக்கிய குர்திஸ்தான்
2009
2009 வீவா உலகக்கோப்பை
 படானியா  படானியா2–0  ஈராக்கிய குர்திஸ்தான்  சாப்மி4–4
(5 - 4) ps
 புரவன்சு
2010
2010 வீவா உலகக்கோப்பை
 கோசோ  படானியா1–0  ஈராக்கிய குர்திஸ்தான்  ஒக்சித்தானியா2–0  Two Sicilies
2012
2012 வீவா உலகக்கோப்பை
 ஈராக்கிய குர்திஸ்தான்  ஈராக்கிய குர்திஸ்தான்2–1  வடக்கு சைப்பிரசு  சான்சிபார்7–2  புரவன்சு

^ பயண அனுமதிச் சீட்டு பெற்றுக் கொள்ளுதலில் ஏற்பட்ட சிக்கலினால் பின்வாங்கியதால் எளிய வெற்றி கிடைத்தது.

வெற்றிக் கிண்ணம்

வீவா உலகக்கோப்பை வெற்றிக் கிண்ணம் பிரான்சிய சிற்பியான ஜெரால்ட் பிகால்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. முன்னாள் தென்னாபிரிக்க அரசுத் தலைவர் நெல்சன் மண்டேலாவை கௌரவப்படுத்தும் முகவாக நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணம் பெயர் மாற்றப்படவுள்ளது.[2]

வெற்றியாளர்கள்

  • 3  படானியா
  • 1  சாப்மி
  • 1  ஈராக்கிய குர்திஸ்தான்

பங்குபற்றும் நாடுகள்

அணி
2006

2008

2009

2010

2012
வருடம்
 அராமியன் சீரியாக்கு2ம்1
 தார்பூர்9ம்1
 கோசோ6ம்5ம்2
 ஈராக்கிய குர்திஸ்தான்4ம்2ம்2ம்1ம்4
 மொனாகோ2ம்1
 வடக்கு சைப்பிரசு2ம்1
 ஒக்சித்தானியா3ம்5ம்3ம்5ம்4
 படானியா1ம்1ம்1ம்3
 புரவன்ஸ்5ம்4ம்6ம்4ம்4
 இரேத்சியா8ம்1
 சாப்மி1ம்3ம்3ம்3
 தென் கமரூன்4ம்1
 தமிழீழம்7ம்1
 இரு சிசிலிக்கள்4ம்1
 மேற்கு சகாரா6ம்1
 சான்சிபார்3ம்1
Total45669
Legend
  • 1ம் – வெற்றியாளர்
  • 2ம் – 2ம் இடம்
  • 3ம் – 3ம் இடம்
  • 4ம் – 4ம் இடம்
  •     — இடம்

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வீவா_உலகக்கோப்பை&oldid=3766063" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்