ஈராக்கிய குர்திஸ்தான்

ஈராக்கிய குர்திஸ்தான் (Iraqi Kurdistan) அல்லது குர்திஸ்தான் பிராந்தியம் (Kurdistan Region, குர்து: هه‌رێمی کوردستان, ஹெரேமி குர்திஸ்தான்), என்பது ஈராக்கின் ஒரு தன்னாட்சிப் பகுதியாகும்.[4] இதன் எல்லைகளாக கிழக்கே ஈரான், வடக்கே துருக்கி, மேற்கே சிரியா, தெற்கே ஈராக்கின் ஏனைய பகுதிகள் ஆகியன அமைந்துள்ளன. இப்பிராந்தியத்தின் தலைநகர் அர்பில். குர்திஸ்தான் பிராந்திய அரசு இதனை அதிகாரபூர்வமாக நிருவகித்து வருகிறது.

ஈராக்கிய குர்திஸ்தான்
Iraqi Kurdistan
Herêmî Kurdistan
கொடி of ஈராக்கிய குர்திஸ்தானின்
கொடி
சின்னம் of ஈராக்கிய குர்திஸ்தானின்
சின்னம்
நாட்டுப்பண்: Ey Reqîb
(தமிழ்: "ஓ, எதிரி")
ஈராக்கில் ஈராக்கிய குர்திஸ்தானின் (கருநீலம்) அமைவிடம்
ஈராக்கில் ஈராக்கிய குர்திஸ்தானின் (கருநீலம்) அமைவிடம்
தலைநகரம்அர்பில்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)குருதியம், அரபு[1]
வேறு மொழிகள்நியோ-அரமாய மொழிகள்
மக்கள்குர்து,[2]
அரசாங்கம்நாடாளுமன்ற முறை
• அரசுத்தலைவர்
மசூத் பர்சானி
• பிரதமர்
நெச்சிர்வன் பர்சானி
தன்னாட்சிப் பகுதி 
ஈராக்கிய குர்திஸ்தான்
• தன்னாட்சிக்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது
மார்ச் 11, 1970
• நிகழ்வுநிலை விடுதலை பெற்றது
அக்டோபர், 1991
• குர்திஸ்தான் பிராந்திய அரசு (குபிஅ) உருவாக்கம்
சூலை 4, 1992
• குபிஅ இன் தன்னாட்சி அதிகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சனவரி 30, 2005
பரப்பு
• மொத்தம்
40,643 km2 (15,692 sq mi)
மக்கள் தொகை
• 2010 மதிப்பிடு
4,690,939[3]
நாணயம்ஈராக்கிய தினார் (IQD)
நேர வலயம்UTC +3
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+964
இணையக் குறி.iq

பல ஆண்டுகள் போரின் பின்னர் 1970 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் குருதிய எதிர்க்கட்சிகளுக்கும் ஈராக்கிய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து குர்திஸ்தான் பிராந்தியம் உருவாக்கப்பட்டது. 1980களில் இடம்பெற்ற ஈரான் – ஈராக் போர், ஈராக்கிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அன்ஃபால் இனப்படுகொலைகள் போன்றவை இப்பிராந்திய மக்களையும் இதன் இயற்கையையும் மிகவும் பாதித்தது. சதாம் உசேனுக்கு எதிரான 1991 மக்கள் எழுச்சி நடத்ததை அடுத்து பெரும்பாலான குருதியர்கள் அண்டை நாடுகளான ஈரான், மற்றும் துருக்கியில் புகலிடத்திற்காக இடம்பெயர்ந்தனர். 1991 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வளைகுடாப் போரை அடுத்து குர்திய அகதிகள் மீண்டும் நாட்டுக்குள் திரும்பி வருவதற்காக வடக்கே வான்பரப்பிற்குத் தடை விதிக்கப்பட்டது. குர்தியர்கள் அரசுப் படையினருக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டு வந்ததால், 1991 அக்டோபரில் ஈராக்கிய குர்திஸ்தான் என்று அப்பிராந்தியத்தில் நிகழ்வுநிலை அரசு அமைக்க வழிவகுத்தது. ஆனாலும் குருதியர்களின் முக்கிய இரு அரசியல் கட்சிகளும் தனிநாட்டை அறிவிக்கவில்லை, மாறாக ஈராக்கின் ஒரு பகுதியாகவே அது பார்க்கப்பட்டது. ஈராக் மீதான ஆக்கிரமிப்பு, 2003, மற்றும் அதன் பின்னரான அரசியல் நிகழ்வுகளை அடுத்து 2005 ஆம் ஆண்டில் ஈராக்கில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி ஈராக்கிய குர்திஸ்தான் ஈராக்கின் நடுவண் ஆட்சிக்குட்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்புள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டது. அரபு மொழியும், குருதீசிய மொழியும் ஈராக்கின் இணைந்த ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட்டன. ஈராக்கிய குர்திஸ்தானின் பிராந்திய நாடாளுமன்றத்தில் 111 உறுப்பினர்கள் உள்ளனர்.[5]


இவற்றையும் பார்க்கவும்

குர்திசுத்தான்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை