சாப்மி

சாப்மி (Sápmi) என்பது சாமி மக்களின் பாரம்பரியமான பிரதேசம் ஆகும். இப்பிரதேசம் வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது பெனோஸ்காண்டியாவின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியது. இப்பிரதேசம் நோர்வே, சுவீடன், பின்லாந்து, மற்றும் உருசியா ஆகிய நான்கு நாடுகளின் பகுதிகளில் அமைந்துள்ளது.[1] நோர்வேஜிய, சுவீடிய மொழியில் இது "சேம்லாந்து" (Sameland) என அழைக்கப்படுகிறது.

சாப்மி
Sápmi
BorderNorwaySwedenFinlandRussia

ஐரோப்பாவில் சாப்மி
நாட்டுப்பண்சாமி சோகா லாவில்லா
தேசிய நாள்பெப்ரவரி 6 (சாமி தேசிய நாள்)
மொழிகள்சாமி மொழிகள், நோர்வே மொழி, சுவீடியம், பின்னியம், மியான்கீலி, உருசியம்
பரப்பளவுஅண். 388,350 கிமீ2; (150,000 சது.மைல்)
மக்கள்தொகைஅண். 2,000,000 மொத்தம்

* = சிறுபான்மையினர் அடங்கலாக.

விடுதலைஇல்லை¹
நேர வலயம்ஒசநே +1 முதல் +3
¹ நோர்வே, சுவீடன், பின்லாந்து, உருசியா ஆகிய நாடுகளின் பகுதி.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, மற்றும் உலகமயமாக்கலின் அதிகரிப்பு ஆகிய காரணிகளால் நாடுகளுக்கிடையேயான எல்லைகளுக்கு முக்கியத்துவம் குறைந்து, எல்லை-கடந்த கூட்டுறவு சாமி பழங்குடி மக்களிடையேயும், ஏனையோரிடையேயும் முக்கியத்துவம் பெற்றது. சாப்மி பிரதேசத்தில் உருசியர்களும், நோர்வேஜியர்களும் அதிகம் வாழ்கின்றனர். சாமி பழங்குடி மக்கள் 5% மட்டுமே உள்ளனர்.[2] எந்த ஒரு அரசியல் கட்சியும் இங்கு பிரிவினை கேட்கவில்லை ஆயினும், அங்குள்ள பழங்குடியினருக்கு கூடுதலான சுயாட்சி வழங்குமாறு பல குழுக்கள் கேட்டு வருகின்றன.

விளையாட்டு

இப்பிரதேசத்திற்கென தனியே ஒரு கால்பந்து அணி உண்டு. சாப்மி கால்பந்து அணி கொனிஃபா எனப்படும் சுயாதீன காற்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமை வகிக்கின்றது. 2014 கொனிஃபா உலகக்கிண்ணப் போட்டியை நடத்தியது. சாப்மி கால்பந்து அணி 2006 வீவா உலகக்கோப்பையை வென்றது. 2008 வீவா உலககோப்பைப் போட்டியை நடத்தியது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=சாப்மி&oldid=3607261" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை