2024 இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
| |||||||||||||||||
பதிவு செய்தோர் | 204,421,612 ( 6.04%) | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 82.39% ( 0.42pp) | ||||||||||||||||
| |||||||||||||||||
2024 தேர்தல் வரைபடம் | |||||||||||||||||
|
2024 இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2024 Indonesian presidential election), இந்தோனேசியா நாட்டின் 2024 - 2029 பதவிக் காலத்திற்கான குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவரை வாக்காளர்களள் நேரடித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்தல் 14 பிப்ரவரி 2024 (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. [1]இத்தேர்தலை இந்தோனேசியாவின் தேர்தல் ஆணையம் தலைமையில் நடத்தப்பட்டது. இந்தோனேசியா அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதவி வகித்த ஜோக்கோ விடோடோ இத்தேர்தலில் போட்டியிட முடியாது.
குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல், 2024 இந்தோனேசிய பொதுத் தேர்தலுடன் சேர்த்து இந்தோனேசியா முழுவதும் 14 பிப்ரவரி 2024 அன்று நடைபெற்றது. பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியா நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்று கூட்டணிக் கட்சிகளின் 3 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். அவர்கள் வருமாறு: பிரபோவோ சுபியான்தோ ( (Prabowo Subianto), கஞ்சர் பிரனோவோ (Ganjar Pranowo) மற்றும் அனீஸ் பஸ்வேதன் (Anies Baswedan)[2]
முஹைமின் இஸ்கந்தர், மஹ்ஃபுட் எம்.டி., மற்றும் ஜிப்ரான் ரகாபுமிங் ராகா ஆகியோர் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
நாட்கள் | நிகழ்வுகள் |
---|---|
29 சூலை 2022 – 14 டிசம்பர் 2022 | வாக்காளர் பதிவு, சரிபார்த்தல் மற்றும் வாக்குச் சாவடிகளை அறிவித்தல் |
14 அக்டோபர் 2022 – 9 பிப்ரவரி 2023 | போட்டியிடும் இடங்கள் & தொகுதிகள் வரையறை செய்தல் |
19 – 25 அக்டோபர் 2023 | குடியரசுத் தலைவர் & துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் |
28 நவம்பர் 2023 – 10 பிப்ரவரி 2024 | தேர்தல் பிரச்சாரக் காலம் |
11 – 13 பிப்ரவரி 2024 | அமைதிக்கான நாட்கள் |
14 பிப்ரவரி 2024 | வாக்குப் பதிவு நாள் |
14 – 15 பிப்ரவரி 2024 | வாக்குகள் எண்ணும் நாள் |
15 பிப்ரவரி 2024 – 20 மார்ச் 2024 | வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் மறுபரிசீலனை |
20 அக்டோபர் 2024 | தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றல் |
குடியரசுத் தலைவர் தேர்தலில் இழுபறி ஏற்படின் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும்[3]
நாட்கள் | நிகழ்வுகள் |
---|---|
2 சூன் – 22 சூன் 2024 | குடியரசுத் தலைவர் & துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் பிரச்சாரம் |
23 சூன் – 25 சூன் 2024 | தேர்தல் பிரச்சாரம் அமைதிக் காலம் |
26 சூன் 2024 | வாக்கு பதிவு நாள் |
26 – 27 சூன் 2024 | வாக்கு எண்ணிக்கை |
27 சூன் – 20 சூலை 2024 | வாக்கு எண்ணிக்கை முடிவுகளின் மறுபரிசீலனை |
|
வேட்பாளர் | Running mate | கட்சி | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
பிரபோவோ சுபியாந்தோ | Gibran Rakabuming (Ind.) | Gerindra Party | 9,62,14,691 | 58.59 | |
Anies Baswedan | Muhaimin Iskandar (PKB) | Independent | 4,09,71,906 | 24.95 | |
Ganjar Pranowo | Mahfud MD (Ind.) | Indonesian Democratic Party of Struggle | 2,70,40,878 | 16.47 | |
மொத்தம் | 16,42,27,475 | 100.00 | |||
செல்லுபடியான வாக்குகள் | 16,42,27,475 | 97.51 | |||
செல்லாத/வெற்று வாக்குகள் | 41,94,536 | 2.49 | |||
மொத்த வாக்குகள் | 16,84,22,011 | 100.00 | |||
பதிவான வாக்குகள்/வருகை | 20,44,21,612 | 82.39 | |||
மூலம்: KPU |