உள்ளடக்கத்துக்குச் செல்

கர்ப்ப உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ப்பம்
தேவநாகரிगर्भ
உபநிடத வகைசாமான்யம், உடலியல்
தொடர்பான வேதம்யசுர் வேதம்,[1]
அதர்வண வேதம்[2]
பாடல்களின் எண்ணிக்கைஅறியப்படவில்லை, சில கையெழுத்துப் பிரதிகள் முழுமையடையவில்லை
அடிப்படைத் தத்துவம்வேதாந்தம் [2]

கர்ப்ப உபநிடதம் (Garbha Upanishad) [3] ), அல்லது கர்போபநிடதம் ( Garbhopaniṣad ) என்பது சிறிய உபநிடதங்களில் ஒன்றாகும். இது 108 இந்து உபநிடத நூல்களின் நவீன தொகுப்பில் 17-வது இடத்தில் உள்ளது. சமசுகிருதத்தில் எழுதப்பட்ட இதை சில அறிஞர்கள் யசுர்வேதத்துடன் தொடர்புடையது என்றும்[1]பிறர் அதர்வண வேதத்துடன் தொடர்புடையது என்றும் கூறுகின்றனர்.[2] இது 35 சாமான்ய (பொது) உபநிடதங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.[4] உபநிடதத்தின் கடைசி வசனம் பிப்பலாத முனிவருக்கு உரையைக் காணிக்கையாக்குகிறது. ஆனால் உரையின் காலவரிசை மற்றும் ஆசிரியர் பற்றி தெளிவில்லை. மேலும் எஞ்சியிருக்கும் கையெழுத்துப் பிரதிகள் சேதமடைந்துள்ளன. ஒன்றுக்கொன்று பொருந்தாதவை மற்றும் முழுமையற்றவையாக இருக்கின்றன. [5] ஜெர்மனியைச் சேர்ந்த இந்தியவியலாளர் பால் தியூசென் போன்ற பலரும் "உடலியல் அல்லது மருத்துவம் பற்றிய கையேடு" என்கின்றனர். [3]

மனித வாழ்க்கையின் கரு முதல் வயதுவந்த நிலை வரை மனித உடற்கூறியல் தொடர்பான ஒப்பீட்டு அளவைக் கணக்கிடுவதற்கும் வழங்குவதற்கும் இது குறிப்பிடத்தக்கது. [6][7] மேலும், மனித உடல் என்றால் என்ன?,[8][9] மனித கரு எவ்வாறு உருவாகிறது?,[10] [11][7] கரு எவ்வாறு உருவாகிறது?,[9][12] கருவுக்கு என்ன தெரியும்?,[11][13]கர்ப்பத்தில் கரு எவ்வாறு கற்றுக்கொள்கிறது?,[14] பிறப்புக்குப் பிறகான வளர்ச்சி[15]என்பதைப் பற்றியெல்லாம் பேசுகிறது.

சொற்பிறப்பியல்

கர்ப்பம் என்ற வார்த்தையின் அர்த்தம் "கருப்பை" தொடர்பானது.[16]

கையெழுத்துப் பிரதிகள்

எஞ்சியிருக்கும் கையெழுத்துப் பிரதிகள் முழுமையடையாமல் காணப்படுகின்றனர். பெரும்பாலான வாசகங்கள் தொலைந்துவிட்டன அல்லது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் கிடைத்த கையெழுத்துப் பிரதிகளும் சீரற்றதாக உள்ளது. [7] ஒரு அத்தியாயத்தில் நான்கு உரைநடைப் பகுதிகளைக் கொண்ட கொல்கத்தா கையெழுத்துப் பிரதி மிகவும் ஆய்வு செய்யப்பட்ட பதிப்பாகும். [7] [11]

சான்றுகள்

உசாத்துணை

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=கர்ப்ப_உபநிடதம்&oldid=3600466" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்