தாந்திரீகம்

தாந்திரீகம் எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் இந்தியா மற்றும் திபெத் பகுதிகளில் சாக்த சமயத்தவர்கள்[1][2], வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர்[3]மற்றும் சுவேதாம்பர சமண சமயத்தினர் கடைப்பிடிக்கின்றனர்.

தாந்திரிகக் கலை (மேல் இடமிருந்து, கடிகாரச் சுற்றுப்படி): இந்து தாந்திரிக தேவதை, பௌத்த தாந்திரிக தேவதை, சமண தாந்திரிக ஓவியம், குண்டலினி சக்கரங்கள், 11-ஆம் நூற்றாண்டு தாந்திரிக இயந்திரம்
ஒன்பது முக்கோணங்களில் 43 சிறிய முக்கோணங்கள் கொண்ட ஸ்ரீயந்திரம் எனப்படும் ஸ்ரீசக்கரம்

இந்து சமயத்தில் தாந்த்திரீக முறையில் வழிபட மந்திரங்கள் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த தாந்திரீக மந்திரங்களில் மற்ற சமயத்தவர்களின் மந்திரங்களைவிட இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. அவை ”பீஜ மந்திரம்” (விதை போன்றது) என்றும் ”சக்தி மந்திரம்” என்றும் கூறப்படும். பீஜ மந்திரம் ஒரே ஓர் அசை மட்டும் கொண்ட சிறப்பான ஆன்மீக சக்தி கொண்டது. வெவ்வேறு வகையான கடவுளைக் குறிக்க வெவ்வேறு வகையான பீஜ மந்திரங்கள் உண்டு. தந்திர மார்க்கத்தில் ஒவ்வொரு மந்திரமுமே ஒர் பீஜ மந்திரத்துடன்தான் தொடங்கும்.

பீஜ மந்திரத்துடன் தொடர்புடைய மந்திரங்களே அதிக சக்தி உடையதாக கருதப்படுகிறது. ஒரு குருவின் மூலம் பெறப்பட்ட மந்திரத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதால் இறைக்காட்சி கிட்டுவது எளிதாகும். அத்தோடு இத்தகைய மந்திர உச்சரிப்புக்களோடு இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள்களையும் இறைவன் உடனேயே ஏற்றுக் கொண்டுவிடுவதாகவும் நம்பப்படுகிறது. யந்திரங்கள்[4][5]தாந்திரீக வழிபாட்டோடு தொடர்புடையவை. அவை புனிதம் மிக்கதும் யோக சக்தி வாய்ந்தது. சில யந்திரங்கள் கடவுளின் அடையாளமாகக் குறிக்கப்பட்டு வழிபடப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஸ்ரீசக்கரம் (தேவி யந்திரம்).

மேற்கோள்கள்

நூல் உதவி

  • இந்து மதத்தின் மையக் கருத்து, நூலாசிரியர், சுவாமி பாஸ்கரானந்தர், சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியீடு.

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாந்திரீகம்&oldid=3913643" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை