அசாய் பனை

அசாய் பனை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத:
ஒருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Arecales
குடும்பம்:
Arecaceae
பேரினம்:
Euterpe (genus)
இனம்:
E. oleracea
இருசொற் பெயரீடு
Euterpe oleracea
Mart.
Euterpe oleracea

அசாய் பனை (açaí palm) () அல்லது அச்சாய் பனைஎன்பது ஈட்டர்பே ஒலெராசியா குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். பழத்திற்காகவும் மேன்மையான நுங்குக்காவும் பயிரிடப்படும் ஈட்டர்பே பேரினத்தைச் சேர்ந்த பனை மர இனமாகும். 'அழுகின்ற அல்லது தண்ணீர் வெளியேற்றும் பழம்' என்று பொருள்படும் துபியன் வார்த்தையான இவாசா'ய் யின் (ïwasa'i) ஐரோப்பியத் தழுவலிலிருந்து இப்பெயர் வந்ததாகும். சமீப ஆண்டுகளில் அசாய்ய் பழத்துக்கான உலகளாவிய தேவை விரிவடைந்து வருகிறது. அந்த நோக்கத்தை முதன்மையாகக் கொண்டே தற்போது அசாய்ய் பனை பயிரிடப்படுகிறது. இதுனுடன் நெருங்கிய தொடர்புடைய இனமான ஈட்டர்பே எடுலிஸ் (Euterpe edulis) (ஜுகாரா) தற்போது நுங்கிற்காகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

இதன் எட்டு இனங்கள் பெலைஸிலிருந்து (Belize) தெற்கு நோக்கிப் பிரேசில் மற்றும் பெரு வரையான மத்திய மற்றும் தென் அமெரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்டவை. குறிப்பாக இவை சதுப்பு நிலங்கள் மற்றும் வெள்ளப் பெருக்குச் சமவெளிகளில் வளர்கின்றன. அசாய்ப் பனைகள் 3 மீட்டர்கள் நீளம் வரையான இறகு வடிவ இலைகளுடன், 15 முதல் 30 மீட்டர்கள் வளரக்கூடிய உயரமான ஒல்லி பனைகள் ஆகும்.

அறுவடை மற்றும் பயன்கள்

பழம்

இதன் பழம் சுமார் ஒரு அங்குல (25 மி.மீ.) வட்டச் சுற்றளவு கொண்டச் சிறிய, கோளமான, கரு ஊதா நிற உள்ளோட்டுச் சதைக்கனியாக இருக்கிறது. இது தோற்றத்தில் திராட்சையைப் போல் இருந்தாலும் குறைவான கூழுடன் அதைவிடச் சிறியதாக இருக்கிறது. இதில் ஒரு பிரிவு கூட்டுத்திரளில் 500 முதல் 900 பழங்கள் உருவாகி இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இரு முறைகள் காய்க்கின்றன. இதன் பழம் 0.25 முதல் 0.40 வரையிலான (7 முதல் 10 மி.மீ.) அங்குல விட்டமுடைய ஒற்றைப் பெரிய விதையினைக் கொண்டிருக்கும். பழுத்த பழங்களின் வெளிக்கனியமானது அசாயின் வகை மற்றும் அதன் முதிர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்து ஆழ்ந்த ஊதா நிறத்திலோ அல்லது பச்சை நிறத்திலோ இருக்கும். இடைக்கனியமானது ஒரு மி.மீ. அல்லது அதற்கும் குறைவான சீரான தடிமனுடன் கூழ் நிறைந்ததாகவும் மெல்லியதாகவும் இருக்கும். இது பருமனான மற்றும் கடினமான உட்கனியத்தைச் சூழ்ந்திருக்கும். உட்கனியமானது மிகச்சிறிய முளையத்தையும், தாராளமான வித்தக விளையத்தையும் கொண்ட ஒரு விதையைக் கொண்டிருக்கும். அதன் விதையானது பழத்தின் சுமார் 80% இடத்தை ஆக்கிரமிக்கிறது (ஸ்காவ்ஸ், 2006சி).

பிரேசிலில் அசாய் பனைத் தோப்பு
அசாய் பனை
அசாய் கூழ் பரிமாறுதல்
பாரா பிரேசிலில் பெலம் பகுதியில் உள்ள சந்தையில் விதைகளிலிருந்து அசாய் கூழ் பிரித்தெடுக்கப்படுகிறது

சதைப் பற்றுள்ள சிறு கனிகள் உணவுக்காக அறுவடை செய்யப்படுகின்றன. பிரேசிலிய அமேசானில் உள்ள மூன்று தலைமுறையைச் சேர்ந்த காபோக்லோ மக்களிடம் மேற்கொண்ட ஆய்வில், அசாய்ப் பனை மிகவும் முக்கியமானத் தாவர இனமாக விவரிக்கப்பட்டது. ஏனெனில் இதன் பழம் அவர்கள் உட்கொள்ளும் உணவின் மொத்த நிறையில் 42% வரை பயன்படுத்தப்படுகின்ற முக்கிய உணவுப் பொருளாகும்.[1]

பிரேசிலின் வட மாநிலமான பாராவில் அசாய்க் கூழானது கிழங்குகளுடன் சேர்த்துக் "கியுயியாஸ்" என்று அழைக்கப்படும் குடுவைகளில் பாரம்பரியமாகப் பரிமாறப்படுகின்றன. மேலும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்து உப்பு சேர்த்தோ அல்லது சர்க்கரை சேர்த்தோ உண்ணப்படுகிறது (சர்க்கரை, ராபடுரா மற்றும் தேன் போன்றவை அதில் கலக்கப்படுவதாக அறியப்படுகிறது).[2] அசாயானது தெற்கு பிரேசிலில் மிகவும் பிரபலான ஒன்றாகும். அங்கு அது பெரும்பாலும் கிரானோலாவுடன் கலந்து அசாய் நா டிகெலா ("குடுவையில் அசாய்") என்ற பானமாக அருந்தப்படுகிறது.[3] பிரேசிலிலும் ஐஸ் கிரீமின் ஒரு சுவையாகவோ அல்லது பழச்சாறாகவோ அசாய் பரவலாக உள்ளெடுக்கப்படுகிறது[4]. அதன் பழச்சாறு சுவை சேர்க்கப்பட்ட மதுபானத்திலும் பயன்படுத்தப்படுகிறது.[5] 1990களில் அசாய்ப் பழச்சாறும் பிரித்தெடுப்புகளும் பல்வேறு பழச்சாறுக் கலவைகள், மிருதுவாக்கிகள், சோடாக்கள் மற்றும் பிற பானங்களில் உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படுகின்றன.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் அகாயின் புகழானது "புரதம் நிறைந்த ஊட்டச்சத்து பிரேசிலியன் காட்டு வாசிகளை இழக்கச்செய்தது. இவர்கள் பல தலைமுறைகளாக அதில் தங்கியிருந்தனர்" என 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ப்ளூம்பர்க் தெரிவித்தது.[6]

உணவு நிரப்பியாக

சமீபத்தில் அசாய் சிறு பழங்கள் உணவு நிரப்பியாகச் சந்தைப்படுத்தப்படுகின்றன. அசாய் சிறு பழப் பொருட்களை மாத்திரைகள், பழச்சாறு, மிருதுவாக்கிகள், உடனடி பானப் பொடிகள் மற்றும் முழுப்பழம் ஆகிய வடிவங்களில் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.

அசாயானது ஆற்றல் நிலைகளை அதிகரிக்கும், பாலியல் செயல்பாடுகளை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும், நச்சு நீக்கம் செய்யும், உயர் நார்ச்சத்து உடையது, சருமத் தோற்றத்தை மேம்படுத்தும், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும், தூக்கத்தை மேம்படுத்தும் மற்றும் கொழுப்பு நிலைகளைக் குறைக்கும் என்பன போன்ற விளம்பரங்களை இந்தப் பொருட்களைச் சந்தைப் படுத்துபவர்கள் வெளியிடுகின்றனர். "அசாய் பழச்சாறானது ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களின் நடுத்தர நிலைகளை மட்டுமே கொண்டுள்ளது—இது கான்கார்ட் திராட்சை, அவுரிநெல்லி மற்றும் கருப்பு செர்ரிப் பழச்சாறுகள் ஆகியவற்றைக் காட்டிலும் குறைவானது. ஆனால் குருதி நெல்லி, ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழச்சாறுகளைக் காட்டிலும் அதிகமானது" எனக் குவேக்வாட்ச் (Quackwatch) குறிப்பிட்டது.

மேலும் உணவுத்திட்ட ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களாகப் பாலிபினால்களின் விரிவாக்கம் உடல்நலத்தைச் சந்தேகத்திற்கு உரியதாக்கலாம். உயிரியல் ஆய்வுகளில் பாலிபினால்களில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் பங்கு இருப்பதற்கு எந்தவொரு நம்பத் தகுந்த ஆதாரங்களும் இல்லை.[7][8] ஆனால் மாறாக மிகச்சிறிய செறிவுகளிலேயே கலத்திலிருந்து கலத்துக்கான சமிக்ஞை, ஏற்பி உணர்திறன், அழற்சி விளைவிக்கின்ற நொதிச் செயல்பாடு அல்லது மரபணு கட்டுப்பாடு போன்றவற்றை அவை பாதிக்கலாம்.[8][9] குறிப்பாக அசாய் உள்ளெடுத்தலானது உடல் எடையைப் பாதிக்கிறது அல்லது உடல் எடைக் குறைவை ஊக்குவிக்கிறது என்பதற்கான அறிவியல் ரீதியான சான்றுகள் ஏதுமில்லை.[10]

வாஷிங்டன் டி.சியைச் சார்ந்த பொதுநலனுக்கான அறிவியல் மையத்தின் (Center for Science in the Public Interest) (CSPI) கூற்றுப்படி ஆயிரக்கணக்கான நுகர்வோர்கள் அசாய் சார்ந்த பொருட்களின் இலவச ஒத்திகைகளை ரத்து செய்தபோது அவர்களது கடன் அட்டைகளில் மீட்புத் தொகைகள் நின்றுவிடும் சிக்கலை எதிர்கொண்டனர்.[11][12] மேலும் சில வலைத்தளங்களும் கூட அசாய் சார்ந்த மோசடிகள் அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் மோசடிகளாக எச்சரிக்கை விடுத்துள்ளன.[10] நீரிழிவு மற்றும் மற்ற நீண்டகால உடல் நலக்குறைவுகளின் புறமாற்றல், ஆணுறுப்பின் அளவைப் பெரிதாக்குதல் மற்றும் பெண்கள்மீது ஆண்களின் பாலியல் வீரியத்தன்மையையும் பாலியல் ஈர்ப்புத்தன்மையையும் அதிகரித்தல் உள்ளிட்ட வெளிப்படையான தவறான பிரச்சாரங்களும் செய்யப்படுகின்றன.[13]

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தப் பிரச்சாரங்கள்குறித்து அறிவியல் ரீதியான கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் ஏதுமில்லை. எ.பி.சி நியூஸ் செய்தித் தொடர்பாளர் சூசன் டொனால்ட்சனின் (Susan Donaldson) கூற்றுப்படி இந்தப் பொருட்கள் (அமெரிக்காவில்) எஃப்.டி.எவினால் மதிப்பிடப்பட்டது அல்ல. மேலும் அவற்றின் பலாபலனும் கேள்விக்குரியதாக இருக்கிறது.[14] 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் த ஓபரா வின்ஃபிரே ஷோவுக்கான வழக்கறிஞர்கள், அடிக்கடி ஓபரா விருந்தினராகப் பங்கேற்கும் மருத்துவர் மெஹ்மட் ஓஸ் (Mehmet Oz) சில உற்பத்தியாளர்களின் பொருட்களை அல்லது அசாயை பொதுவான எடை இழப்புக்குக் காரணமாகக் கூறியதாக இணைப்பு உணவு உற்பத்தியாளர்களிடமிருந்து வந்த குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யத் தொடங்கியது.[14]

மற்ற பயன்பாடுகள்

இதன் சிறு பழங்களை உணவாக உட்கொள்ளல் அல்லது டெக்விலாவில் சுவைக்காகப் பயன்படுத்தப்படுவது தவிர அசாய் பனை மற்ற வணிகரீதியான பயன்பாடுகளையும் கொண்டிருக்கிறது. தொப்பிகள், பாய்கள், கூடைகள், துடைப்பங்கள் மற்றும் வீடுகளுக்கான கூரைகள் ஆகியவற்றுக்கான இதன் இலைகள் பயன்படுகின்றன. மேலும் அதன் தண்டுப் பகுதி கட்டடக் கட்டுமானங்களில் பூச்சிகளிலிருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.[15] மரத்தின் தண்டுப்பகுதிகள் கனிமங்கள் உருவாக்கும் செயல்பாட்டில் பயன்படுத்தப்படலாம்.[16]

அசாய் பழத்தில் 80% இடத்தைப் பிடித்திருக்கும் அதன் விதைகள் கால்நடைக்கான உணவாகவோ அல்லது தாவரங்களுக்கான கரிம மண்ணின் உட்பொருளாகவோ பயன்படுத்தப்படலாம். விதைப்பதற்கான விதைகள் புதிய பனை மரக் கையிருப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை சரியான தட்பவெப்பநிலையில் வளர ஆரம்பிப்பதற்கு சில மாதங்கள் தேவைப்படுகிறது[17]. இந்த விதைகள் பல்நிறைவுறா மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களின்[15][18][19] மூலங்களாக இருக்கின்றன.

ஊட்டச்சத்து உள்ளடக்கம்

உறைய வைத்து உலர்ந்த அசாய் பழக் கூழ் மற்றும் தோல் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொடியானது (ஓப்டி-அசாய், கெ2எ, இன்க்.) (100 கிராம் அளவுள்ள உலர்ந்த பொடிக்கு) 533.9 கலோரிகள், 52.2 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 8.1 கிராம் புரோட்டீன் மற்றும் 32.5 கிராம் கொழுப்பு ஆகியவற்றைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதில் உள்ள கார்போஹைட்ரேட் பகுதியில் 44.2 கிராம் அளவில் உணவுத்திட்ட நொதி இருக்கும்.[19] மேலும் அந்தப் பொடியில் (ஒவ்வொரு 100 கிராமுக்கும்) புறக்கணிக்கத் தக்க வைட்டமின் சி, 260 மிகி கால்சியம், 4.4 மிகி இரும்பு மற்றும் 1002 யு வைட்டமின் எ அத்துடன் ஆஸ்பார்டிக் அமிலம் மற்றும் குளூத்தமிக் அமிலம் ஆகியவையும் காணப்படுகின்றது. மொத்த உலர் எடையில் 7.59% அமினோ அமில உட்பொருள் இருக்கிறது.

அசாயில் உள்ள கொழுப்பு உட்பொருட்களாக ஒலீயிக் அமிலம் (மொத்த கொழுப்புகளில் 56.2%), பாமிற்றிக் அமிலம் (24.1%) மற்றும் லினோலியிக் அமிலம் (12.5%) ஆகியவை இருக்கின்றன.[19] மேலும் அகாய் பீட்டா சைடோஸ்டெராலையும் (மொத்த ஸ்டெரால்களில் 78 முதல் 91%) கொண்டிருக்கிறது.[19][20] அசாய் பழத்தில் உள்ள எண்ணெய் அறைகள் ப்ரோசினிடின் ஓலிகோமர்கள் மற்றும் வானிலிக் அமிலம், சிரிஞ்சிக் அமிலம், பி-ஹைட்ரோக்சிபென்சோயிக் அமிலம், ப்ரோடோகேட்டசூயிக் அமிலம் மற்றும் ஃபெருலிக் அமிலம் போன்ற பாலிபினால்களைக் கொண்டிருக்கின்றன. அதன் காரணமாகச் சேமித்து வைக்கும் சமயங்களில் அல்லது வெப்பத்தில் வைக்கப்பட்டிருக்கும்போது கணிசமாக அழுகிவிடும்.[21]

அகாய் மூலப்பொருட்களின் பாலிபினால்கள்

பதொனோரு வகையான உறைநிலைப் பழச்சாறுக் கூழ்களில் மேற்கொள்ளப்பட்ட வெளிச் சோதனை முறை ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட ஒப்பீட்டுப் பகுப்பாய்வில் அசாயானது மிதமான அளவில் பாலிபினால் உட்பொருள் மற்றும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் செறிவினைக் கொண்டிருந்தது. இது ஏஸ்ரோலா, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் திராட்சை ஆகியவற்றைக் காட்டிலும் குறைவாகும்.[22]

உறைந்த உலர்ந்த அசாய் பழக்கூழ் மற்றும் தோல் ஆகியவற்றில் உருவாக்கப்படும் பொடியில் அந்தோசயனின்கள் (3.19 மிகி/கி) காணப்படுகின்றன. எனினும் வெளிச்சோதனை முறை ஆய்வுகளில் இந்தப் பழத்தில் இருக்கும் ஒட்டுமொத்த ஆக்சிஜனேற்றத் தடுப்பான் அளவில் அந்தோசயனின்கள் சுமார் 10% மட்டுமே இருக்கின்றன.[23] அந்தப் பொடியானது ஹோமோஓரியண்டின், ஓரியண்டின், டேக்சிஃபோலின், டியாக்சிஹெக்ஸோஸ், ஐசோவிடெக்சின், ஸ்கோபாரின் உள்ளிட்ட பன்னிரண்டு ஃபிளாவொனாய்டு போன்ற சேர்மங்கள், அத்துடன் ப்ரொஅந்தோசியனிடின்ஸ் (12.89 மிகி/கி) மற்றும் குறை நிலைகளில் ரெஸ்வராட்ரோல் (1.1 μg/g) ஆகியவற்றையும் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.[19] உறைந்த உலர்ந்த அசாய் பொருள் (ஓப்டி-அசாய்) சார்ந்த ஒரு மற்றொரு மாறுபட்ட ஆய்வின் படி அவுரிநெல்லிகள் மற்றும் மற்ற ஆக்சிஜனேற்றத் தடுப்பான் நிறைந்த பழங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் இவை மிகவும் குறைவான நிலைகளில் அந்தோசியனின்கள், ப்ரொஅந்தோசியனடின்கள் மற்றும் பிற பாலிபினால்களைக் கொண்டிருக்கின்றன.[24]

வெவ்வேறு அசாய் வகைகளில் அவற்றின் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் திறனுக்காக மேற்கொள்ளப்பட்ட வெளிச் சோதனைமுறை ஆய்வில் வெள்ளை நிறத்தில் உள்ள வகையானது மாறுபட்ட ஆக்சிஜன் உறுப்புக்களில் எந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பான் நடவடிக்கையையும் வெளிப்படுத்தவில்லை. அதே சமயம் மிகவும் அதிகமாக வணிகரீதியாகப் பயன்படுத்தப்படும் ஊதா நிற வகையானது பெராக்சில் உறுப்புக்கள் மற்றும் குறைவான பரிமாணம் கொண்ட பெராக்சிநைட்ரேட் ஆகியவற்றில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் நடவடிக்கையை வெளிப்படுத்துகின்றன. ஆனால் ஹைட்ராக்சில் உறுப்புக்களில் குறைவான ஆக்சிஜனேற்றத் தடுப்பான் நடவடிக்கையை வெளிப்படுத்துகின்றன.[23]

உறைந்து உலர்ந்த அசாய் பொடியை வைத்து மேற்கொள்ளப்பட்ட வெளிச்சோதனை முறை ஆய்வில் சூப்பராக்சைடு (1614 அலகுகள்/கி) மற்றும் பெராக்சில் உறுப்புக்கள் (1027 μmol TE/g) ஆகியவற்றில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் நடவடிக்கையையும் பெராக்சிநைட்ரேட் மற்றும் ஹைட்ராக்சில் உறுப்புக்களில் மிதமான நடவடிக்கையையும் ஏற்படுத்தியது.[24] இந்தப் பொடியானது நியூட்ரோஃபில்களில் ஹைட்ரஜன் பெராக்சைடு தூண்டப்பட்ட ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பதாகத் தெரிகிறது. மேலும் வெளிச் சோதனை முறைகளில் லிப்போபாலிசாக்கரைடு தூண்டப்பட்ட இரத்த விழுங்கணுக்கள் மூலமாக உருவாக்கப்பட்ட நைட்ரிக் ஆக்சைடு மீது மெல்லிய தூண்டல் விளைவைக் கொண்டிருக்கிறது.[24] எனினும் இந்த முடிவுகள் வெளிச்சோதனை முறைகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவை உளவியல் ரீதியாகப் பொருத்தமானவையா என்பது இன்னும் அறியப்படவில்லை. மாறாக உயிரியல் ஆய்வுகளில் மிகவும் நுண்ணிய ஆக்சிஜனேற்றத் தடுப்பான் சாராதவைகளின் பங்குகள் நிகழ வாய்ப்புள்ளவையாகவே இருக்கின்றன.[8][9]

வெளிச் சோதனை முறையில் பெராக்சில் உறுப்புக்களின் மீது அசாய் விதைகளின் சாரங்கள் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் திறனைக் கொண்டிருக்கின்றன. அதே போன்று கூழில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் திறனானது பெராக்சிநைட்ரேட் மற்றும் ஹைட்ராக்சில் உறுப்புக்களில் உயர்வான ஆக்சிஜனேற்றத் தடுப்பான் திறனுடன் இருக்கிறது.[25]

அசாய் பழச்சாற்றில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் ஆற்றல்

அசாய் பழச்சாற்றின் குறிப்பிடப்படாத சதவீதங்கள் அடங்கிய மூன்று வணிக ரீதியாகக் கிடைக்கக்கூடிய பழச்சாற்றுக் கலவையைச் சிகப்பு ஒயின், தேநீர், ஆறு வகையான சுத்தமான பழச்சாறு மற்றும் மாதுளை பழச்சாறு ஆகியவற்றுடன் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் திறனறிவதற்காக வெளிச்சோதனை முறையில் சோதிக்கும்போது சராசரி ஆக்சிஜனேற்றத் தடுப்பான் திறன் மாதுளை பழச்சாறு, கான்கார்ட் திராட்சை பழச்சாறு, அவுரிநெல்லி பழச்சாறு மற்றும் சிகப்பு ஒயின் ஆகியவற்றைக் காட்டிலும் குறைவான தரநிலை உடையதாக இருந்தது. இந்தச் சராசரியானது கருப்பு செர்ரி அல்லது குருதிநெல்லி பழச்சாறு ஆகியவற்றிற்கு தோராயமாகச் சமமானதாகவும் ஆரஞ்சு பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு மற்றும் தேநீர் ஆகியவற்றைக் காட்டிலும் அதிகமாகவும் இருந்தது.[26]

12 ஆரோக்கியமான நோன்பிருக்கும் தன்னார்வளர்களில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் வணிக ரீதியான அசாய் பழச்சாறு பானம் அல்லது ஆப்பிள் சாஸ் உட்கொண்ட இரண்டு மணிநேரங்களில் இரத்த ஆக்சிஜனேற்றத் தடுப்பான் திறன் அதிகரிப்பது நிரூபிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பானின் காரணமாக உளவியல் ரீதியான விளைவுகள் ஏதேனும் ஏற்பட்டதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.[27] எதிர்வினை ஆக்சிஜன் இனங்களின் தலைமுறை அசாய் பழச்சாறு உட்கொண்டதன் காரணமாகக் குறிப்பிடத் தக்க அளவில் பாதிப்பை அடைந்திருக்கவில்லை.

அசாயானது அதன் ஆற்றல்மிக்க செறிவான பாலிபினால் உள்ளடக்கத்துக்காகக் குறிப்பிடத்தக்கதாக இருந்த போதும்[27] இந்தப் பழத்தின் அந்தோசியனின்கள் தாவரத்தின் இயற்கையானத் தடுப்பு இயங்கமைப்புகள்[28] மற்றும் வெளிச் சோதனை முறை ஆகியவற்றில் மட்டுமே இயைபான ஆக்சிஜனேற்றத் தடுப்புத் திறன் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.[29] அசாயின் பினாலிக் ஆக்சிஜனேற்றத் தடுப்பான் பண்புகள் பழத்தினை உட்கொண்ட பிறகு எதிர்பாராத வண்ணம் காப்பதன் காரணமாக இந்தப் பகுத்தறிதல் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக லினஸ் பாலிங் இன்ஸ்டிட்யூட்டின் (Linus Pauling Institute) பொருள் விளக்கத்தில் செரிமானத்தைத் தொடர்ந்து உணவுத்திட்ட அந்தோசியனின்கள் மற்றும் மற்ற ஃபிளாவனாய்டுகள் குறைவான அல்லது எந்த நேரடித் தொடர்பும் அற்ற ஆக்சிஜனேற்றத் தடுப்பான் உணவு மதிப்பைக் கொண்டிருக்கின்றன எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.[30][31] கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைக் குழாய் நிலைகளைப் போலல்லாமல் உயிரியல் ஆய்வுகளில் அந்தொசியனின்களின் நிலை அவை துரிதமாக வெளியேற்றப்படும் இரசாயன மாற்றமடைந்த உயிரினக் கழிவுகள் உருவாக்குவதற்காக ஏற்கனவே உட்கொள்ளப்பட்டவற்றில் பெரும்பாலானவற்றுடன் மோசமாக வினை புரிகின்றன (5%க்கும் குறைவாக) எனச் சுட்டிக்காட்டுகிறது.[32]

அசாய் போன்ற அந்தொசியனின் செறிந்த உணவுகள் உட்கொள்ளப்பட்ட பிறகு காணப்படும் இரத்தத்தின் ஆக்சிஜனேற்றத் தடுப்பானின் அதிகரிப்பு அந்தொசியனின்கள் அல்லது மற்ற பாலிபினால்களின் காரணமாக நேரடியாக ஏற்படுவது அல்ல. ஆனால் பாலிபினால் வளர்சிதை மாற்றத்திலிருந்து தருவிக்கப்பட்ட யூரிக் அமில நிலைகள் அதிகரிப்பின் முடிவுகளாகப் பெரும்பாலும் இருப்பதற்கு சாத்தியமிருக்கிறது. ஃப்ரேயின் (Frei) கூற்றுப்படி, "நாம் தற்போது உடலில் ஃபிளாவனாய்டுகளின் நடவடிக்கையைப் பின் தொடரலாம். மேலும் உடலானது அதனை வெளியிலிருந்து வந்த சேர்மமாகக் கருதி அதனை உடலிலிருந்து விடுவிக்க முயற்சி செய்யும் என்பது தெளிவு."[32]

இதர ஆய்வுகள்

உறைந்து உலர்ந்த அசாய் பொடி சைக்லோக்சிஜீனஸ் நொதிகளான COX-1 மற்றும் COX-2 மீது மிதமான நிறுத்துகின்ற விளைவுகளைக் கொண்டிருந்தது.[24] மேலும் அசாயிலிருந்து இரசாயன ரீதியாகப் பிரித்தெடுக்கப்பட்ட பாலிபினாலிக் செறிந்த பின்னங்கள் வெளிச் சோதனை முறையில் ஹெச்.எல்-60 (சோதனை வழி இரத்தப்புற்றுநோய்) செல்களின் பரவலைக் குறைப்பதாகக் கூறப்பட்டது.[33] வெளிச்சோதனை முறையில் பரவலுக்கு எதிரான விளைவுகள் அகாய் கூழ் எண்ணெயிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவைகளிலும் காணப்பட்டன.[34] உயர் கொழுப்பு நிறைந்த உணவு கொடுக்கப்பட்ட எலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் உலர்ந்த அசாய் கூழை சேர்க்கை உணவாகக் கொடுக்கப்பட்டபோது ஒட்டுமொத்த இரத்த நிலைகள், உயர் அடர்த்தியற்ற லிப்போப்புரதக் கொழுப்பு மற்றும் சூப்பராக்சைடு டிஸ்முடேஸ் நடவடிக்கை ஆகியவைக் குறைந்தது நிரூபணமானது.[35]

வாய் வழியாக உட்கொள்ளப்பட்ட அசாயானது இரையக குடலிய அமைப்பில் காந்தவிய உடனிசைவு இயல்நிலை வரைவுக்கான மாறுபடு முகவராக இருப்பதாகச் சோதனையில் அறியப்பட்டது.[36] அதன் அந்தோசியனின்கள் இயல்பான உணவு நிறமிடும் முகவராக நிலைப்புத்தன்மைக்கான பண்புகளையும் கொண்டிருக்கின்றன.[37]

கூடுதல் வாசிப்பு

  • Craft P, Riffle RL (2003). An encyclopedia of cultivated palms. Portland, Oregon, United States: Timber Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88192-558-6.

குறிப்புதவிகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அசாய்_பனை&oldid=3937481" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை