நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு சட்டப் பேரவை பாஜக உறுப்பினர்

நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியைச்சேர்ந்தவர். இவர் 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மேலும், 2011 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 சட்டமன்றத் தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் அ. இல சு. இலட்சுமணன் என்பவரிடம் 601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2011 சட்டமன்ற தேர்தலில் நயினார் நாகேந்திரன் இதே தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக போட்டியிட்ட அ. இல சு. இலட்சுமணன் என்பவரை 3800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.[2] இந்தத் தேர்தல்களில் இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டார். நயினார் நாகேந்திரன் 2001-2006 வரை நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.[சான்று தேவை] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த இவர், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாரளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பினை இழந்தார்.[3][4] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து, பாசக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[5]

நயினார் நாகேந்திரன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
தொகுதிதிருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1960-10-16)16 அக்டோபர் 1960
பணகுடி, தண்டையார்குளம், திருநெல்வேலி
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சந்திரா
பிள்ளைகள்நயினார் பாலாஜி
விஜய் சண்முக நயினார்
காயத்ரி

மேற்கோள்கள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை